Saturday, July 17, 2010

நெல் மாவு ரொட்டி

தேவையான பொருட்கள் ;

வறுத்த அரிசி மாவு - அரைகிலோ
தேங்காய்த்துருவல் - பாதி தேங்காய்
கொதி நீர் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
நெய் எண்ணெய் கலவை - சிறிது


மாவுடன் தேவைக்கு கொதிக்கும் நீர் ,உப்பு ,தேங்காய் துருவல் சேர்த்து கிளறி வைக்கவும்.

பின்பு மாவை குழைத்து சிறிய உறுண்டைகளாக்கவும்.

படத்தில் உள்ள படி ஒரு வளையம் இருந்தால் ரொட்டி தட்டி போட வசதியாக இருக்கும்.


ஒரு பாலித்தீன் கவரில் எண்ணெய் தடவி வளையம் வைத்து, உருண்டை மாவை வளையத்திற்குள் வைத்து தட்டி எடுக்கவும்.தவாவை அடுப்பில் வைத்து சூடேறியதும் இரண்டு இரண்டாக அல்லது நான்கு நான்காக போட்டு வேக வைக்கவும்.

ஒரு புறம் வெந்ததும் எண்ணெய் நெய் கலவை தடவி திருப்பி போடவும்,ரொட்டி வெந்து மணம் வரவும் எடுக்கவும்.


சுவையான சூடான அரிசிமாவு ரொட்டி ரெடி.இதனை மீன் குழம்பு,கறிக்குழம்பு,மாசிச்சம்பல்,தேங்காய்சட்னியுடன் பரிமாறலாம்.அல்வா, சீனி தொட்டும் சாப்பிடலாம்.

வீடியோவில் செய்முறை பார்க்க கிளிக்கவும்.

--ஆசியா உமர்.

இது நெல்லை இஸ்லாமிய இல்லங்களில் செய்யக்கூடிய
டிஃபன் ஆகும்.அரிசிமாவு ரொட்டியை தான் நெல் மாவு ரொட்டி என்று எங்கள் ஊரில் சொல்வதுண்டு.


26 comments:

Anonymous said...

நெல் மாவு ரொட்டி நல்லா இருக்கு ஆசியா ஜி ..
நாங்க கொண்கனீஸ் கூட இந்த மாதிரி அரிசி மாவு வெச்சு பூரி பண்ணுவோம் அந்த ரெசிபி நான் விரைவில் ப்ளாக் லே போடுவேன் ...பார்த்து எப்பிடி இருக்குன்னு சொல்லுவிங்க தானே ?

ஸாதிகா said...

சிறிய வளையத்தினுள் மாவை வைத்து தட்டுவது நல்ல ஐடியாவாக உள்ளதே.எங்கள் ஊரிலும் இதே முறையில்.இதே சைட் டிஷ் உடன் சாப்பிடுவோம்.மிகவும் அருமையாக இருக்கும்.

LK said...

superrrrrrrrrrr

நாடோடி said...

வித்தியாச‌மாக‌ இருக்கிற‌து... இப்ப‌தான் கேள்வி ப‌டுகிறேன்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி.

அக்பர் said...

சின்ன வயசில் சாப்பிட்டது. அதன் மணமே சாப்பிடத்தூண்டும்.

ஜெய்லானி said...

//வறுத்த அரிசி மாவு (( பொரி அரிசி )) + தேங்காய்த்துருவல் அப்படியே மிக்ஸ் பண்ணிதான் சாப்பிட்டு பழக்கம் . ஆனா இது புதுசா இருக்கு..

இளம் தூயவன் said...

அரிசி மாவு ரொட்டி நன்றாக உள்ளது.

ஹைஷ்126 said...

சிறு வயதில் சாப்பிட்ட நினைவு.

வாழ்க வளமுடன்

athira said...

suvaimikka roddi.

அமைதிச்சாரல் said...

