Thursday, July 22, 2010

கேபேஜ் எக் நூடுல்ஸ் / Cabbage Egg Noodles

தேவையான பொருட்கள் ;

நூடுல்ஸ் ரெடிமேட் பாக்கெட் -400 கிராம் (கறி மசாலா ஃப்ளேவர்)

முட்டை - 3

கோஸ் - கால் கிலோ

வெங்காயம் - 2 பெரியது

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - அரைஸ்பூன்

உப்பு - தேவைக்கு.

5 நபர்களுக்கு.

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் நூடுல்சை
உடைக்காமல் அப்படியே போட்டு வேக வைத்து வடித்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், முட்டை கோஸ் சேர்த்து சிறிது உப்பு தூவி வதக்கவும்.




கோஸ்,வெங்காயம் வதங்கியதும் அடித்து வைத்த முட்டை விட்டு அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வெந்ததும் பிரட்டி விடவும்.


நூடுல்ஸ் பேக்கில் உள்ள கறி மசாலாவை தேவைக்கு சேர்க்கவும்.அதில் உப்பு இருக்கும்.


மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.



பின்பு அத்துடன் வேக வைத்து வடித்த நூடுல்ஸ் சேர்க்கவும்.நன்கு பிரட்டி தேவைக்கு மிளகுத்தூள் சேர்க்கவும்.


சுவையான கேபேஜ் எக் நூடுல்ஸ் ரெடி.குழந்தைகளுக்கும் ஏன் நமக்கும் கூட மிகவும் பிடிக்கும்.
--ஆசியா உமர்.


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.




9 comments:

Chitra said...

yummy noodles! :-)

நாடோடி said...

சுல‌ப‌மான‌ செய்முறை.... ட்ரை ப‌ண்ணுறேன்..

asiya omar said...

சித்ரா,நாடோடி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

LK said...

not related to me ..

சாருஸ்ரீராஜ் said...

easiest one soon i wil try this

vanathy said...

Yummy! Looking good, akka.

சிநேகிதி said...

ரொம்ப ஈசியாக இருக்கு... கட்டாயம் சுவையாகவும் இருக்கும்....

இளம் தூயவன் said...

நல்லா தான் இருக்கு சகோதரி,பார்சல் தான் வந்து சேர மாட்டேங்குது.

Shama Nagarajan said...

super delicious..Thank you dear for linking in the event