Saturday, July 31, 2010

ஆசியாஸ் காளிஃப்ளவர் மஞ்சூரியன் (கிரேவி)

தேவையான பொருட்கள் ;

காளிஃப்ளவர் - மீடியம் சைஸ்

கார்ன்ஃப்லோர் - 3+3 டேபிள்ஸ்பூன்

மைதா - 3 டேபிள்ஸ்பூன்

முட்டை - 1 (விரும்பினால் மட்டுமே)

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 100 மில்லி

வெங்காயம் - 1 பெரியது

பச்சை மிள்காய் - 3

இஞ்சி துருவல் - 2 -3 டேபிள்ஸ்பூன்

சோயாசாஸ்- 2-3 டேபிள்ஸ்பூன்

டொமட்டோ சாஸ் -2-3 டேபிள்ஸ்பூன்

அஜினோமோட்டோ - கால்ஸ்பூன்

ரெட் கலர் - பின்ச்

ஸ்பிரிங் ஆனியன் - சிறிது


காள்ஃப்ளவரை சிறிய துண்டாக்கி கொத்திக்கும் நீரில் போட்டு உப்பு சேர்த்து சிறிது கொதிக்க வைக்கவும்.


கொதி வந்ததும் வடிகட்டி வைக்கவும்.

ஒரு பவுலில் கார்ன்ஃப்லோர்,மைதா,சில்லி பவுடர்,உப்பு,(விரும்பினால் முட்டை) சேர்த்து கரைத்து அதில் காளிஃப்ளவரை போட்டு கலந்து சிறிது நேரம் வைக்கவும்.

பின்பு ஒரு சாலோ ஃப்ரைபானில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காளிஃப்ளவர் முழுவதும் போட்டு சிவற பொரித்து எடுக்கவும்.



வெங்காயம் பச்சை மிள்காய் இஞ்சியை பொடியாக கட் செய்து வைக்கவும்.

கடாயில் காளிஃப்ளவர் பொரித்த எண்ணெயையே விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்து சிவற வதக்கவும்.


வதங்கியதும் பொரித்த காள்ஃப்ளவரை சேர்த்து கிளறவும்.விரும்பினால் அஜினோமோட்டோ சேர்க்கவும்.

பின்பு சோயா சாஸ் சேர்க்கவும்.



சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.இதனை சிறிது பெப்பர் தூவி மல்லி இலை அல்லது ஸ்ப்ரிங் ஆனியன் கட் செய்து போட்டு அப்படியே சாப்பிட்டால் ட்ரை மஞ்சூரியன்.

ரெடி செய்த ட்ரை மஞ்சூரியனில் கார்ன்ஃப்ளோர் 300 - 400 மில்லி தண்ணீரில் கரைத்து விடவும்.அடி பிடிக்காமல் கிளறவும், டொமட்டோ சாஸ் ,பின்ச் ரெட் கலர் சேர்க்கவும்.ஸ்ப்ரிங் ஆனியன் கட் செய்து தூவி பரிமாறவும்.

சுவையான காளிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி.இதனை நாண்,பரோட்டா, சப்பாத்தி.ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.




-ஆசியா உமர்

18 comments:

LK said...

naalaiku ithuthan veetla

Mahi said...

ஆஹா..சூப்பர் ஆசியாக்கா!

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Chitra said...

ஊரில் இருந்து எப்போ வரீங்க? மிஸ்ஸிங் யு.....

sandhya said...

ஆசியா ஜி சூப்பர் காலிபிளவர் மன்சூரியன் ...thanks for the recipe

ஸாதிகா said...

ஆசியாஸ் காளி பிளவர் மஞ்சூரியன்..ம்ம்..சூப்பர்

nis (Ravana) said...

ம் , வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பல வருடங்களாயிற்று

நாடோடி said...

சுவையான‌ ரெசிபி.. போட்டோக்க‌ள் ந‌ல்லா வ‌ந்திருக்கு..

இளம் தூயவன் said...

காளிப்லோவர் மஞ்சூரியன் நன்றாக உள்ளது. அந்த அஜுனமொடவை கொஞ்சம் தவிர்க்க முடியாதா?

எம் அப்துல் காதர் said...

அருமையான பதிவு!! (இந்த "ஆசியாஸ் காளிஃப்ளவர்" எந்த சூப்பர் மார்க்கெட்லங்க கிடைக்கும்) ஹி..ஹி..

asiya omar said...

எல்.கே
மகி
சசிகுமார்
சித்ரா
சந்தியா
ஸாதிகா
நிஸ்
ஸ்டீபன்
இளம் தூயவன்
அப்துல் காதர்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சிநேகிதி said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...கலக்கிட்டிங்க...

asiya omar said...

சிநேகிதி வருகைக்கும் கருத்திற்கும் ,விருதிற்கும் மிக்க நன்றி.

கீதாஆச்சல் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

vanathy said...

akka, super recipe.

asiya omar said...

thanks vanathy.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு அக்கா..

Vijiskitchen said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.
ஆசியாஸ் காளிஃப்ளவ்ர் மஞ்சூரியன்.
நல்ல ப்ராண்ட்ங்க.சூப்பரா சேல் ஆயிடும். விற்பனைக்கு ஏற்ற நல்ல பேர். சூப்பர் ஆசியா.எனக்கு பிடிச்ச அயிட்டம். ஒரு பார்சல் அனுப்பிடுங்க.