Thursday, July 29, 2010

சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு / Bottlegourd moongdal kootu

எங்களுக்கு பிடித்த காய்கறியில் சுரைக்காயும் ஒன்று.இந்த கூட்டு வைத்தால் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் ;

சுரைக்காய் - அரைகிலோ
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிள்காய் - 3
தேங்காய் துருவல் - 4 டேபிஸ்பூன்
மஞ்சள் தூள்- கால்- அரைஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் -சிறிது
கடுகு உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -1-  2 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
மல்லி கருவேப்பிலை - சிறிது.

Serves -6

முதலில் பாசிப்பருப்பை சிவறாமல் இளந்தீயில் வெதுப்பி கொள்ள வேண்டும்.

சுரைக்காயை தோல் சீவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.


பாசிப்பருப்பை சிறிது தண்ணீர்விட்டு வேகவைக்கவும்,பாதி வெந்ததும் சுரைக்காய் போடவும்,கொதி வந்ததும்,சீரகத்தூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.உப்புதூள் தேவைக்கு சேர்க்கவும்.பிரட்டி விடவும்,சுரைக்காயில் தண்ணீர் ஊறும்,மூடி போட்டு வேக வைக்கவும்.விரும்பினால் சிறிய தக்காளியும் சேர்க்கலாம்.
மிக்ஸியில் மிளகாயை இரண்டு சுற்று சுற்றி அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து பரபரவென்று அரைத்து எடுக்கவும்.

வெந்து வரும் சுரைக்காயுடன் அரைத்த தேங்காய் பச்சை மிளகாயை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.


நறுக்கிய மல்லி இலை தூவவும். உப்பு சரிபார்க்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும்,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போடவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து சிவறவும்,பெருங்காயம் போட்டு சிறிது வதக்கி தாளிச்சதை வெந்த சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டில் சேர்க்கவும்.
சுவையான சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு ரெடி.இது  சூடான சாதம் சப்பாத்தி,பூரிக்கு அருமையாக இருக்கும்.
பாசிப்பருப்பு தான் போட்டு செய்யனும் என்று இல்லை. கடலை,பருப்பு துவரம் பருப்பும் போட்டு செய்யலாம்.


--ஆசியா உமர்.

23 comments:

LK said...

paaaka nallathan irukku

srividhya Ravikumar said...

சுவையான கூட்டு... அருமையாக இருக்கு...நன்றி..

சசிகுமார் said...

சூப்பர் அக்கா எப்பவும் போல நல்ல பதிவு

asiya omar said...

எல்.கே
ஸ்ரீவித்யா
சசிகுமார்

வருகைகும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Kousalya said...

அசத்துங்க தோழி..

அமைதிச்சாரல் said...

எங்கூட்ல பாசிப்பருப்பை தவிர்த்து கடலைப்பருப்பில் செய்வேன். இந்தமுறையையும் செஞ்சுபார்க்கணும்.

ஸாதிகா said...

சுரைக்காய் சமைப்பதே இல்லை.உங்கள் குறிப்பு பார்த்ததும் சுரைக்காய் சமைக்க ஆவல் வந்துவிட்டது.

sandhya said...

இது எனக்கும் ரொம்ப பிடிக்கும் தோழி..படங்கள் ரொம்ப அழகா இருக்கு

Chitra said...

நம்மூரு ஸ்பெஷல்! சூப்பரு!

asiya omar said...

கௌசல்யா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் கடலைப்பருப்பு சேர்த்தும் முன்பு குறிப்பு கொடுத்து இருக்கிறேன்.

ஸாதிகா தோழி செய்து பாருங்க .

சந்தியா கருத்திற்கு மகிழ்ச்சி.

சித்ரா ஆமாம் நம்ம ஊர் ஸ்பெஷலே தான்.

Aruna Manikandan said...

Looks delicious :-)

asiya omar said...

thanks aruna.

நாடோடி said...

எங்க‌ள் அம்மாவும் செய்வார்க‌ள்.. ஆனால் இந்த‌ முறையா என்று தெரிய‌வில்லை.. கேட்கிறேன்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி ச‌கோ

Mrs.Menagasathia said...

மிக அருமையாக இருக்கு...

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு இது ரொம்ப பிடிக்கும் அடிக்கடி செய்வேன், கடலைபருப்பு போட்டும் செய்வேன் .இதே மெத்தட் தான் ஆனால் நான் பசிபருப்பு வருத்து செய்றது கிடையாது.

சி. கருணாகரசு said...

அசத்தலான... எளிய வகை கூட்டு....
செய்முறையும்... அதற்கான படமும்.... அசத்தல்.
பகிர்வுக்கு... மிக்க நன்றிங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சுரைக்காய் பருப்பு கூட்டு ரொம்ப நல்லாருக்கும். நான் விரும்பி சாப்பிடுவேன். ரொம்ப நன்றி ஆசியாக்கா.

இளம் தூயவன் said...

என் வீட்டிலும் செய்வார்கள், ஆனால் பருப்பு சேர்க்க மாட்டார்கள். இது வித்தியாசமாக நன்றாக உள்ளது.

vanathy said...

சூப்பர் ரெசிப்பி.

சௌந்தர் said...

சுரைக்காய் பருப்பு கூட்டு ரொம்ப நல்லாருக்கும்

Mahi said...

ஆசியாக்கா,கூட்டு அருமை!

மகேஷ் ராஜ் said...

akka ellam ok but salt podanumnu solla maranthedinga . naanum try panena pin padthen kulampel uppu illa akka

we are bachelor's so we try it yesterday akka .

asiya omar said...

மகேஷ்,சாரிபா,அட டா,தேவையான பொருளில் குறிப்பிட்டு உள்ளேன்,ஆனால் சேர்க்கும் பொழுது சொல்லலையே,நன்றிபா.உப்பை போட்டு விடுகிறேன்,உப்பு போட்டு சாப்பிட்டீங்களா?ருசி எப்படின்னு சொல்லலையே?