Tuesday, June 29, 2010

பேக்ட் சிக்கன் & வெஜிடபிள்
தேவையான பொருட்கள் ;
முழுக்கோழி - 1 கிலோ
மேகி சூப் கியுப் – 2
சிக்கன் டிக்கா மசாலா (பார்பிகியு) – 2 டீஸ்பூன்
லைம் – 1
உருளை- 2
கொடைமிள்காய் – 2
கேரட் -2
பீன்ஸ் – சிறிதுஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்கோழியை சுத்தம் செய்து முழுதாக தண்ணீர் வடிய வைக்கவும்.


டிக்கா மசாலா, சூப் கியுப்(பொடிக்கவும்) ,லைம் சேர்த்து நன்கு கோழியில் கலந்து வைக்கவும்.குறைந்தது அரை மணி -நேரம் ஊற வைக்கவும்.உப்பு தேவையில்லை,சூப் கியுப்பிலும்,மசாலாவிலும் இருக்கும் உப்பே போதுமானது
குக்கிங் ரேஞ்சில்(கேஸ் ஓவன்) 250 டிகிரி வெப்பம் செட் செய்து மேலும் கீழும் பற்ற வைக்கவும்.


ஒரு பைரக்ஸ் போன்ற பவுலில் ஆலிவ் ஆயில் ஒரு டேபிள்ஸ்பூன் தடவி,கட் செய்த உருளைக்கிழங்கு,பின்பு கேரட்,கொடைமிளகாய் ,பீன்ஸ்,விரும்பினால் வெங்காயம் கூட சேர்த்து அடுக்கவும்.அதன் மீது மசாலாவில் ஊறிய கோழியை வைக்கவும்.சிக்கனை வைத்து மேல் ஒருடேபிள்ஸ்பூன் எண்ணெய்யை விடவும்.

20 நிமிடம் மீடியம் ஃப்லேமில் வைத்து கவனமாக கருகாதபடி சிக்கனை திருப்பி வைக்கவும். மறுபடியும் சிக்கனை
திருப்பி வைத்து இருபது நிமிடம் கழித்து எடுக்கவும்.அலுமினியம் ஃபாயில் போட்டு கவர் செய்யவும்.
திரும்ப அடுப்பை சிம்மில் 160 டிகிரி வெப்பம் வைத்து 10 நிமிடம் வைத்து அணைக்கவும்.சூடான சுவையான பேக்ட் சிக்கன் & வெஜிடபிள் ரெடி.இதனை ரொட்டி,நாண்,குபூஸ் உடன் பரிமாறவும். வெஜிடபிளும் சிக்கனும் சாப்பிட வெண்ணெய் போல சாஃப்டாக இருக்கும்.

-ஆசியா உமர்.


27 comments:

LK said...

gm

Mahi said...

I am also present Asiyakkaa! :)

asiya omar said...

எல்.கே வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.gm ?

மகி வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

LK said...

gud mngoda short form

Chitra said...

Super! whole சிக்கன் ரோஸ்ட் , ப்ளைன் செய்து இருக்கிறேன். vegetables சேர்த்து ரோஸ்ட் செய்வது பார்க்க இன்னும் நல்லா இருக்குது. :-)

asiya omar said...

thanks chitra.

மனோ சாமிநாதன் said...

பேக்கட் சிக்கன் நன்றாக இருக்கிறது ஆஸியா!
வழக்கம்போல் புகைப்படங்களும் அழகு!

asiya omar said...

நன்றி மனோ அக்கா.வருகைக்கு மகிழ்ச்சி.

கே.ஆர்.பி.செந்தில் said...

Present Mam....

நாடோடி said...

நாங்க‌ இங்க‌ க‌டையில் வாங்கி சாப்பிடும் சிக்க‌ன் எல்லாம் நீங்க‌ள் வீட்டில் செய்கிறீக‌ள்... ந‌ல்ல‌ செய்முறை விள‌க்க‌ம்..

ஸாதிகா said...

வித்தியாசமான ரெஸிப்பி ஆசியா.

asiya omar said...

கேஆர்பி

ஸ்டீபன்

ஸாதிகா

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

இப்பவே தேடி பிடிச்சிட வேண்டியதுதான்.

எம் அப்துல் காதர் said...

அப்படியே சிந்தாமல் சிதறாமல் "பேக்ட் சிக்கன் & வெஜிடபிள்" ஒரு பார்சல் அனுப்பிடுங்க. பார்க்கவே ம்ம்ம்ம்..

asiya omar said...

ஜெய்லானி
அப்துல் காதர்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.இருவருக்கும் பார்சல் அனுப்பியாச்சு.

சசிகுமார் said...

என்னங்க எல்லாத்தையும் கலந்து ஒரு பிடி பிடிக்க தயாராயிட்டேன், ஆனா நீங்க அனுப்பன பார்சல் தான் இன்னும் வரவில்லை. சரியான அட்றஸ் போட்டீங்களா

இளம் தூயவன் said...

சிக்கன் அருமை, படங்கள் நன்றாக உள்ளது சகோதரி.

asiya omar said...

சசிகுமார்,நீங்களும் பார்சல் கேட்டீங்களா?

இளம் தூயவன் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

angelin said...

lovely and yummy recipe asiya.kandippa seidhu parkkiren.

angelin.
united kingdom.

Riyas said...

என்ன அக்கா பார்சல் அனுப்புரிங்களா.. அப்டியே எனக்கும் ஒன்னு

Mrs.Menagasathia said...

படங்களும்+செய்முறையும் அருமையாக இருக்குக்கா....

asiya omar said...

ஏஞ்சலின் நிச்சயம் செய்து பாருங்க,நான் ஷான் ப்ராண்ட் மசாலா உபயோகித்துள்ளேன்.மகிழ்ச்சி.

மேனகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ரியாஸ் உங்களுக்கும் பார்சல்,சிக்கனை இப்ப தான் ரெடி செய்கிறேன்.மிக்க மகிழ்ச்சி.

அக்பர் said...

எங்களுக்கும் ஒரு பார்சல்.

asiya omar said...

அக்பர் o.k. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

GEETHA ACHAL said...

Looks so tempting...Chicken looks good...

asiya omar said...

கீதா ஆச்சல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.தமிலிஷ் சப்மிட் செய்தமைக்கு நன்றி.