Tuesday, July 20, 2010

வீச்சுப்பரோட்டா

தேவையான பொருட்கள் ;

மைதா மாவு - 1 கிலோ
பால் - 300 -400 மில்லி
எண்ணெய் - 300 மில்லி
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை - 2
சீனி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

6-8 நபர்களுக்கு.

பால்,முட்டை,தயிர்,உப்பு,சீனி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.


அதனுடன் மாவு 50 மில்லி எண்ணெய் சேர்க்கவும்.


நன்றக கலந்து மாவை பிசைந்து பெரிய உருண்டையாக்கி வைக்கவும்.ஒரு மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டையாக்கி கால் லிட்டர் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து உருண்டைகள் முழுவதும் போட்டு வைக்கவும். 24 உருண்டை வருமாறு பிரித்து வைக்கவும்.பின்பு ஒவ்வொரு உருண்டையும் எடுத்து கையால் வீசி பரத்தியோ அல்லது உருட்டு கொண்டு விரித்து வைக்கவும்.


சிறிது எண்ணெய் தேய்த்து மாவு உருண்டையை மடித்து வைக்கவும்.

பின்பு இப்படி சுற்றி வைக்கவும்.கையால் அல்லது சப்பாத்தி கட்டை கொண்டு பரத்தி எடுக்கவும்.
தவாவில் போட்டு இரண்டு புறமும் இலேசாக சிவற எண்ணெய் சிறிது தடவி பரோட்டாவை சுட்டு எடுக்கவும்.பின்பு அதனை கையால் தட்டி வைக்கவும்.சுவையான பிச்சுப்பூ போன்ற வீச்சுப்பரோட்டா ரெடி.இதனை,சால்னா,குழம்பு,குருமா,கிரேவி வகைகளுடன் பரிமாறலாம்.
குறிப்பு ; முட்டை விரும்பாதவர்கள் சேர்க்காமலும் செய்யலாம்.எண்ணெயில் போட்டு பின்பு மாவு உருண்டையை பரத்தி வீசுவதால் நன்கு இழுவை கிடைத்து பரோட்டா அடுக்காக வரும்.அதே எண்ணெயை பரோட்டா வேகும் பொழுது சேர்ப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.எப்பவாவது இப்படி செய்து சாப்பிடும் பொழுது மிகவும் ஆர்வமாக இருக்கும்.
ஈசியாக பரோட்டா சுட இங்கு செல்லவும்.

--ஆசியா உமர்.

16 comments:

LK said...

hmm nalla irukun sago

Kousalya said...

கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டும் என்று முடிவே பண்ணிவிட்டேன். செய்முறை விளக்கம் படங்களுடன் மிகவும் அருமையாக இருக்கிறது தோழி நன்றி.

கே.ஆர்.பி.செந்தில் said...

வீச்சு புரோட்டா வீட்டுலேயே செய்யலாம் என்று மனைவியிடம் காட்டினால்.. உதவி செய்தா செய்து தர்றேன்னு சொல்றாங்க...

நாடோடி said...

ஆஹா... ந‌ம்ம‌ ஊரு புரோட்டா சூப்ப‌ர்.. என‌க்கு ரெம்ப‌ பிடிக்கும்...

asiya omar said...

கருத்து தெரிவித்த சகோதர,சகோதரிகளுக்கு மிக்க நன்றி.இடுகை இட வேண்டும் ப்ளாக்கில் என்ற ஆசையில் கிடைத்த நேரத்தில் வந்து செல்கிறேன்.முடிந்த போது நிச்சயம் உங்கள் அனைவரின் ப்ளாக்கையும் பார்வை இடுவேன்.

மகி said...

பரோட்டா சூப்பர் ஆசியாக்கா!

srividhya Ravikumar said...

அருமையான பரோட்டா... நன்றி...

சசிகுமார் said...

நல்லாயிருக்கு அக்கா

Umm Mymoonah said...

Veechu parota looks so yummy.
There is an event going on in my blog regarding Iftar, love to have your yummy recipes for the event, check below for the details:
http://tasteofpearlcity.blogspot.com/2010/07/iftar-moments-hijri-1431-event.html

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் அக்கா ரொம்ப ரொம்ப சூப்பராகயிருக்கு..நிச்சயம் செய்து பார்ப்பேன்...

ஜெய்லானி said...

இதை டால்டாவில்( வனஸ்பதி )செய்தால் இன்னும் சூப்பரோ சூப்பர்....

Aruna Manikandan said...

supera irruku :-)

எம் அப்துல் காதர் said...

//இடுகை இட வேண்டும் ப்ளாக்கில் என்ற ஆசையில் கிடைத்த நேரத்தில் வந்து செல்கிறேன்.முடிந்த போது நிச்சயம் உங்கள் அனைவரின் ப்ளாக்கையும் பார்வை இடுவேன்.//

சரிங்க மேடம். வந்தா மார்க் கெல்லாம் போடுவீங்களா டீச்சர். "உருட்டு கட்டை"ய மட்டும் கையில எடுத்து வந்து மிரட்டிடாதீங்க. அப்புறம் நாங்க பயந்து போய்டுவோம்ங்க !!

//சுவையான பீச்சுப்பூ போன்ற வீச்சுப்பரோட்டா ரெடி//

பீச்சுல எங்கங்க பூ பூக்குது?? "பிச்சிப் பூ" என்று அழகான தமிழில் எழுதினா மட்டும் எங்களுக்கு விளங்கிடவா போவுது..

அப்புறம்.. எல்லோரும் நலமே,, நலமுடன் அறிய ஆவல். நிற்க அதற்குத் தக!!

அக்பர் said...

கண்டிப்பா செய்து பார்க்கணும்.

Anonymous said...

enaku parottave sariya varala.. ithula ithai eppadi panrathu

Mano Saminathan said...

பரோட்டா பார்க்கவே மிருதுவாக இருக்கிறது ஆசியா! வழக்கம்போல படங்களும் அருமை!