Saturday, July 24, 2010

நெல் மாவு / Nel Maavu / Arisi Maavu..

ஊர் கிளம்ப பத்து பதினைந்து நாட்களே இருப்பதால் மாவு மசாலா என்று தயார் செய்ய ஆரம்பிச்சாச்சு,நெல் மாவு ரெடியாகி விட்டது,வேறு வேலை ப்ளாக்கில் போட்டாகனுமே.எங்க வீட்டு உழவி சங்கராவடை தான் மாவு வறுத்து தயார் செய்து தந்தது.

தேவையான பொருட்கள் ;

பச்சரிசி - 15 கிலோ
சிவப்பரிசி - 5 கிலோ
தேங்காய்த்துருவல் - 7 தேங்காய்


பச்சரிசியை நன்றாக கழைந்து மண் தூசி போக கழனியை வடிகட்டவும்.

அடுத்து கழைந்த அரிசியை ஊற வைக்கவும்.

பின்பு ஊறிய அரிசியை அரித்து எடுக்கவும்.


சிவப்பரிசி பச்சரிசி இரண்டையும் கலந்தே அரித்து வைக்கவும்.

பின்பு அதனை மிசினில் கொடுத்து நைசாக திரித்து வாங்கவும்.முன்பு குந்தானி உலக்கை கொண்டு விட்டிலேயே இடித்து அரித்து மாவை வறுப்பது வழக்கம்.மாவை கப்பி நீக்கி பின்பு அந்த கப்பியையும் இடித்து அரித்து நைசான மாவை வறுப்பது வழக்கம்.இப்ப யாரு வீட்டில் உலக்கை கொண்டு இடிக்கிறாங்க.மிசினில் திரிப்பது ஈசி என்று அது பழக்கத்திற்கு வந்து விட்டது.உலக்கையும் குந்தாணியும் சாய்த்து வைத்த மாதிரியே இருக்கு.


அடுப்பை கூட்டி பெரிய இரும்பு வாணலியில் முதலில் சிறிது எண்ணெய் தடவி தேங்காய் துருவல் போட்டு வறுத்து அதன்பின்பு மாவை போட்டு இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும்.வறுத்த மாவை பெரிய பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்கவும்.மொறு மொறுப்பான கமகமக்கும் நெல் மாவு ரெடி.பின்பு பாத்திரத்தை இப்படி துணி கொண்டு மூடி வைக்கவும்.வறுத்த மாவு நன்றாக ஆறி விடும்.பின்பு மறு நாள் மூடியுடன் கூடிய டப்பாக்களில் இறுக மூடி பாதுகாப்பாக வைக்கவும்.இந்த மாவு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.புட்டு,கொழுக்கட்டை,ரொட்டி,தக்கடி என்று இந்த மாவில் செய்து அசத்தலாம்.

--ஆசியா உமர்.

17 comments:

Umm Mymoonah said...

My grandmother used to do all these things by herself and bring it to us, it reminds me of her love and dedication to her kids and her grandchilds.

நாடோடி said...

இந்த‌ மாவில் சீனி போட்டு சும்மாவே சாப்பிட‌லாம்... ந‌ல்லா இருக்கும்.. நானும் ச‌ப்பிட்டுயிருக்கிறேன்..

asiya omar said...

thanks for your loving comments umm mymoonah.

vanathy said...

அக்கா, சூப்பர். இதுக்கெல்லாம் ரெசிப்பி போட்டு ஏன் வயித்தெரிச்சலை கிளப்பிறீங்க அக்கா. ஊரில் இருந்தபோது இப்படித் தான் மாவு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். படங்கள் நல்லா இருக்கு.

asiya omar said...

ஸ்டீபன் ஆமாம் நாங்களும் இப்படி ரெடி செய்த மாவில் முட்டை தேங்காய்ப்பால் சேர்த்து மறுபடி வறுத்து எடுத்து சீனி சேர்த்தால் ஓட்டு மாவு என்ற பெயரில் சாப்பிடுவோம்.

asiya omar said...

கருத்திற்கு நன்றி வானதி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//இந்த‌ மாவில் சீனி போட்டு சும்மாவே சாப்பிட‌லாம்... ந‌ல்லா இருக்கும்.. நானும் ச‌ப்பிட்டுயிருக்கிறேன்.. //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Chitra said...

எனக்கு ஒரு அரை கிலோ பார்சல்லல்லல்!!!!!!!
please....... nice photos. :-)

Mrs.Menagasathia said...

மிகவும ருமையாக இருக்கு...இதுவரை இப்படி நாங்கள் செய்ததில்லை.

இளம் தூயவன் said...

செய்முறை நன்றாக விவரித்துள்ளிர்கள். பெண்களுக்கு உபயோகமான பதிவு சகோதரி.

athira said...

நானும் இப்படிச் சீனி சேர்த்துச் சாப்பிட்டிருக்கிறேன். நன்றாக இருக்கும்.

இது ஓட்டமற்றிக் பதிவாக்கும். ஆசியா ஊரால் வந்தபின் பின்னூட்டங்கள் போடலாம், என இருந்தேன்.

asiya omar said...

ஜெய்லானி
சித்ரா
மேனகா
இளம் தூயவன்
அதிரா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Shaji said...

ஆசியா அக்கா, அரிசியை எவ்வளவு நேரம் ஊற வைக்கணனும் சொல்லலேயே ?

asiya omar said...

சாஜி முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.அரிசியை கழைந்து 1 மணி நேரம் ஊறவைத்து அதனை அரித்து மிசினுக்கு கொண்டு சென்று அங்கு திரித்து தரும் வரை அது ஈரத்துடன் தானே இருக்கும்.பக்குவமாக அரைத்து வந்து விடும்.

Geetha6 said...

super!!

ஸாதிகா said...

நெல்லைபகுதியில் இந்த முறையில்தான் மாவு செய்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.துருவிய தேங்காய் வறுபடும் பொழுது நல்ல வாசனையாக இருக்க்க்கும்.டிரை பண்ணிடுவோம்.

Mahi said...

Nalla irukku asiyakkaa..how did I miss this post? Anyhow, ithellaam unga blog-la paarkka mattum thaan mudiyum, thanks for sharing!