Monday, July 26, 2010

சிக்கன் பார்பிகியூ

நெல்லையில் சிக்கன் பார்பிகியூ செய்து அசத்திய பொழுது எடுத்தது.


தேவையான பொருட்கள் ;

போன்லெஸ் சிக்கன் - 2 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

கெட்டி தயிர் - 200 மில்லி


லைம் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்


சிக்கன் பார்பிகியூ மசாலா - 2 டேபிள்ஸ்பூன்

(விரும்பினால் சிறிது மசாலாவை கூட்டி கொள்ளலாம்.)


(சிக்கன் 65 மசாலாவும் உபயோகிக்கலாம்)


ட்ரை மிண்ட் பவுடர் - சிறிது


உப்பு - தேவைக்கு.

Serves - 8


தேவையான பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிய சிக்கனில் சேர்த்து கலந்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும் அல்லது முதல் நாளே ரெடி செய்தும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.இது தாங்க நாம பார்பிகியூ செய்யப்போற அடுப்பு.எத்தனை கிலோ வேண்டுமானாலும் சுட்டு எடுக்கலாம்.ஒரு முறைக்கு அரைகிலோ வீதம் வைத்து எடுக்கலாம்.


அடுப்பினுள் உள்ளே ஒரு கம்பி தட்டும் ,மேலே கரி வைத்து அதன் மேல் ஒரு கம்பி தட்டும் வைக்குமாறு இருக்கும்.

இப்படி தான் அடுப்பு கரியை வைக்க வேண்டும்.பின்பு நாம் சிறிது எண்ணெய் கலந்த துணியை நெருப்பு பற்ற வைத்து போட்டால் நெருப்பு விரைவில் உருவாகிவிடும்.(சமையல் அல்லது தேங்காய் எண்ணெய் ,ஏன் உபயோகித்த எண்ணெயை கூட அடுப்பை பற்ற வைக்க பயன்படுத்தலாம். மசாலாவில் ஊற வைத்த சிக்கனை இப்படி கம்பி தட்டில் அடுக்கி கொள்ள வேண்டும்.

அடுப்பில் நெருப்பு உண்டானவுடன் ரெடி செய்த சிக்கனை வைத்து சுட வேண்டும்.


இருபுறமும் திருப்பி திருப்பி சுட வேண்டும்.அப்படியே மணம் அடுத்த வீட்டிற்கு கூட போகும் அளவு இருக்கும்.

சிக்கனை சுடும் பொழுது அத்துடன் வெங்காயம் கூட கங்கில் சுட்டு எடுக்கலாம்.

ப்ரவுன் ப்ரெட்,சுட்ட ஆனியன்,சிக்கன் சேர்த்து சாப்பிடும் பொழுது அசத்தலாக இருக்கும்.

சுவையான சிக்கன் பார்பிகியூ ரெடி.போட்டோ தான் சுமாராக வந்துள்ளது.எல்லோரும் மிக ஆர்வமாக சாப்பிட்ட்தால் போட்டோவில் அதிக கவனம் செலுத்த முடியலை.

ஜலீலாவின் பேச்சிலர்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.


--ஆசியா உமர்.

30 comments:

LK said...

நலமாக இருகீர்களா ?

asiya omar said...

மிக்க நலம் எல்.கே.விசாரிப்பிற்கு மகிழ்ச்சி சகோ.

Chitra said...

நெல்லையில் Barbecue வும் வந்துட்டா? நெல்லை மணம் கமழ, பார்க்கவே நாவில் நீர் ஊறுது....

ராஜவம்சம் said...

போட்டோவ பாத்தவுடனே பசிக்கிதுங்க
மெயில்ல அனுப்பமுடியுமா

போட்டோவை அல்ல கோழியை.

நாடோடி said...

