Monday, June 21, 2010

எம்மா....
எம்மா, ”பாத்திமுத்து”....
“என்ன மாமா “ என்று பதறியபடி ஓடி வந்த மருமகளிடம் , "மெதுவா வாம்மா,ஒண்ணுமில்லை வாசலில் மீன் வந்திருக்கு,வாங்கவா?, ஆய்ஞ்சி கழுவ கஷ்டமில்லையே ?”
இல்லை மாமா ,"பசியாற வேலையை முடிச்சிட்டு பார்க்கிறேன்”,
செய்யது வாப்பாவிற்கு மருமகள் என்றால் உயிர், இருக்காதா பின்ன,ஒரே மகனின் மனைவியாச்சே...

வாப்பா எப்பவும் வாய் ஓயாமல் மருமகளை பற்றி பேசனும்னால் யாராயிருந்தாலும் விட்டு வைக்க மாட்டாரு,
வாசலில் மீன்காரரிடம், மக்களைப் பெற்ற மகராசியாக்கும் என் மருமகள், பொறுமைசாலி, அழகான பொண்ணு என்று ஆரம்பித்தவுடன் ,”முதலாளி நான் வரட்டா? இருக்கிற மீனை விக்கனுமே,”சரி நீ கிளம்புப்பா”,..
ஏம்ப்பா,”துடிக்க துடிக்க விறால்,அயிரை இருந்தா கொண்டா”,சரிங்க முதலாளி என்றபடி மடமடவென்று கிளம்பி விட்டார் மீன்காரர்.


மாமா, ”பசியாறா செய்தாச்சு,சாப்பிட வர்றியளா?” என்ற பாத்திமுத்துவிடம், எம்மா ,” பிள்ளைகள் ஓதப்போய்விட்டு வந்தாச்சா?”
வந்தாச்சு மாமா என்ற மருமகளிடம்,பேரப்பிள்ளைல கூப்பிடு கூட இருந்து பசியாறட்டும்....
பெத்தாப்பா, ”எனக்கு முழு ரொட்டி,எனக்கு முழு ரொட்டி என்ற பிள்ளைகளிடம் ஆளுக்கு பாதி,சாப்பிடுங்க,அப்புறம் இரண்டாவது தருவேன்,”என்றார்...
அவருக்கு தெரியும்,மருமகள் ரொட்டி சுட்டால் மெத்துன்னு பெரிசா இருக்கும்,பாதி ரொட்டியிலேயே வயிறு நிறைஞ்சிடும்.
சின்னதாக சுட்டால் இன்றைக்கு சுட்டு முடியாதே...


வாப்பா படிப்பறிவில்லாதவர் என்றாலும் கடின உழைப்பாளி,சொந்த தறிகள் வைத்து ஆட்கள் மூலமாக வேஸ்டி நெய்து வெளியூர்களுக்கு சரக்கு அனுப்புவது தான் அவர் வேலை. மகன் யூசுப் தலையெடுத்த பின்பு எஸ்.வி.எஸ் மார்க் லுங்கிகள் என்ற பெயரில் தயாரித்து, கொழும்பு கல்கத்தா என்று அமோகமாக பிஸினஸ் சூடு பிடித்தது,


வருடம் தவறினாலும் மருமகள் பாத்திமுத்து குழந்தை பெற தவறக்கூடாது. அவ்வளவு ஆசை வாப்பாவுக்கு..
அவருக்கு கலயாணமாகி 19 வருடம் கழித்து தான் குழந்தையே பிறந்ததாம்.அதனால் மருமகள் ஆம்பிளப் பிள்ளையாய் பெறனும்னு ஆசை, அதற்கேற்றார் போல் மருமகளும் பிள்ளைகள் பெறப்பெற பேரப்பிள்ளைகள் பெயரில் சொத்து வாங்கி குவித்தார் பெத்தாப்பா.


நாளும் காலமும் வேகமாக உருண்டோடியது,
செய்யது வாப்பாவுக்கு வயது தொண்ணூறை தாண்டியது,ஒருபல்லுகூட விழவில்லை,அவ்வளவு திடகாத்திரமாக இருந்தார்..
மகன் எடுத்துப் பிடித்த வியாபாரம் பழையபடி இல்லைன்னாலும் செழிப்பாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது...
வாப்பாவுக்கு இறை நம்பிக்கையும் அதிகம், நாகூர் ஆண்டவர்களின் மீதும் தீராத பற்று,அவங்களை நாடினால் நினைச்சது நடக்கும் என்று அவர் நம்பிக்கை...


