Monday, June 28, 2010

மை ஸ்டீமர்


ஸ்டீம்ட் சிக்கன் ரெசிப்பி கொடுத்த பின்பு இந்த ஸ்டீமர் பற்றி தோழிகள் கேட்டதால் அதனை பற்றிய ஒரு சிறு பதிவு.

என்னிடம் உள்ள ஸ்டீமரில் 3 லேயர் இருக்கு.காய்கள் ,புட்டு, கொழுக்கட்டை,இடியாப்பம்,கிழங்கு வகைகள் அவிப்பதற்கு ஏன் சிக்கன் ஃபிஷ் கூட அவித்து எடுக்கலாம்.கீழ் பாத்திரத்தில் சாதம், குழம்பு,சூப்,பாயாசம் என்றும் செய்து அசத்தலாம்.


இட்லி தட்டை உள்ளே வைத்து இப்படி ஈசியாக அவிக்கலாம்.மேல் லேயரில் இடியாப்பதட்டு வைத்து பிழிந்து வைக்கலாம்.நார் தட்டு என்றால் அடுக்க வசதியாக இருக்கும்.


மொத்தத்தில் இந்த பாத்திரம் ரொம்ப வசதியாக இருக்கு.தோழிகளே நீங்களும் ஒண்ணு வாங்கிக்கோங்க.
--ஆசியா உமர்.

27 comments:

ஸாதிகா said...

இந்த ஸ்டீமரை ரத்னா ஸ்டோர்.எத்திராஜ் போன்ற கடைகளில் பார்த்து இருக்கின்றேன்.ஸ்டீம் பண்ணுவதை எல்லாம் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் பண்ணிவிடுவதால் இதன் தேவை தெரியாமல் போய் விட்டது.இருங்க..சாயங்காலமே வாங்கிட்டு வந்துடுறேன்.நன்றி தோழி!

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா. நானும் முதலில் ரைஸ் குக்கரில் தரும் மேல் தட்டில் தான் காய்,மற்றது வேக வைத்து எடுத்தேன்,இப்ப இது வசதியாக இருக்கு.மற்றபடி இங்கு எலக்ட்ரிக் ஸ்டீமரும் இருக்கு.நான் அதனை பார்த்துவிட்டு இது வசதியாக தெரிந்ததால் இது வாங்கி விட்டேன்.

LK said...

நல்ல விளக்கம்

எம் அப்துல் காதர் said...

இது கிட்சன் மினிஸ்டர் சம்பத்தப் பட்டதுங்க. ஆகவே... நான் விலகிக் கொள்கிறேன்!

இளம் தூயவன் said...

//மொத்தத்தில் இந்த பாத்திரம் ரொம்ப வசதியாக இருக்கு.தோழிகளே நீங்களும் ஒண்ணு வாங்கிக்கோங்க.-//


வீட்டுக்கு அவசியமான ஓன்று.

சாருஸ்ரீராஜ் said...

ஸ்டீமர் புதுசு போலவே பள பளன்னு இருக்கு

athira said...

ஆ... மை ஸ்டீமர் நல்லாயிருக்கு ஆசியா.

Mrs.Menagasathia said...

//ஸ்டீமர் புதுசு போலவே பள பளன்னு இருக்கு//ரிப்பிட்ட்ட்

GEETHA ACHAL said...

ஸ்டீமர் சூப்பராக இருக்கின்றது..படங்கள் கொள்ளை அழகு...உங்களை ஸ்டீமரை இன்று சுட்டுவிடுகிறேன்...அப்புறம் ஸ்டீமர் காணவில்லை என்று complaintசெய்ய கூடாதாக்கும்....இதுவும் பாஸ்தா ஸ்டீமரும் ஒன்று தானே...

asiya omar said...

எல்.கே.
அப்துல் காதர்
இளம் தூயவன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சாருஸ்ரீ ,மேனகா
லைட் வெளிச்சத்தில் புதுசு போல் மின்னுது.போட்டோவை வைத்து எடை போட வேண்டாம்.
அதிரா
கீதா ஆச்சல்
கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

அக்பர் said...

ஓகே! ஓகே!!

angelin said...

asiya indha steamer il whistle illai thanne.i have a idli cooker it makes loud noise.my neighbour once asked me whether its the fire alarm.i need to buy this when i go to india next time.

asiya omar said...

ஏஞ்சலின் இந்த ஸ்டீமர் விசில் வராது,நீங்க எங்க இருக்கீங்க,நான் carrefour -ரில் தான் வாங்கினேன்.

asiya omar said...

அக்பர் நன்றி நன்றி..

தமிழ் குடும்பம் said...

நல்லாயிருக்கு ஜாரு இது ஆன்லைனில் கிடைக்குமா?

asiya omar said...

தமிழ்குடும்பம் வருகைக்கு மகிழ்ச்சி.ஆன் லைனில் கிடைக்குமான்னு தெரியலை.carrefour -ரில் இருக்கும்,டெஃப்ஃபால்,மோலினெக்ஸ்,ப்லாக் & டெக்கரில் எலக்ட்ரிக் ஸ்டீமர் இருக்கு,அங்கு இவைகள் கிடைக்கலாம்.

angelin said...

i live in u.k asiya .if its a steamer i could buy here itself and use it with idli plates

ஜெய்லானி said...

எது வாங்கினாலும் ரெண்டு வாங்கித்தான் பழக்கம் . அப்ப பிடிச்சுட வேண்டியதுதான்..

asiya omar said...

ஜெய்லானி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Chitra said...

சமையலும் சொல்லி கொடுத்து, பாத்திர தேர்விலேயும் உதவுறீங்க..... நன்றி. எனக்கு ஒரு கேள்வி: நான்-stick இட்லி தட்டு என்று இருக்காமே? அது பற்றி தெரியுமா? I want to know whether it is really worth buying it.

Mahi said...

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டீமர்! நல்ல யூஸ்புல்லான பாத்திரம்..நான் இன்னும் ஹாக்கின்ஸ் குக்கர்லதான் இட்லி ஊத்திட்டு இருக்கேன்.அடுத்த முறை ஊருக்கு போகும்போது வாங்க ஒரு ஐட்டம் ஏடட் இன் தி லிஸ்ட்! :)

asiya omar said...

சித்ரா நம்ம ஊர் பொன்னையா நாடாரில் நான்ஸ்டிக் இட்லி தட்டு வாங்கினேன் அதிலும் லைட்டாக எண்ணெய் தடவி தான் சுடணும்.அப்ப வெறும் 300 ருபாய் தான்.வாங்கி 6 வருஷம் இருக்கும்.

asiya omar said...

மகி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.உன்னோட grill pan (square one) எனக்கு மிகவும் பிடிக்கும்.

vanathy said...

அக்கா, என்னிடமும் கிட்டத் தட்ட இது போல ஒன்று வெட்டியா தூங்கிட்டு இருக்கு. நாளையே வெளியே எடுத்துடுவேன்.

asiya omar said...

வானதி எடுத்து உபயோகிச்சு பாருங்க.கருத்திற்கு நன்றி.

நானானி said...

ஸாதிகா சொன்னது போல் ரத்னா ஸ்டோரில் கிடைத்தால் வாங்கிவிடலாம். நன்றி!

நானும் இதே போல் ஒரு பாத்திரம் பற்றி பதிவிட்டிருக்கிறேன். சுட்டி இங்கே. படித்து கருத்து சொல்லவும்.
http://9-west.blogspot.com/2008/09/amc-cookware.html