Tuesday, June 29, 2010

ஓ ! ஒயாசிஸ் ....

இது எங்க பேக்யார்டில் இருக்கிற ஒயாசிஸ்.இங்கு இப்ப எங்கு பார்த்தாலும் பேரீச்சம் பழம் பழுத்து தொங்குவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் ,எங்க வீட்டிற்கு பின்னாடி ஒரு பெரிய பேரீச்சம்பழத் தோப்பு இருக்கு


இது தாங்க எங்க வீட்டில் இருந்து தோப்பிற்கு போற வழி.எவ்வளவு அழகு. எப்பவாவது வாக்கிங் போவது வழக்கம்,அழகான வாக் வே.இரண்டு பக்கமும் பெரிய மதிற்சுவர்கள் உள்ளே பேரீச்சம்பழ மரக்கூட்டம்,பறவைகளின் ஓசை,மெலிதாக ஓடும் நீர் ஓடைகள் ,பாக்ஸ் பாக்ஸ் ஆக பறித்து அடுக்கி வைத்த பேரீச்சம் பழங்கள் , அங்கங்கு சிறிய வீடுகளில் தங்கி வேலை செய்பவர்கள் என்று பார்க்க அழகாக இருக்கும்
இது உள்ளே வேலை செய்றவங்க போற வழி,

நாம வெளியே தான் நடக்க முடியும்.

இங்கே பாருங்க ஒயாசிஸில் இருந்து பார்த்தால் எங்க வீடு தெரியுதா?


எஙக வீட்டு பின் பக்க பால்கனியில் இருந்து பார்த்தால்

இப்படி தான் தோப்பு தெரியும்.கொள்ளை அழகு!

இந்த வெயிலும் கூட எவ்வளவு செழிப்பாக இருக்கு பாருங்க.அப்ப அப்ப ஜீப் போவதும் வருவதும் அந்த தோட்டத்தில் பார்ப்பதே அழகு,வழியை தவற விட்டால் கண்டு பிடிப்பது சிரமம்,உள்ளே நுழைந்தால் எங்கும் ஒரு போல் இருக்கும்,வாக் போகும் பொழுது எங்க குடும்பம் மட்டும் அந்த தோப்புக்குள் இருப்பது போல் பயமாக இருக்கும்,அப்படி மயான அமைதி,அங்கு வேலை செய்பவர்கள் ஆடு,கோழி,மாடு,பறவைகள் என்றும் வளர்க்கிறார்கள்,அவற்றின் கழிவு உரமாக பயன்படுத்துவார்களோ ! வேலை செய்யும் பல நாட்டு ஆட்களையும் பார்க்கவே பாவமாக இருக்கும்,இங்கு நம்ம தமிழ் ஆட்களும் இருப்பார்களோ என்று உற்று பார்ப்பதுண்டு.நம்ம ஊரில் இருந்து வந்து இது மாதிரி தோப்பில் வேலை செய்து எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்களோன்னு
நினைப்பதுண்டு. இந்தப்படத்தில் மரங்களின் இரண்டு பக்கமும் நீர் ஓடைகள் தெரியுதா?
இது காய்வெட்டான பேரீச்சம் பழம்.
ஆகா பழுத்த பழம் உள்ள மரம்,விடலாமா?

நாங்கள் வாக் போய் வரும் பொழுது எங்களுக்கு கிடைத்த பேரீச்சம் பழம், அதனை தண்ணீரில் அலசும் பொழுது தான் ப்ளாக்கில் போட்டால் என்ன என்ற எண்ணம் வந்து கிளிக்கினேன்.
நல்ல அலசி கிச்சன் டவல் விரித்து காய வைத்தது.
ஃப்ரெஷ் பழமாச்சே அதனை அப்படியே பேக் செய்து ஊருக்கு கொண்டு போக ரெடி செய்தாச்சு,அது வேற பார்சல்.