இப்படியாய் இருக்கையில் ஒரு நாள் வாப்பா, ”எம்மா பாத்திமுத்து ” ,என்று மருமகளை அழைத்து ,”நான் பயணம் வைக்கப்போறேன்,”
”எங்கே மாமா”, என்று ஒன்றும் அறியா மருமகளிடம்,”நாகூர் ஆண்டவர் என்னை அழைக்கிறாங்கம்மா,இன்னும் இரண்டு மூணு நாளில் கிளம்பிடுவேன்,”என்றவுடன்,”தனியாகவா போகப்போறீஙக துணைக்கு யாரைவது அனுப்பட்டுமா?”என்ற பாத்தி முத்துவிடம் ”நான் தனியாகத்தான் போகனும்மா.”என்றார் ..
மறுநாள் ஆச்சு நல்ல உடை உடுத்தி அத்தர் பூசி வெளியே கிளம்பி சென்று வருவதாய் சொல்லி வீட்டு வாசல் இறங்கியவர்,
”எம்மா ,ஒரு மாதிரியாவருது, தண்ணி கொண்டு வாம்மா,
என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டு எல்லாருக்கும் சொல்லி விடும்மா,நான் பயணம் வைக்கணும், ” என்றவுடன் தான் பாத்திமுத்துவிற்கே புரிந்தது.

மாமா என்ன சொல்றியோ, என்று கண்ணீர் மல்க கேட்ட மருமகளிடம் ”பயப்படாதே,இந்த கிழவனுக்கு நீ செஞ்ச தொண்டு போதும்மா”, என்று கண்ணை இருக மூடிக்கொண்டார்,அப்பப்ப கண்ணை திறந்து, எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்திட்டு கண்ணை மூடிக்கொள்ளுவார், இப்படியாய் ஒரு நாள் முழுவதும் கழிந்தது, சொந்தக்காரங்க எல்லாம் இந்த கிழவனுக்கு வேலை இல்லை,நல்ல திடமாக இருந்திட்டு எல்லாரையும் எங்கேயும் அசைய விடமாட்டேங்கிறார் பாரேன்னு ஒவ்வொருவராக அவரவர் வீடு செல்ல ஆரம்பித்து விட்டனர்..


மறுநாள் “ எம்மா பாத்திமுத்து, நெஞ்சில என்னமோ அடைக்குது, தைலம் தேய்ச்சி விடும்மா, தவுட்டை வறுத்து ஒத்தடம் கொடுக்கிறீயாமா”, என்றார்.

இப்படியாய் மறுநாளும் கழிந்தது, உறவினர் வருவதும் போவதுமாய் இருந்தனர், வந்தவங்களுக்கு சோறாக்கி போடவும், மாமாவை கவனிப்பதுமாய் நேரம் சென்று கொண்டிருந்தது

மூன்றவது நாள் ஆள் எழுந்து உட்காரவும் எல்லாரும் வேற வேலை இல்லைன்னு கிளம்பவும்,அப்பாடான்னு இருந்தது...பாத்திமுத்துவுக்கு...

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை,”எம்மா நான் தொழப் போவனும்,வேட்டி சட்டையை எடு” என்றவுடன்,மருமகளும் மாமாவை பள்ளி வாசலுக்கு அனுப்ப படு ஜோராக கிளம்பி சென்றார் செய்யது வாப்பா. ஜும்மா தொழுகையை முடித்து விட்டு எல்லாரையும் சந்தித்து முலாகத் செய்து விட்டு வீடு வந்து சேர்ந்தார்...
மக்கமார்,பேரப்பிள்ளைகளுடன் கறி சோறு சாப்பிட்டு விட்டு அனைவரும் சிறிது கண் அசந்தனர்..


