Monday, August 2, 2010

முஸ்லிம் சத்திரமும் முட்டை பஜ்ஜியும்/ MUSLIM SATHRAM AND EGG BAJJI


நெல்லையுண்டு நானுண்டு என்வீடுண்டு என்று கிட்ட தட்ட ஒரு மாதம் கழிந்து விட்டது.விருந்து எங்களை இன்னும் விட்டபாடில்லை.அக்கரையில் இறங்கினால் தான் அக்கடான்னு இருக்கலாம்.உற்றார்,உறவினர்களின் அன்பான உபசரிப்பில் திக்குமுக்காடிப்போனோம் என்பது தான் நிஜம்.எப்பொழுதும் எங்காவது ஒரு சில நாட்களாவது ஊர் சுற்றி பார்ப்பது வழக்கம்.இந்த முறை எங்கும் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.எப்பவும் ஊர் வரும் சமயம் பாபநாசத்தில் உள்ள முஸ்லிம் சத்திரம் போய் ஆசை தீர குளித்து வருவோம் .இந்த தடவை போனபோது ப்ளாக்கர் ஆச்சே,கிளிக்காமல் இருக்க முடியுமா?
சிலு சிலுன்னு காற்று சில்லென்ற தண்ணீர் செல்லச்சிணுங்களோடு ஆர்ப்பரித்து ஓடும் தெளிவான நீர் ,வழுக்காத பாறைகள் பார்க்க கண்ணிற்கு குளுமையான இயற்கை காட்சி என்று அருமையான இடம்.
குளிக்க சென்றால் குளிக்க சோம்பல் படுபவர்கள் கூட இரண்டு மணி நேரம் குளிப்பார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்,என் குழந்தைகளை நாங்கள் அடிக்கடி நீச்சல் அடிக்க அழைத்து செல்லும் இடம் இது.மனதிற்கு தைரியத்தையும் அமைதியையும் தரக்கூடிய இடம்.அத்தனை அருமையான அமைதியான இடம்.குளிச்சிட்டு சும்மா வரமுடியுமா ?பசிக்காதா என்ன?
அங்கு சுடச் சுட முட்டை,மிளகாய் பஜ்ஜி போட்டு விற்கிறாங்க.நீங்களும் டேஸ்ட் பாருங்க.
தேவையான பொருட்கள் : அவித்த முட்டை,பஜ்ஜி மாவிற்கு கடலை மாவு,மைதா மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,பூண்டு,உப்பு,சிறிது பஜ்ஜி கலர் அவ்வளவே.

கலந்து மாவு கண் முன்னாடியே ரெடியாச்சு.
அவித்த முட்டையை மாவில் போட்டாச்சு.


ஆஹா எண்ணெய் கொதித்து விட்டது.
முட்டையை பஜ்ஜி மாவில் தோய்த்து போட்டாச்சு.
முட்டை பஜ்ஜி ரெடியாயிடுச்சு.

நீங்களும் சாப்பிட்டு பாருங்க.செம டேஸ்ட்.சுடச்சுட சாப்பிட சாப்பிட ருசி.ஒன்று இரண்டுக்கு மேல் சாப்பிடக்கூடாது.எல்லாம் அளவு தானே.ஒரு பஜ்ஜி ஆறே ருபாய் தான்.சாப்பிட்ட வாயிற்கு சூடாக டீ குடிக்கலாம்.ஆனால் அங்கு விற்ற நுங்கு பதனியை விட முடியுமா ?


