Tuesday, June 8, 2010

மாசி சம்பல் & வதக்கல்


மாசியை சம்பல் (சாலட் ) செய்தும் சாப்பிடலாம்.சம்பலை அப்படியே வதக்கியும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் ;


மாசி - 1 துண்டு (25 கிராம்)
மிளகாய் வற்றல் -2
உப்பு -தேவைக்கு
வெங்காயம் - 1
தக்காளி -1(விரும்பினால் மட்டுமே)
பச்சை மிள்காய் - 2
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிது
எலுமிச்சை - பாதி
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம் பருப்பு - தலா அரைஸ்பூன்


இப்படி இருக்கும் மாசியை (நன்கு காய்ந்தது) சிறிய தூண்டாக உடைத்து எடுக்கவும்.


அதனை இடி உரலில் இடித்து பின்பு மிளகாய் வற்றல் ,உப்பு சேர்த்து மிக்ஸியில் பரபரவென்று தூள் செய்யவும்.


வெங்காயன்,மிளகாய்,தக்காளி,மல்லி,கருவேப்பிலை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பவுலில் தேங்காய் துருவல்,பொடித்த மாசி தூள்,வெங்காயம்,மிளகாய்,மல்லி கருவேப்பிலை சிறிது உப்பு சேர்க்கவும்.தக்காளி சேர்ப்பதால் ஜூஸியாக இருக்கும்.


நன்கு கலந்து தேவைக்கு எலுமிச்சை பிழிந்து எடுத்தால் மாசி சம்பல் (சாலட்) ரெடி,இதனை இப்படியேயும் பரிமாறலாம்.பொதுவாக எங்க ஊர் பக்கம் தக்காளி சேர்ப்பதில்லை.நான் இங்கு சேர்த்து பார்த்திருக்கிறேன்.சேர்காமல் செய்தாலும் சூப்பராக இருக்கும்.பச்சையாக விரும்பாதவர்கள் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து தயார் செய்த சம்பலை போடவும்.

சம்பலை போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் இறக்கவும்.


சுவையான மாசி வதக்கல் ரெடி.இதனை சாதம்,அரிசிமாவு ரொட்டி, சப்பாத்தி,குபூஸ்,ப்ரெட் உடன் பரிமாறலாம்.
--ஆசியா உமர்.

41 comments:

LK said...

gud mng bye

(nonvegku vera ethuvum ennala solla mudiyaathu)

Riyas said...

மாசி சம்பல் சூப்பர்...

மகி said...

இப்போதான் மாசி கருவாடு போட்டோவைப் பாக்கிறேன்.
சம்பல் கலர்புல்லா இருக்கு ஆசியாக்கா!

நீங்க பதிவுகளை ஷெட்யூல் பண்ணி வைக்கறீங்களா? பழைய டேட்டா வருதே பதிவுகள் அப்டேட் ஆகும்போது?

கே.ஆர்.பி.செந்தில் said...

இங்கு சென்னை பிராட்வேயில் மாசிக் கருவாடு கிடைக்கும்.. மாலத் தீவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் இது பெரும்பாலும் இஸ்லாமிய சமயத்தினர் பயபடுத்தும் உணவு வகைகளில் ஒன்று.. இதன் சம்பல் ருசிக்கு நான் அடிமை..

asiya omar said...

very gud mng l.k.thanks for your visit.

asiya omar said...

ரியாஸ் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஆமாம் மகி ,நேரம் கிடைக்கும் பொழுது குறிப்பு ரெடி செய்து ட்ராஃப்டில் வைத்து பின்பு போஸ்ட் செய்வேன்.போஸ்ட் செய்யும் பொழுது டேட் மாற்றமுடியுமான்னு தெரியலை.

Kousalya said...

மாசி நல்லா இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் சாப்பிட்டது இல்லை. நீங்கள் செய்ததை பார்க்கும் போது சாப்பிட தோன்றுகிறது தோழி !

ஸாதிகா said...

அருமையான மாசி சம்பல்.எங்கள் இல்லத்தில் அடிக்கடிசெய்படும் சைட் டிஷ்.ஆனால் தக்காளி சேர்ப்பதில்லை ஆசியா.

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.கே.ஆர்.பி .ஆமாம் மாலத்தீவு மக்களின் பிழைப்பே இந்த மாசியை நம்பி தான் உள்ளதுன்னு கேள்விபட்டுள்ளேன்.அவர்கள் பண்ட மாற்று முறையில் தான் வாழ்வை ஓட்டுவார்களாம்,துணி,உணவுப்பொருட்கள்,மற்றும் தேவையானவை வாங்க இந்த பதப்படுத்திய மாசியை கொடுத்து அதற்கு ஈடாக மற்ற பொருட்கள் வாங்கி செல்வார்களாம்.

asiya omar said...

கௌசல்யா,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,நன்றி.

asiya omar said...

தோழி ஸாதிகா கருத்திற்கு மகிழ்ச்சி.

Chitra said...

மாசி சம்பல் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுப்பா..... இங்கே கிடைக்கிறதுல..... ஊருக்கு வரும் போது ......... ஒரு கை பாக்க வேண்டியதுதான்.... :-)

Mrs.Menagasathia said...