”எம்மா பாத்திமுத்து, ”அந்த பங்காவை போடு ”என்ற மாமாவின் அருகில் அமர்ந்த போது,”என்ன மாமா இப்படி வேக்குது,ஒண்ணும் இல்லையே”, ”நீ படுமா” என்றவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, மாமா அல்லாஹ்ன்னு சொல்லுங்கோ,யா அல்லாஹ ! யா அல்லாஹ்!,யா அல்லாஹ் ! என்று சொல்லவும்,களக் களக் களக் என்று தொண்டையில் இருந்து மூன்று சத்தம், அவ்வளவு தான் செய்யது வாப்பா தன் பயணத்தை தொடங்கிவிட்டார்.
மாமான்னு பாத்தி முத்து போட்ட சத்தத்தில் எல்லாரும் எழுந்து வர அப்ப தான் நிலமை எல்லாருக்கும் தெரிந்தது...


பாத்தி முத்து காதில் மட்டும்,”எம்மா நான் மூணு நாளில் பயணம் வைக்கப்போறேன்னு சொன்னேனே இப்ப தெரியுதாமா?”.....என்று மாமா கேட்பது போல் இருந்தது,
வார்த்தைக்கொரு எம்மா போடுவீங்களே மாமா , இனிமேல யார் என்னை கூப்பிடுவா மாமா?........


--ஆசியா உமர்.

63 comments:

ஹைஷ்126 said...

நல்லா இருக்கு.

வாழ்க வளமுடன்

Hussain Muthalif said...

ரொம்ப அருமையா இருக்கு,

நம்மூரு சொலவடையில் கதை படிக்கும்போது சொல்ல வார்த்தையே வரலை.

athira said...

நெஞ்சை நெகிழ வைக்கிறது. இது கற்பனைக் கதையோ இல்லை உண்மைச் சம்பவமோ ஆசியா?

எம் அப்துல் காதர் said...

அருமையான பதிவு மேடம். வாழ்த்துகள்.22 கேரட்-24 கேரட் ஆகி விட்டது.அதாவது பட்டை தீட்டப் பட்டிருக்குன்னு அர்த்தம்.

asiya omar said...

சகோ.ஹைஷ் கருத்திற்கு மிக்க நன்றி.

ஹுசைன் முத்தலிஃப் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அதிரா உண்மை கலந்த கற்பனைக்கதை.பெயர்களை கூட நான் மாற்றவில்லை.மிக்க நன்றி.

நன்றி சகோ.அப்துல் காதர்.

Chitra said...

பேட்டை - மேலப்பாளையம் பக்கம் உள்ள பேச்சு வழக்கு..... கதையையும் மிஞ்சி மனதை தொட்டது... தேங்க்ஸ்,மா..

Mahi said...

அருமையான கதை!

இலா said...

அருமையான கதை! அக்கா! எல்லாருக்கும் எல்லா திறமையும் இருக்கும்... ஆனா அதை வெளிக்கொணர நேரமும் .. ஊக்குவிக்க மனங்களும் வேணும்.... இட் இஸ் டைம் டு ஷைன் ! சும்மா பெட்ரோமாக்ஸ் லைட் இல்லக்கா... அணையாத ஒலிம்பிக் ஜோதி.. ஆரம்பிங்க...

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்குங்க‌..... நானும் இது போல் சொல்லிவிட்டு ப‌ய‌ண‌ம்(முடிவில்லா) செய்த‌வ‌ர்க‌ளை பார்த்திருக்கிறேன்...

ராஜவம்சம் said...

கதை சொல்லும் விதமும் மொழிநடையும் அறுமை.

வாழ்த்துக்கள்.

ஓரிறை கொள்கைதான் உண்மையானது
தர்கா வழிபாடு என்பது அதர்க்கு மாறுசெய்வதுபோல் நன்றி.


.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கதை மிகவும் சிறப்பாக உள்ளது . பகிர்வுக்கு நன்றி

கே.ஆர்.பி.செந்தில் said...

அசத்தலான மொழிநடை ... பாராட்டுக்கள்

Riyas said...

சொல்ல வார்த்தயே இலலை..

VERY GOOD STORY... CONTINUE..

LK said...

மண் மனம் கமழும் கதை.. நல்லா எழுதறீங்க சகோ.

asiya omar said...

கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

சித்ரா.
மகி.
இலா .
ஸ்டீபன்.

asiya omar said...

ராஜவம்சம் உங்கள் முதல் வருகைக்கு நன்றி.இது கிட்ட தட்ட 50-60 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக கேள்வி ஞானம் மூலம் கற்பனை செய்து எழுதியது.

asiya omar said...

வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி, நன்றி.

சங்கர்.
கே.ஆர்.பி.
ரியாஸ்.
எல்.கே.

சாருஸ்ரீராஜ் said...

அருமையா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

இல்லைங்க மேடம் , வழக்கம் போல கலாயிக்கலாம் அப்படின்னு தான் வந்தேன்....???


அருமையா இருக்கு மேடம்

இளம் தூயவன் said...

சகோதரி இந்த கதை உங்கள் கற்பனைக்கு உட்பட்டது என்றாலும்.,நாகூர் என்ற பெயரை அவற்றில் இணைத்து இருப்பதால், நாகூரின் வரலாற்றில் சில வற்றை இங்கு கூறுகிறேன்.. நாகூரில் வாழும் மரைக்கார் மாலிமார் என்கின்ற குடும்பங்களில் ,நடை முறையில் உள்ள வார்த்தை வாப்பா உம்மா.இவர்கள் நூற்று கணக்கான தறி நெய்யும் தொழிற்சாலை ,மற்றும் பல கப்பல்களுக்கு உரிமையாளர்கள் .வெள்ளையர்களை எதிர்த்த ஒரே காரணத்திற்காக இவர்கள் தொழில் வெள்ளையர்களால் அடியோடு அழிக்கப்பட்டது.
சகோதரி எங்கே தளத்தின் பக்கம் காணவில்லை.

asiya omar said...

அமைச்சரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

இளம் தூயவன் தகவலிற்கு மகிழ்ச்சி.தாங்கள் இடுகை புதிதாக இடவில்லை என்று நினைத்திருந்தேன்,இன்று தான வர நினைத்து இருந்தேன்.நன்றி,மகிழ்ச்சி.

asiya omar said...

சாருஸ்ரீ மிக்க நன்றி.

simham said...

அமைதியான நிறைவுக்குதான் கொடுத்து வைக்க வேண்டும். வாப்பாவுக்குக் கிடைத்த மாதிரி, நமக்கும் கிடைக்குமா என்று வயதானவர்களை பெருமூச்சு விட வைத்து விட்டீர்கள்.

அருமையான எழுத்து.

சீதாலஷ்மி

angelin said...

very nice asiya.

asiya omar said...

சீதாலஷ்மி மேடம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

Ayesha said...

சகோதரி, அருமையான கதை நடை......அல்லாஹ் நம் அனைவரையும் இனை வைத்தல் இல் இருந்து காப்பாற்றுவானாக.......

Mrs.Menagasathia said...

ஆசியாக்கா கண்கலங்க வைத்துவிட்டீர்கள்...அருமையான கதை!! தொடருங்கள்...

asiya omar said...

மேனகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஆயிஷா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஆசியா இதை படித்ததும் என் கிரான்மா எம்மா எம்மா என் செல்ல மவளே என்று சொல்வார்கள் அது நினைவுக்கு வந்து விட்டது.

நம இஸ்லாமிய இல்லா பேச்சு வழக்கில் அருமையாக எழுதி இருக்கீங்கள்.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

தோழி நெகிழ்சியான கதை.பொருத்தமான படம்.நெல்லை மாவட்ட்பேச்சு வழக்கு..ஆஹாஹாஹா..அசத்துங்கோ,தொடருங்கோ.வாழ்த்துக்கள்.

asiya omar said...

தோழி ஸாதிகா உங்கள் வருகையை தான் எதிர்பார்த்து இருந்தேன்.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

GEETHA ACHAL said...

கதையினை முன்னமே படித்து விட்டேன்...ஆனால் இன்று தான் கமெண்ட் போட டைம் இல்லை....அருமை...

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி கீதாஆச்சல்.

SUMAZLA/சுமஜ்லா said...

அருமையான கதை அக்கா...முதல் பாதி படிக்க படிக்க என் மாமனாரையே அது கொண்டிருந்தது....ஆனால், இறுதியில், வேண்டாம் என் மாமு இப்ப 75 வயதாகுது...இன்னும் ஒரு இருபது வருடமாவது உயிர் வாழனும் என்று இந்த மறுமகளுக்கு ஆசை! நான் காலேஜ் போய் வந்த போதும், இப்போ, டீச்சராக ஸ்கூல் போய் வரும் போதும், தினமும் வந்ததும் போய் எனக்கு தீனி வாங்கி வருவார். கேக், கடலை பர்பி, பாதுசா, காரகல்லை என்று எதாவது வாங்கி வருவார். நெகிழ்ச்சியான கதை தந்ததற்கு வாழ்த்துக்கள்!

asiya omar said...

