Wednesday, June 16, 2010

இஞ்சி கோஸ் பொரியல்

தேவையான பொருட்கள் ;

முட்டை கோஸ் - 200 - 300  கிராம்

வெங்காயம் - 2

இஞ்சி நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மல்லி , கருவேப்பிலை - சிறிது

தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு,உ.பருப்பு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - சிறிது


முட்டை கோஸ்,இஞ்சி,வெங்காயம்,மிளகாய் நறுக்கி வைக்கவும்.


கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.



பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.





வெங்காயம் வதங்கியதும்,கோஸ் சேர்த்து பிரட்டி,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
கோஸ் நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் ,நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.




சுவையான இஞ்சி மணத்துடன் கூடிய கோஸ் பொரியல் ரெடி.


-ஆசியா உமர்.

23 comments:

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர்,இதில் இஞ்சி சேர்த்து செய்ததில்லை....

Mahi said...

நானும் இதே போலதான் செய்வேன். போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு ஆசியாக்கா!

vanathy said...

அக்கா, நான் இஞ்சி சேர்க்காமல் செய்வதுண்டு. அடுத்த முறை இஞ்சி சேர்த்து செய்து பார்க்கிறேன். நல்ல அருமையா இருக்கு.

ஹைஷ்126 said...

ஹை சூப்பரா இருக்கு நேரம் கிடைக்கும் போது ட்ரை பண்ணி சொல்கிறேன்.

LK said...

நல்ல இருக்குங்க. அப்படியே எனக்கு ஒரு பார்சல்

asiya omar said...

மேனகா,மகி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.ஹைஷ் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

வானதி கோஸ் பொரியல் செய்யும் பொழுது மட்டும் இஞ்சி சேர்த்து பாருங்க,அதன் ருசி அருமையாக இருக்கும்.என்ன என் சமையலில் இஞ்சி பூண்டு டாமினேட் செய்யும்.

asiya omar said...

எல்.கே வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

jagadeesh said...

அருமை... புளிக்குழம்பு எப்போதாவது செய்து காட்டுங்கள்.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு இஞ்சி சேர்த்து செய்தது இல்லை அடுத்த முறை டிரை செய்கிறேன்.

Chitra said...

Adding ginger and onion is a new tip for me. Thank you.

asiya omar said...

நன்றி ஜெகதீஸ்,நிச்சயமாக புளிக்குழம்பு என் ஸ்டைலில் வைத்து காட்டுகிறேன்,சரியா?

asiya omar said...

சாருஸ்ரீ ,ஒரு சித்தா டாக்டர் இஞ்சி சேர்த்து கோஸ் சாப்பிட்டால் நல்லதுன்னு சொன்னதால் இப்படி செய்வதுண்டு.

asiya omar said...

சித்ரா கண்ணாடி எல்லாம் கலக்கலாக இருக்கு.கருத்திற்கு மகிழ்ச்சி.

jagadeesh said...

மிக்க நன்றி அக்கா.

vannila said...

கலக்கிடீங்க போங்க, ம்..ம்..ம்...

asiya omar said...

நன்றி வெண்ணிலா.

Vijiskitchen said...

ஹாய் ஆசியா சுப்பர் பொரியல். நான் இஞ்ஞி சேர்த்து செய்ததில்லை. அடுத்த முறை இதே தான்.

asiya omar said...

வாங்க விஜி நலமா?ரொம்ப நாளாக பார்க்க முடியலை.செய்து பாருங்க,நல்ல மணமாக இருக்கும்.

வைகறை நிலா said...

அற்புதமான பதிவு..
உங்கள் வலைத்தளம் எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கிறது..
வாழ்த்துக்கள்..

asiya omar said...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வைகறை நிலா.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

முட்டைக்கோஸை நறுக்கி வச்சிட்டு பருப்புல போடலாம இல்ல பொறியல் வைக்கலாமான்னு யோசனையோட இருந்தேன். இப்போ பொறியல் வைக்கலாம்னு முடிவு பண்னிட்டேன்.

நளனாக மாறிக் கொண்டுள்ள நவநீதன்.(இது வரைக்கும் நான் சமைச்சத சாப்டுட்டு என் ரூம் பக்கம் வராதவங்க 449 பேர்)