நல்லாயிருக்குக்கா..இதுவரை மாசி வாங்கி சமைத்ததில்லை...

எம் அப்துல் காதர் said...

எங்க ஊர் பக்கமும் தக்காளி சேர்ப்பதில்லை!

அனால்...

//பச்சையாக விரும்பாதவர்கள் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து தயார் செய்த சம்பலை போடவும்//.

இது வேறு விதமாக தெரிகிறதே.
இது எந்த ஊர் ஸ்டைல் டிஷ் மேடம்!!

இந்த மாசி சம்பல் மட்டும் சைடு டிஷ் ஆக இருந்துவிட்டால் ம்ம்ம்ம்....

எம் அப்துல் காதர் said...

"இது மாலத் தீவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்"- என்பதும் கூடுதலான தகவல். நன்றி கே.ஆர்.பி.செந்தில் + ஆசியா மேடம்.

அன்புடன் மலிக்கா said...

அக்கா மசி வதக்கல் சூப்பர். எங்கம்மா அடிக்கடி இது செய்து தரும் நான் அடிக்கடி செய்வதில்லை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அப்துல் காதர் கருத்திற்கு மகிழ்ச்சி,நான் தான் சும்மா வதக்கி பார்ப்போம்னு செய்தேன்.நல்லாதான் இருந்துச்சு.

asiya omar said...

மலிக்கா உங்களின் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

சகோதரி இவை எங்கள் ஊர் பக்கம் அதிகமாக உபயோகிப்பார்கள். விலை தான் அதிகம் . செய்முறை அருமை.

angelin said...

maasi sambal .tastes very nice and yummy with coconut milk rice.my srilankan friend makes this every newyear.they call this as kiri baath.maasi is my favorite too.my dad used to get it from nagercoil.
sorry for writing in english.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நான் விரும்பி சாப்பிடுவதில் இதுவும் ஒன்று.

மங்குனி அமைச்சர் said...

மாசி - 1 துண்டு (25 கிராம்)மிளகாய் வற்றல் -2உப்பு -தேவைக்குவெங்காயம் - 1தக்காளி -1(விரும்பினால் மட்டுமே)பச்சை மிள்காய் - 2///மேடம் , இத பத்தி கமன்ட் போடவா ?

athira said...

ஆசியா, மாசி என்றால் நான் சும்மாவே சாப்பிட்டு முடித்துவிடுவேன், அதில் வதக்கலா சொல்லவே தேவையில்லை... சூப்பர் ரெசிப்பி.

asiya omar said...

இளம் தூயவன் வருகைக்கு மகிழ்ச்சி,ஆமாம் நல்ல தரமான மாசி கிலோ ரூ 400 என்று முன்பு வாங்கியபொழுது சொன்னதாக நினைவு.

asiya omar said...

ஏஞ்சலின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.
எனக்கு என் கல்லூரித்தோழி ஏஞ்சலின் மார்க்ரெட் நினைவு வந்துவிட்டது.என் திருமணத்திற்கு வந்தாள்,அதன் பின்பு சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கலை.

asiya omar said...

ஸ்டார்ஜன் வருகைக்கு மகிழ்ச்சி,ஊரில் இருந்து இடித்து கொண்டு வந்து விட்டால் வசதியாக இருக்குமே.

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
அக்பர் said...

சிறு வயதில் இருந்தே மாசி எனக்கு பிடித்த ஒன்று. ஊர் திரும்பும் போது வீட்டில் இடித்து ரெடி செய்து தந்து விடுவார்கள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வழமை போல் இன்றும் சமையலில் புதுமைதான் . பகிர்வுக்கு நன்றி

asiya omar said...

ஜெய்லானி வருகைக்கு மகிழ்ச்சி.

அக்பர் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

பனித்துளி சங்கர் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, பார்க்கவே அருமையா இருக்கு. நான் சீனிச்சம்பலுக்கு மாசி சேர்த்து செய்வேன். அதன் சுவையே தனிதான்.

Geetha Achal said...

மாசியினை இப்பொழுது தான் பார்க்கிறேன்...சூப்பர்ப்..

asiya omar said...

வானதி கருத்திற்கு மகிழ்ச்சி.

கீதாஆச்சல் கருத்திற்கு மகிழ்ச்சி.

Raj said...

We would like to do this masi sambal soon.

Can u give gram measurements for onion and tomato?


Thanks

asiya omar said...

ராஜ் வருகைக்கு நன்றி,சின்ன வெங்காயம்-50 கிராம்,தக்காளி - 50 கிராம் (விரும்பினால்)சேர்த்து செய்து பார்க்கவும்.

Raj said...

Today we had you masi vathakkal along with rasam sadam.Very very tasty.Perfect combo with rasam sadam.

In my college days,i had this in one of my close muslim friends house.The same taste i feel today and i remember those days.

Thanks.

I don't know how to vote for this?
can u guide me?

asiya omar said...

Raj,thanks for your comments,
u can create i.d.and save the password. in www.ta.indli.com .when you vote clik likes,thats all,your vote added immediately.