கோதுமைமாவில் அம்மா செஞ்சு கொடுப்பாங்க.சிலசமயம் வெல்லமும் சேர்க்கிறதுண்டு. அரிசிமாவில் இப்பத்தான் பார்க்கிறேன்.இன்னிக்கி நைட் இதான் டிபன்..

asiya omar said...

சந்தியா முதல் கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா ஆமாம் கையால் தட்டுவதை விட இப்படி செய்வது ஈசி.

asiya omar said...

எல்.கே.

ஸ்டீபன்

அக்பர்

ஜெய்லானி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.இளம் தூயவன்

சகோ.ஹைஷ்

இதன் மணமும் ருசியும் அருமையாக இருக்கும்.கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

எம் அப்துல் காதர் said...

//இது நெல்லை இஸ்லாமிய இல்லங்களில் செய்யக்கூடிய
டிஃபன் ஆகும்.அரிசிமாவு ரொட்டியை தான் நெல் மாவு ரொட்டி என்று எங்கள் ஊரில் சொல்வதுண்டு.//

அப்புடீங்களா.. சரி சரி வரும் போது கொஞ்சம் கூடுதலாவே பார்சல் செய்து எடுத்து வாங்கே..(எழுத்துப் பிழை இல்லை.. எங்க மக இப்படி சொல்லுவாக..!)

asiya omar said...

அதிரா

அமைதிச்சாரல்

வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

Riyas said...

எங்க ஊர்லயும் இப்படி ரொட்டி செய்வாங்க நல்லாயிருக்கும்..

asiya omar said...

அப்துல் காதர்,ரியாஸ் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.பாதி விடுமுறை தான் கழிந்திருக்கு.நாட்கள் வேகமாக போகுது.

Kousalya said...

நல்ல வாசனையாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க சொன்ன முறையில் செய்து பார்க்கவேண்டும். விடுமுறை எப்படி கழிகிறது தோழி?

asiya omar said...

கௌசல்யா இது சம்பா அரிசி மாவு என்பதால் மிகவும் வாசனையாக இருக்கும்.புட்டுமாவில் தேங்காய் போட்டு செய்யலாம்.விடுமுறை அருமையாக போகிறது.மற்ற ப்ளாக்கிற்கு தான் வர நேரம் இல்லை.நன்றி தோழி.

angelin said...

hi asiya ,hope you are enjoying your holidays.seydhu parkiren nalaike indha yummy recipe.

kavisiva said...

புட்டுமாவிலும் செய்யலாமா? அப்போ நாளைக்கே செய்துடறேன்.

ஊரில் நல்லா என்ஜாய் பண்றீங்களா?

Hussain Muthalif said...

நெல் மாவு ரொட்டி!..
சாப்ட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சி...
ருசி அப்படியே நினைவுல இருக்கு.
நம்ம ஊரு ஸ்பெஷல்....

"தக்கடி" பத்தியும் எழுதுவீங்கன்னு நெனக்கிறேன்.....கொஞ்சம் கஷ்டம் தான்..

asiya omar said...

thanks angelin.

கவிசிவா கருத்திற்கு மகிழ்ச்சி.நாங்க புட்டு ,கொழுக்கட்டை,ரொட்டி செய்வதற்கு பொதுவாக இப்படி மாவு,இடித்து வறுத்து ரெடி செய்து வைத்து கொளவோம்.

asiya omar said...

ஹுசைன் முத்தலிஃப் வருகைக்கு மகிழ்ச்சி.தக்கடி ஏற்கனவே கொடுத்தாச்சு.டிஃபன்வகை அல்லது மட்டனை கிளிக் செய்தால் பர்த்து கொள்ளலாம்.

மனோ சாமிநாதன் said...

ஆசியா! நெல் மாவு ரொட்டி பார்க்கும்போதே சுவையாகத்தானிருக்கும் என்பது தெரிகிறது! ஊரில் ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?

asiya omar said...

மனோ அக்கா வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.ஆமாம் அக்கா,விருந்து போதும் போதும் என்னும் அளவு உள்ளது.