இது உங்க எல்லோருக்கும் டேஸ்ட் பாருங்க.தெளி தேனும் பாலும் கலந்த மாதிரி ஒரு ருசி,அதுவும் ஃப்ரெஷ் ஆக பழுத்த பழத்தில் தான்.


--ஆசியா உமர்.37 comments:

ஹைஷ்126 said...

சூப்பர் படங்கள். கொடுத்து வைத்தவர்.

வாழ்க வளமுடன்

kavisiva said...

பார்சல் டூ இந்தோனேஷியா ப்ளீஸ் :)

மகி said...

வாவ்..உங்க வீடு சூப்பர் லொகேஷன்லஇருக்கு..அமேஸிங் வியூஸ்!

டி.வி.ல ஒரு முறை ப்ரெஷ் பேரீச்சை பழங்கள் பறிப்பதை பார்த்திருக்கேன்..உங்க பதிவு படித்ததும் தோப்புக்குள்ள வாக் போயிட்டு வந்த பீலிங் கெடச்சது!

jagadeesh said...

கண்கொள்ளா காட்சி. கா, அசத்துங்க

ஸாதிகா said...

படங்கள் கொள்ளை அழகுஆசியா.இதெல்லாம் பார்க்காமலே உங்கள் வீட்டுப்பகுதியின் அழகையும்,அமைதியையும் பார்த்து பரவசப்பட்டுப்போனேன்.இப்போ இப்படி அழகுகாட்சிகள் வேறா...!

ஜெய்லானி said...

இதுல பாதி பழம் பாதி காய் போல இருக்கும்( கடைசி படம் ) பழத்தின் சுவை அருமையோ அருமை .

படங்கள் அழகு.

GEETHA ACHAL said...

சூப்பரோ சூப்பர்ப்...அழகான படம் பிடித்து காட்டி இருக்கின்றிங்க...அழகு...பழத்தினை எடுத்து கொண்டேன்...நன்றி...

LK said...

oru parcel aasiyaa

நாடோடி said...

அப்ப‌டியே க‌ட்டி வையுங்க‌.... வ‌ந்து எடுத்துக்கிறேன்...

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கு அமீரக நண்பர்கள் தந்திருக்கிறார்கள்.. நல்ல ருசியாக இருக்கும்

சாருஸ்ரீராஜ் said...

ஆசியா அக்கா , அசத்தலா இருக்கு போட்டோஸ் எல்லாம் , பார்சல் பிரிக்கும் போது சொல்லுங்க நானே வந்து கலெக்ட் பண்ணிகிறேன் ..

Chitra said...

இரண்டு கிலோ எனக்கு பார்சல்..... , ப்ளீஸ்!

asiya omar said...

எல்லோருடைய கமென்டும் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
கவிசிவா
சகோ.ஹைஷ்
மகி
ஜெகதீஸ்
ஸாதிகா
ஜெய்லானி
எல்.கே
கீதா ஆச்சல்
ஸ்டீபன்
கே.ஆர்.பி
சாருஸ்ரீ

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

எல்.கே தமிலிஷ் சப்மிட் செய்ததற்கு மிக்க நன்றி.நேற்றில் இருந்து முயற்சி செய்து முடியலை.மகிழ்ச்சி.சரி யாராவது சப்மிட் பண்ண மாட்டாங்களான்னு இருந்தேன்.

சசிகுமார் said...

அக்கா அக்கா ப்ளீஸ் எனக்கு ஒரு பார்சல் அனுப்புக்கா,

அஹமது இர்ஷாத் said...

Super Post...

மங்குனி அமைச்சர் said...

பாருங்க கடைசி வரைக்கும் இந்த பேரிச்சம்பழம் ரெசிபிய எப்படி சமசிங்கன்னு சொல்லவே இல்லை ?? மறந்திட்டிக போல

அக்பர் said...

இப்பதான் சீசன். இங்கு நிறைய கிடைக்கிறது. தனித்தன்மையான சுவையுடன்.

