Wednesday, June 30, 2010

மீண்டும் சந்திப்போம்விடுமுறை வந்தது
விட்டு வந்த
வீட்டு நினைவும் வந்தது

உல்லாசமாய் ஊரில்
உற்றார் உறவினருடன்
உண்டு மகிழும்
கண்டு களிக்கும்
நாளும் வந்தது

கொண்டாடும் குதூகலம்
கொட்டம் போட்டது
கொஞ்சும் செழிப்பாய்
பயண பிரமிப்புடன்
நாட்கள் நகர்ந்தது

ப்ளாக்கிற்கு விடுமுறை
அது மட்டும்
மனதிற்கு பாரமானது.
- ஆசியா உமர்.

36 comments:

இளம் தூயவன் said...

சகோதரி உங்கள் பயணம் இறைவன் அருளால் நலமாக அமைய என் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

welcome to home country

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஊருக்கு சென்று சந்தோசமாக விடுமுறையை கழியுங்கள்.. என்றைக்கு ஊருக்கு போறீங்க ஆசியாக்கா.. ஊர்ல எல்லாத்தையும் கேட்டதாக சொல்லவும். குற்றால சீசன் களைக்கட்டிருச்சி.. போயிட்டுவாங்க ஆசியாக்கா.

Mahi said...

ஊருக்கா ஆசியாக்கா? கலக்குங்க!எவ்வளவு நாள் கழித்து வருவீங்க? ஹேவ் எ ஸேப் ட்ரிப் & நைஸ் டைம்!

இந்தமுறை முருங்கைக்காய் கொண்டுவர முடியாதில்ல?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எத்தன மாசம் லீவுல போறீங்க..

asiya omar said...

ஜெய்லானி

இளம் தூயவன்

உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மகி எனக்காக எப்படியாவது மரத்தில் காய் காய்த்து விடும்.
பார்ப்போம்.ஆகஸ்டில் சந்திப்போம்.

asiya omar said...

ஸ்டார்ஜன் வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.ஒரு மாதம் தான் விடுமுறை.

asiya omar said...

ஊர் வீட்டிலும் நெட் இருப்பதால்
நேரம் கிடைக்கும் பொழுது எல்லார் இடுகைகளையும் பார்வையிடுவேன்.

Cool Lassi(e) said...

Great poem. Have a great trip!

அமைதிச்சாரல் said...

பயணம் நலமாக அமையட்டும்.

Mrs.Menagasathia said...

ஊருக்கு நல்லபடியாக போய்ட்டு வாங்கக்கா...இனிய பயண வாழ்த்துக்கள்!!...

Chitra said...

Have a safe trip! WE WILL MISS YOU!

Convey our regards to your family. :-)

kavisiva said...

சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வாங்க ஆசியா. உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்திருப்போம். எல்லோரையும் கேட்டதாக சொல்லுங்கள்.

vanathy said...

ஆசியா அக்கா, உங்கள் விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள். போய் வந்த பிறகு அந்த அனுபவத்தை சொல்லுங்க.

இன்று உங்கள் சிம்பிள் சன்னா மசாலா செய்தேன். சுவை அருமை. இதற்கு முன்பு வேறு சன்னா மசாலா ரெசிப்பிகள் ட்ரை பண்ணினேன். ஆனால், உங்கள் ரெசிப்பி சூப்பரோ சூப்பர். நன்றி.

goma said...

HAVE A TRIP

Kousalya said...

வாங்க தோழி உங்களை வரவேற்கிறேன்

கலாநேசன் said...

Happy holydays

கே.ஆர்.பி.செந்தில் said...

WELCOME TO INDIA...

LK said...

Welcome to INdia Sago.. have a nice time

மங்குனி அமைச்சர் said...

விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள் ,,welcome to India.

ஸாதிகா said...

பயணத்திற்கு தயாராகியாச்சா?இனிதாக இந்தியபயணம் அமைய வாழ்த்துக்கள்.

நாடோடி said...

விடுமுறை ந‌ல்ல‌ ப‌டியாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள்...

சசிகுமார் said...

வாங்க வாங்க ஏர்போர்ட்டில் ரெடியா இருக்கிறேன். ஹா ஹா ஹா

ஜெய்லானி said...

அப்படியே இதையும் பார்ஸல் பன்னுங்க. கஸ்டம்ஸ் செலவு ..உங்க செலவு

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

அக்பர் said...

//ப்ளாக்கிற்கு விடுமுறை
அது மட்டும்
மனதிற்கு பாரமானது.//

கஷ்டம்தான் :)

விடுமுறை சிறப்பாக கழிய வாழ்த்துகள்.

asiya omar said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும்

cool lassie

அமைதிச்சாரல்

மேனகா சத்யா

சித்ரா

கவிசிவா

வானதி

கோமா

கௌசல்யா

கலாநேசன்

கேஆர்பி

எல்.கே

மங்குனி அமைச்சர்

சாருஸ்ரீ

ஸாதிகா

ஸ்டீபன்

அக்பர்

அனைவருக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி உங்கள் விருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

athira said...

ஆசியா... நான் தான் குழல்புட்டு...

ஊருக்குப் போய் கிலோக் கணக்கா உடம்பை ஏத்திடாமல்:), அளவோடு சாப்பிட்டு, எஞோய் பண்ணி வாங்கோ.

விருதுக்கும் வாழ்த்துக்கள்..... இவ்ளோ விரைவாப் போட்டுவிட்டீங்கள், நான் இன்னும் தூக்கி வரவில்லை..

எம் அப்துல் காதர் said...

வெகேஷன் கிளம்பியாச்சா>> நல்ல விதமா போயிட்டு வாங்க மேடம்>> ஊரில் எல்லோரையும் விசாரித்து எங்கள் சலாம் சொல்லுங்க.

//ப்ளாக்கிற்கு விடுமுறை அது மட்டும் மனதிற்கு பாரமானது.//

டோன்ட் வொர்ரி மேடம். நாங்கல்லாம் ப்ளாக்கை பத்திரமா பார்த்துப்போம்! ஊரில் இருந்து கொண்டு ரெண்டு மூணு இடுகையாவது போடுங்களேன். போடுதியலா!!

(( HAVE A NICE TRIP))***

asiya omar said...

அதிரா வருகைக்கு மகிழ்ச்சி.வெயிட் பற்றி நல்ல வேளை நினைவு படுத்தினீங்க,
அட ஆமாம்,ஊர் கிளம்பும் முன் அன்பாய் தந்த விருதை தூக்கி வந்து வைத்தாச்சு.தனியாக பதிவு போட நேரமில்லை.மகிழ்ச்சி.

asiya omar said...

அப்துல் காதர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.இன்ஷா அல்லாஹ் முடிந்தால் நிச்சயம் இடுகை போட முயற்சிக்கிறேன்.

sandhya said...

ஊருக்கு போறிங்களா ?நல்ல படியா போயிட்டு வாங்க ..சமயம் கிடைக்கும்போது ப்ளாக் லே பதிவு எழுத மறக்காதிங்க ..happy journey.

அன்புடன் மலிக்கா said...

உங்கள் பயணம் இறைவன் அருளால் நலமாக அமைய என் வாழ்த்துக்கள் அக்கா.

நல்லபடியாக போய்விட்டு கடலைமுட்டாயும் முறுக்கும் தேன்மிட்டாயும் கொண்டுவாங்க இந்த பச்சபுள்ளைக்கு..

angelin said...

wish you a happy journey.enjoy your holidays in india.