Sunday, June 27, 2010

ஸ்டீம்ட் சிக்கன் / Steamed Chicken

அரபு நாட்டில் சிக்கன் தான் மெயின் ஃபுட் என்றே சொல்லலாம்.பலமுறையாக அதனை ருசி பார்ப்பதில் அவர்கள் கில்லாடிகள் .இப்படி ஸ்டீம் பண்ணி சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியம் ,டயட் இருக்கிறவங்க இப்படி செய்து சாப்பிடலாம்.ருசி செய்து பார்த்து விட்டு சொல்லுங்க,அருமையாக இருக்கும்,இப்பெல்லாம் எங்க வீட்டில் அடிக்கடி இது உண்டு.
தேவையான பொருட்கள் ;
முழுக்கோழி - 1000 கிராம்
தயிர்- 2 டேபிள்ஸ்பூன்
சிக்கன் டிக்கா மசாலா - 2 டீஸ்பூன்
(அல்லது விருப்பமான மசாலா.)
பப்ரிக்கா பவுடர் - அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4 நபர்.

செய்முறை:

சிக்கனை குவார்டர் பீஸாக கட் செய்து கொள்ளவும். அதனுடன் தயிர்,உப்பு,சிக்கன் டிக்கா அல்லது பிடித்தமான மசாலா ,பப்ரிக்கா பவுடர் ,உப்பு சேர்க்கவும்.

சிக்கனுடன் மசாலா கலந்து அதனை குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுக்க வேண்டியது தான்.

பின்பு அதனை அடியில் இருக்கும் பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் சிக்கன் துண்டுகள் முழுவதும் வைத்து 20 நிமிடம் ஆவியில் வெந்து எடுக்கவும்.

வெந்த பின்பு சிக்கன் இப்படி காணப்படும்.

இப்ப சுவையான ஸ்டீம்ட் சிக்கன் ரெடி.திறந்து சூடாக பரிமாறவேண்டியது தான்.
சாலட்,ரொட்டி,குபூஸ்,ரைஸ் உடன் பரிமாறலாம்.
அட உங்களுக்கு தான்,எடுத்துக்கோங்க.உடன் பரிமாறி இருப்பது ஜலீயின் ரைஸ்குக்கர் பகாறா கானா தான்.
குறிப்பு : ஸ்டீமர் இல்லாட்டியும் இட்லி பாத்திரத்தில் கூட சிக்கனை இப்படி அவித்து எடுக்கலாம்.


-ஆசியாஉமர்.


28 comments:

எம் அப்துல் காதர் said...

அட நான் தான் 1-ஆ

//டயட் இருக்கிறவங்க இப்படி செய்து சாப்பிடலாம். இப்பெல்லாம் எங்க வீட்டில் அடிக்கடி இது உண்டு//.

ரைட்டுங்க. நீங்க சொன்னா சரியதானிருக்கும்..

jagadeesh said...

சூப்பரா இருக்கு கா!

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு ஆசியா.

இட்லி சட்டி பார்க்கவே நல்ல இருக்கு.

என் பகறா கானா செய்து ருசித்தமைக்குமிக்க்க நன்றி.

எம் அப்துல் காதர் said...

//அட உங்களுக்கு தான்,எடுத்துக்கோங்க.//

என்ன இது ஆம்பளைங்கள எல்லாம் ஒரு மட்டு மறியாதி இல்லாம "அட" போட்டு எழுதிறீங்க. ஹி ஹி..

அடுத்து அடை சுடுவதைப் பற்றி ஒரு இடுகை போட்டுடுங்க எல்லாம் சரியாகிடும் வர்ர்ட்டா..

நாடோடி said...

சிக்க‌ன் பார்க்க‌வே சூப்ப‌ரா இருக்கு.... செய்து பார்த்திட‌ வேண்டிய‌து தான்..

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜெகதீஸ் .

asiya omar said...

அப்துல் காதர் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அடடா,அட என்பது மரியாதையின்மையாக இருக்கிறதா?இனிமேல் பார்த்து எழுதிட்டாப்போச்சு.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

ஸ்டீபன் (நாடோடி)உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.ஃபாலோவர்ஸ் லிஸ்டில் பால் ராஜ்ன்னு இருக்கு.உங்கள் முழுப்பெயர் ஸ்டீபன் பால் ராஜ் ஆக இருக்குமோ !

ஸாதிகா said...

ஹ்ம்ம்.. நேற்றுத்தான் புது இட்லி குக்கர் வாங்கி வந்தேன்.ஆனால் அழகான உங்கள் இட்லி குக்கர் இப்பதானே பார்க்கிறேன்.இட்லி குக்கரும் அழகு.அதில் அவித்த கோழியும் அருமை.

asiya omar said...

நன்றி தோழி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.மிக்க மகிழ்ச்சி.நான் இங்கு உபாயோகித்து இருப்பது ஸ்டீமர்.

Riyas said...

ஐ.. சிக்கன்.. பார்க்கவே.. பசி வருது..

Mrs.Menagasathia said...

அருமை!! டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சூப்பர்ர் உணவு!!

இளம் தூயவன் said...

எனக்கு பிடிச்ச சிக்கன் சகோதரி.

அஹமது இர்ஷாத் said...

Nice.. i Love Chicken.... My Friends also Call me Chickyirshad...

ஜெய்லானி said...

சவுதியில் இருந்த போது இந்த முறையில் நிறைய செய்ததுண்டு.. நல்லா இருக்கு..!!

asiya omar said...

ரியாஸ்

மேனகா

இளம்தூயவன்

அஹமது இர்ஷாத்

ஜெய்லானி

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான சத்தான உணவு..ஸ்டீம்ட் சிக்கன் சாலடில் சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்...எனக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு....

Chitra said...

நான் அப்படியே oven ல வச்சு ரோஸ்ட் பண்ணி இருக்கேன். ஸ்டீமிங் புதுசு. :-)

asiya omar said...

கீதா ஆச்சல்,சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

எல்.கே.வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.

நானானி said...

டயட் சிக்கன் அருமையாயிருக்கு. அதோடு உங்க குக்கரும்தான் எங்கே வாங்கினீங்க?

அடுத்த முறை இந்த சிக்கன் தான்.

ஹைஷ்126 said...

இது வரை ஸ்டீம்ட் சிக்கன் கேள்வி பட்டது இல்லை. இதுவும் லீவில் முயற்சி செய்து சொல்கிறேன். நன்றி

malini said...

papparika powder means what?

asiya omar said...

thanks for your first visit malini,paprika powder -made from selected capsicum.(dried and powdered)it is not necessary ,if you have you put in this recipe otherwise you can use your own masala.

asiya omar said...

நானானி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சகோ.ஹைஷ் உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, சூப்பர் ரெசிப்பி. ஸ்டீம்ட் சிக்கன் என்றால் ஹெல்தியாக இருக்கும். நானும் வெகு விரைவில் செய்து பார்க்க வேண்டும்.

asiya omar said...

செய்து பாருங்க வானதி.மகிழ்ச்சி.