Kousalya said...

asiya omar...

பதிவு மிக அருமை. எங்களால் பார்க்க முடியாததை படமாக கொடுத்து இருக்கீங்க நன்றி தோழி

Anonymous said...

தோழி அழகா இருக்கு உங்க வர்ணனை அருமையா இருக்கு ..இன்னிலிருந்து என் ட்ரீம் வாக் உங்க வீட்டில் இருந்து தோப்புக்கு போற வழியில் மாதிட போறேன் ..ஒரு பாகெட் பேரிச்சம் பழம் எனக்கும் பார்சல் அனுப்ப மறக்காதிங்க ...நன்றி

asiya omar said...

சித்ரா
சசிகுமார்
அஹமது இர்ஷாத்
மங்குனி அமைச்ச்ர்
அக்பர்
கௌசல்யா
சந்தியா
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

athira said...

ஆசியா மிக அருமையானபடங்களும் விளக்கங்களும், இப்பூடி நிறையப்பதிவுகள் போடுங்கோ..

நான் இங்கு பாகிஸ்தான் கடையொன்றிலே, மஞ்சள் குலையாக ஒரு காய் கண்டு, என்னவெனக் கேட்டேன், அப்போதுதான் சொன்னார்கள்... அது பேரீச்சம் காய் என. முதன் முதலில் வாங்கிச் சாப்பிட்டேன், ஒருவித கயர்ப்பும் இனிப்பும் சேர்ந்து நன்றாக இருந்தது.

எம் அப்துல் காதர் said...

நோன்புக்கு இப்பவே தயாராகிற மாதிரி இருக்கு இந்த பதிவு soooper..ம்ம்ம் அசத்துங்க மேடம்! இதில் எத்தனை வகையான பழங்கள் இருக்கு என்று (கிட்டத்தட்ட இருபது முப்பது வகை சொல்கிறார்கள்) விசாரித்து அடுத்த இடுகை ஒன்றும் போட்ருங்க//

எம் அப்துல் காதர் said...

அது என்னங்க கணக்கு விளங்க மாட்டேங்கு. என்னுடைய கமேன்ட்சுக்கு மார்க் ஏதும் கொடுக்கிகளா. டெய்லி என்ட மார்க் மைனஸ்லேயே போய்டே இக்கே அதான் கேக்கேன். 22- இருந்தது இப்ப 14-இல் வந்து நிக்கே அதான் கேக்கேன் (திருநெல்வேலி பேச்சு மாதிரி ட்ரை பண்ணேன்) ஹி.. ஹி..

vanathy said...

அக்கா, சூப்பர். பேரீச்சம் பழங்கள் எனக்கும் வேண்டும். இதை பாகிஸ்தானி கடைகளில் நோன்பு நேரங்களில் இலவசமாக கொடுப்பார்கள். ஒரு முறை சாப்பிட்டேன். சுவை அருமை.

Mrs.Menagasathia said...

அழகான புகைப்படங்கள்..எனக்கும் ஒரு பார்சல் வேணும்...

asiya omar said...

அதிரா

வானதி

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

ஆமாம் அதிரா காய் பழுக்க ஆரம்பிக்கும் பொழுது நீங்க சொல்வது போல் தான் இருக்கும்,முழுதாக பழுத்தால் நான் சொன்ன சுவையில் இருக்கும்.முக்கால்,பாதி பழுத்த பழமும் ருசியாக இருக்கும்.

asiya omar said...

அப்துல் காதர் வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.பயணம் கிளம்பி கொண்டிருக்கிறோம்,சம்மர் வெகேஷன்.நானும் சசிகுமாரின் வந்தேமாதரம் ப்ளாக்கில் சொல்லிய படி,டாப் கமெண்டேட்டர்ஸ் லிஸ்ட் போட கோட் சேர்தததோடு சரி,அதுவே தான் கணக்கிட்டு சொல்லுகிறது,நான் ஒன்றும் கணக்கிடவில்லை.எனக்கு என்ன இப்படி ஒவ்வொரு முறை ஒரு எண்ணிக்கை காட்டுகிறதே என்ற யோசனை தான்.