சுமஜ்லா,உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நீங்க அன்னைக்கு சொன்னகதை இதுதானோ.. ரொம்ப அருமை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப நெகிழவைத்த கதை ஆசியாக்கா.. கதையில் ரொம்பவே இன்வால்வ் பண்ணவச்சிட்டீங்க.. இன்னும் மறக்கவில்லை செய்யது அப்பாவை. ரொம்ப நன்றி அக்கா. எங்கப்பாவை நினைக்கவைத்ததுக்கு.. அவங்கபேரும் செய்யது அப்பாதான்.

asiya omar said...

ஸ்டார்ஜன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.எழுத்தாளர் பாராட்டும் பொழுது உண்மையில் சந்தோஷமாக உள்ளது.நீங்கள் கேட்டது வேறு கதை ஒண்ணு இருக்கு.

vanathy said...

Akka, super. Very touching.

asiya omar said...

thanks vanathy.

selva said...

mmm good story

Anonymous said...

ROMBA NALLA ERUKU
THODARNTHU ELUTHUNGA....

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

இந்த கதையை வீட்டில் எல்லோரும் கேட்கும் விதமாக சப்ததுடன் வாசித்த நான், படிக்க படிக்க சப்தம் குறைந்து கண்ணீர் வர துடங்கியது...

கோமதி அரசு said...

நெஞ்சம் நெகிழ்ந்தேன்.

அருமையான கதை.

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

asiya omar said...

செல்வா கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

மஹா கருத்து சொல்லியமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்து நிச்சயம் எழுதுவேன்.

asiya omar said...

ஹாஜி உங்களின் நெகிழ்ச்சியான கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

கோமதி அரசு உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
உங்க வாழ்த்திற்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

தமிழ்மணம் தங்கப் பதக்கம் இப்பதிவுக்கு.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசியா:)!

Jaleela Kamal said...

தமிழ் மனத்தில் முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள் ஆசியா

asiya omar said...

ராமலஷ்மி செய்திக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி,என்னால் இன்னமும் நம்ப முடியலை.எல்லாப் புகழும் இறைவனுக்கே.

asiya omar said...

ஜலீலா வாழ்த்திற்கு மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

அரபுத்தமிழன் said...

எழுத்தில் சமைத்து அசத்தி விட்டீர்கள்.
'எம்மா'பெறும் பரிசும் பெறும் இப் புனைவு.
தமிழ்மணப் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள் தமிழ்மண வெற்றிக்கு.

ஹுஸைனம்மா said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் அக்கா.

asiya omar said...

அரபுத்தமிழன்

ராஜவம்சம்

ஹுசைனம்மா

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Buhari said...

Hi Asia Chachi, I finished with my two drops of tear.

Keep it up!

MOHAMMED BUHARI
SAUDI ARABIA

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா - எம்மா கதை அருமை - இயல்பான நடை - நல்ல கருத்து - கற்பனை வளம் - தூள் கெளப்பிட்டீங்க - தமிழ் மணத் தங்கப் பதக்கத்திற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கீத மஞ்சரி said...

மனத்தை நெகிழ்த்திய கதை. இதுபோன்ற உறவுகளின் நீட்சி இன்றும் தொடர்கிறது சில இல்லங்களில் என்பது நினைத்து மகிழவைக்கும் செய்தி. பரிசு பெற்றக் கதைக்குப் பாராட்டுகள் ஆசியா.

Asiya Omar said...

புஹாரி கருத்திற்கு நன்றி.

சீனா ஐயா உங்கள் ஊக்கமும் கருத்தும் என்னை மீண்டும் எழுத தூண்டுகிறது.நன்றி ஐயா.

கீத மஞ்சரி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ezhil said...

எனக்கு பரிட்சயமில்லா எழுத்து நடை... அருமையாய் இருந்தது...வாழ்த்துக்கள்