ஆஹா... அங்கேயும் போய் உங்க‌ கைவ‌ண்ண‌த்தை காட்டி விட்டீர்க‌ளா...அருமை... போட்டா எல்லாம் ந‌ல்லா வ‌ந்திருக்கு... இந்த‌ அடுப்பு க‌டையில் கிடைக்கிற‌தா?..

ஜெய்லானி said...

பார்பிகியூ சூப்பரா வந்திருக்கு...!!

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கு மிகவும் பிடித்த உணவு ....

சிநேகிதி said...

பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல இருக்கே....
இன்னும் நான் வீட்டில் சமையல்கட்டு பக்கம் போகல.. அம்மாவிடம் காட்டி செய்ய சொல்லனும்..

athira said...

ஆசியா, இப்படிப் படங்களைப் போட்டுக்காட்டி, ஆசையைத் தூண்டி விடுறீங்களே.... ஊரிலிருந்தது போதும் கெதியா வாங்கோ:).

அக்பர் said...

ஊரிலும் விட வில்லையா. பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு.

அமைதிச்சாரல் said...

சௌக்கியமா.....

Mahi said...

ஆசியாக்கா,பார்பிக்யூ-வா? கலக்குங்கோ!

அப்பாவி தங்கமணி said...

wow super...

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Umm Mymoonah said...

Wow! Mouthwatering here, simply irresistable:-)

asiya omar said...

சித்ரா
ராஜவம்சம்
ஸ்டீபன்
ஜெய்லானி
கேஆர்பி
சிநேகிதி
அதிரா
அக்பர்
அமைத்த்ச்சாரல்
மஹி
அப்பாவி தங்கமணி
உம்மைமூனா

நலம்.அனைவரும் நலமா?கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஸ்வேதா உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.ஜிஜிக்ஸ் சென்று பார்க்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு அக்கா.

சே.குமார் said...

போட்டோவ பாத்தவுடனே பசிக்கிதுங்க...

கோழியை மெயில்ல அனுப்பமுடியுமா?

சசிகுமார் said...

என்னங்க வாயில நுழையிற மாதிரி ஏதாவது பேர் வைக்கலாமில்ல

இளம் தூயவன் said...

ம் அருமையாக உள்ளது. செய்முறை படங்கள் நன்றாக உள்ளது.

அஸ்மா said...

சலாம் ஆசியாக்கா! நலமா? எப்போதும்போல் உங்க சமையல் அசத்தலா இருக்கு! வாழ்த்துக்கள்! என் ப்ளாக்கிற்கும் ஒரு விசிட் அடிங்க‌.

Mrs.Menagasathia said...

மிகவும் அருமையாக இருக்கு....உங்களின் எம்டி சால்னா செய்து பார்த்து பதிவு போட்டுள்ளென்.ரொம்ப நல்லாயிருந்தது.பகிர்வுக்கு நன்றி ஆசியாக்கா!!

asiya omar said...

சாருஸ்ரீ
சே.குமார்
சசிகுமார்
இளம் தூயவன்
அஸ்மா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

shahana said...

So tempting recipe!

R.Gopi said...

ஹலொ......

நலம் நலமறிய ஆவல்....

சிக்கன் பார்பெக்யூவா!!

அசத்துங்க......

வந்தேன்..... எட்டிப்பார்த்தேன்.... எஸ்கேப் ஆனேன்ன்ன்ன்.......

vanathy said...

Akka, super recipe.

ஜீனோ said...

ஆசியா சிஸ்டேர்,பார்பிகியூ?? ஜூப்பரு!
அப்பூடியே ஜீனோக்கு ஒரு சோளக்கருது சுட்டுத் தாங்கோ!

asiya omar said...

ஜினோ நலமா? வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.சோளக்கருது சுட்டு சாப்பிட்டால அருமையாக இருக்குமே !தந்திட்டா போச்சு.

zumaras said...

ஸலாம்.
தங்களின் bbq தகவல் அசத்தல்.எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.ரொம்ப நன்றிங்க