இலா said...

பாலையில் பசுஞ்சோலை... படத்தில தான் பார்த்து இருக்கேன் இப்படி.. அங்க யாருமில்லாத ஒரு வீடு மட்டும் இருக்கும்...பிரெஷ் பழமும்ரொம்ப இனிக்குமோ... எனக்கென்னவோ கடையில் கிடைப்பதில் ரொம்ப சர்க்கரை சேக்கறாங்கன்னு தோணும்.. இந்த முறை அபுதாபி வழியா இந்தியா போகணும்.. அட்லீஸ்ட் ஒரு பார்சல் பழம் கியாரண்டி எனக்கு....
எந்த ஊரா இருந்தாலும் விவசாயம் செய்வது என்னவோ பாத்திகட்டி தண்ணி பாய்ச்சறதுதான் போல.... நல்ல பதிவு...

Riyas said...

எங்க ஆபிஸ் பக்கத்துல ஒரு மரம் இருக்கு. காய் எப்ப பழமாகும்னு காத்திட்டிருக்கோம்..

சுவையான பதிவு பேரீச்சம் பழம் போலவே..

asiya omar said...

இலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.இலா இது பின் பக்கம் ,முன் பக்கம் ரோட் சைட் கொஞ்சம் பார்ஸ் -ஆக இருக்கும்.(அல்-ஐன் சிட்டி ஒயாசிஸ் ஆஃப் யு.ஏ,இ.) மெயின் சிட்டியில் பேரீச்சம்பழத்தோட்டம் அங்கங்கு இருக்கும்,பேலஸூம் பக்கமே இருக்கும்.யு.ஏ.இ.-யில் சும்மா பில்டிங்ஸ்சும் மால் மட்டும் இல்லை இப்படி இன்னும் நிறைய இடங்கள் இருக்கு.ஒரு பக்கம் டெசெர்ட்,மறுபக்கம் கடல் -ன்னு இருக்கும்.ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாராம்பரியம்.

asiya omar said...

ரியாஸ் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் said...

இங்கேயும் பேரீச்சம்பழம் குலைகுலையா மார்க்கெட்டில் கிடைக்குது. லேசான மஞ்சள் நிறத்தோட இருக்கிற காயை ஒருமுறை சாப்பிட்டுவிட்டு, இனிமேல் இதை சாப்பிடக்கூடாதுன்னே முடிவு பண்ணிட்டேன்.அப்றமாத்தான் தெரிஞ்சது இதுதான் பேரீச்சைன்னு. உங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற தோப்புல நல்ல விளைச்சல் போலிருக்கே....

goma said...

ஓ ஒயாசிஸ்
ஓ தோட்டம்
ஓ-பேரீச்சை

நானானி said...

சவூதியில் இருக்கும் நண்பர் ஒருவர் இதே போல் ப்ரெஷ் பேரீச்சம்பழம் கொண்டுவந்து தந்தார். அருமையாய் இருந்தது. என்ன இருந்தாலும் ப்ரெஷ்..ப்ரெஷ்தான்.
உங்க வீடு பேரீச்ச சோலையாயிருக்கிறது

manonmani said...

Hai! Asiya, supera samaiyalla asathittu irukkeenga. very nice photos, really you are great Asiya. neenda idaivelikkuppiragu blogil santhithathu magilchi.
Asiya nan mano from manaparai.

Asiya Omar said...

Thanks Mano(D.Manonmani) romba santhosam.ennoda meyil I.D.asiyaomar@gmail.com.S.Manovidam pesinen.appa unnaiyum ninaichen.nam kalluri natkal MALARUM NINAIVUGALAY...