Wednesday, July 7, 2010

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்


1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சிலநேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வப்போது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில்
வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள்.அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.

17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு
அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம், மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை
போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்.

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்என( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு.தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய
நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி
கொள்ளுங்கள்.நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

--ஆசியா உமர்.

-மெயிலில் வந்தது.

22 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல பகிர்வு ஆசியாக்கா.. எப்படி இருக்கீங்க.. ஊர் நிலவரம் எப்படி இருக்கு?.. ஊர்ல எல்லோரும் நல்லாருக்காங்களா.. அனைவரையும் நலம்விசாரித்ததாக சொல்லவும்.

LK said...

தமிழகம் வந்தாச்சா ? வீட்டில் அனைவரும் நலமா ???

பகிர்வுக்கு நன்றி

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ள்... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

இளம் தூயவன் said...

நல்ல பயனுள்ள பதிவு சகோதரி.

Chitra said...

/////பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி
கொள்ளுங்கள்.
நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.////


..... மிகவும் நல்ல குறிப்பு. :-)

How is your vacation coming along? Enjoy.....

asiya omar said...

கருத்து தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கு என் மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறேன்.ஊர் மிக்க அருமையாகவும்,சந்தோஷமாகவும் நாட்கள் கழிகிறது.நேரம் போதாத காரணத்தால் என்னால் உங்கள் ப்ளாக்களுக்கு வர இயலவில்லை.விடுமுறை கழிந்து அனைத்தையும் பார்வையிடுவேன்.அனைவரையும் தேடியதாலேயே இந்த இடுகை.வருகைக்கு மிக்க நன்றி.

asiya omar said...

அப்துல் காதர் said,
ரைட்டு. இது எப்பத்திலிருந்து,, ஆஹா நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்குரோம் டாக்டர் ஆசியா உமர் அவர்களே! ஹி..ஹி..(நீங்க தானே சிரிச்சிக்கிட்டே இருக்கச் சொன்னீங்க)

//மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.//

யம்மாடியோவ் இது ரொம்ப டூ மச்சுங்க..

உங்க கமெண்ட்டை மாடரேட் செய்ய முடியலை,சகோ.அப்துல் காதர்,காப்பி பேஸ்ட் செய்து விட்டேன்.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

நல்ல விஷயங்களை பகிர்ந்ததில் சந்தோஷம்.

கே.ஆர்.பி.செந்தில் said...

வணக்கம் சகோதரி வலைச்சரம் அறிமுகத்தில் உங்களை பற்றி எழுதி இருக்கிறேன் ..

http://blogintamil.blogspot.com/2010/07/blog-post_7544.html

நிலாமதி said...

தினமும் நினைவில் .... வைத்திருக்க் வேண்டிய பதிவு...........பதிவுக்கு நன்றி .....

vanathy said...

//மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.//


உண்மைதான், அக்கா. நல்ல தகவல்கள்.

அமைதிச்சாரல் said...

நல்ல பகிர்வு ஆசியா... ஊர்ல எல்லோரும் நல்லாருக்காங்களா... உங்க விடுமுறை ஜாலியாயிருக்கட்டும்....

ஸாதிகா said...

நல்ல பகிர்வு ஆசியா.ஊரில் இருக்கும் பிஸியான தருணத்திலும் இடுகை இட்டமைக்கு பாராட்டு.அடிக்கடி நெரம் கிடைக்கும் பொழுது வாங்க.

சாருஸ்ரீராஜ் said...

பகிர்வுக்கு நன்றி அக்கா

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள தகவல்கள் அக்கா

அக்பர் said...

இதயத்தை பாதுகாக்க இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள்.

மிக்க நன்றி.

அஹமது இர்ஷாத் said...

Useful information...

Anonymous said...

நல்ல பயனுள்ள பதிவு ஆசியா ஜி ..எப்பிடி இருக்கீங்க ஊரில் எல்லோரும் நலமா இருப்பாங்க என்று நம்பறேன் ..ஊரு விஷயங்கள் பதிவா போடுவிங்க என்று நினைத்தேன் "..30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி
கொள்ளுங்கள்.
நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்."

எனக்கு இங்கே நண்பர்கள் இல்லை அதினால் என்ன உங்களை என் தோழியா ஏத்துகிறேன் உங்கள்க்கு objection ஒன்னும் இல்லையே ?

'ஒருவனின்' அடிமை said...

அன்பு சகோதரிக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.உங்கள் பிளாக் சிறந்ததாக தேர்வு பெற்றுள்ளது,நன்றி

http://penaamunai.blogspot.com/

mkr said...

நல்ல பதிவு சகோதரி

asiya omar said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி mkr .

கோமதி அரசு said...

நல்ல பயனுள்ள பகிர்வு.
நன்றி.