பதனியில் இளம் நுங்கை போட்டு அப்படியே பனங்கீற்றில் தருவதை சாப்பிடும் பொழுது அப்படியே அமிர்தம் தான்,எத்தனை கீற்று வேண்டுமானாலும் மனம் கொள்ளும் வரை குடிக்கலாம்.ஒரு கீற்றின் விலை பதினைந்து ருபாய்.வெறும் பதனீ என்றால் பத்து ரூபாய்.சாப்பிட்டால் கண்டிப்பாக பெரிய ஏப்பம் விடனும்.அப்ப தான் அப்பாடான்னு இருக்கும்.
நாங்கள் அனுபவித்த இதன் ருசியை எங்கள் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டாமா?அவர்களுக்கும் அதன் ருசி பிடித்திருந்தது.நெல்லை ஜங்ஷனில் இருந்து சுமார் 45 - 50 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.பாபநாசம் கோவிலில் இருந்து மிகப்பக்கம்.ஒரு முறை போய் ஆசை தீர குளித்து விட்டு பஜ்ஜி,நுங்கு பதனி சாப்பிட்டு விட்டு வாங்க,கோவில் பக்கம் இட்லி வடை கிடைக்கும்.சமைத்து அசத்தலாம்னு பேர் வச்சிட்டு சாப்பாடு பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா?
இது தவிர இந்தப்பக்கம் பாபநாசம் மணிமுத்தாறு அணை ,அருவி,அகஸ்த்தியர் அருவி,பானதீர்த்தம் அருவி, சேர்வலாறுன்னு ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம்.

அப்படியே என் தாய் மண்ணான நெல்லைக்கு பை சொல்லிடலாமா ? மனம் கனத்தாலும் அது நிறைவான கனம். அடுத்த வாரம் அல் ஐனில் சந்திப்போம்.

-ஆசியா உமர்.

குறிப்பு : அழகான முஸ்லிம் சத்திரம் படத்தை கிளிக்கினால் பெரியதாக பார்க்கலாம்.என்னால் இந்த அளவு போட்டோ தான் இணைக்க முடிந்தது.


42 comments:

kavisiva said...

ஆஹா ஆசியா பதனி படத்தை அதுவும் பனங்கீற்றில் பதனிப் படத்தைப் போட்டு என்னை ஜொள்ளு விட வச்சுட்டீங்களே!

முட்டை பஜ்ஜியாவது வீட்டில் செய்துடுவேன். பதனி../. ஊருக்குப் போகும் போது ஒரு எட்டு வந்து கொடுத்துட்டு போங்க :-)

சாருஸ்ரீராஜ் said...

அசத்தலான இயற்கை காட்சி மற்றும் உணவு வகையறாக்கள் .......

சௌந்தர் said...

முட்டைய கட் பண்ணி பஜ்ஜி செய்வாங்க இது புதுசா இருக்கு...

LK said...

பின் தனியாக படத்திற்கு மட்டும் ஒரு பதிவு போடுங்களேன் ?? நல்ல படங்கள்.. நல்ல ஒரு சுற்றுலா

Mrs.Menagasathia said...

பதனியை ஞாபகபடுத்திட்டீங்களே..படங்கள் சூப்பர்ர்...

எம் அப்துல் காதர் said...

// பதனீ சாப்பிட்டால் கண்டிப்பாக பெரிய ஏப்பம் விடனும்.//

ஆஹா அனுபவிச்சு எழுதிய மாதிரி இருக்கு, எல்லாமே அருமை!! நாங்களும் எப்போ ஊருக்கு போவோம்னு ஏங்க வச்சுட்டீங்க மேடம்!!

இளம் தூயவன் said...

உங்கள் விடுமுறையை சந்தோசமாக கழித்து விட்டு ,மீண்டும் ஐக்கிய அரப் எமிரட் திரும்பும் உங்களை அன்போடு வரவேற்கும் வளைகுடா வாழ் பதிவர்கள். குறிப்பு: வரும்பொழுது முட்டை பஜ்ஜியுடன் வரவும் .

ஸாதிகா said...

நுங்குப்பதநீரைக்காட்டி ஆசையைத்தூண்டிவிட்டு விட்டீர்கள் தோழி.சிறு வயதில் இப்படி சாப்பிட்டது எல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றது.

Chitra said...

பதனியில் இளம் நுங்கை போட்டு அப்படியே பனங்கீற்றில் தருவதை சாப்பிடும் பொழுது அப்படியே அமிர்தம் தான்,எத்தனை கீற்று வேண்டுமானாலும் மனம் கொள்ளும் வரை குடிக்கலாம்.ஒரு கீற்றின் விலை பதினைந்து ருபாய்.வெறும் பதனீ என்றால் பத்து ரூபாய்.சாப்பிட்டால் கண்டிப்பாக பெரிய ஏப்பம் விடனும்.அப்ப தான் அப்பாடான்னு இருக்கும்.நெல்லை ஜங்ஷனில் இருந்து சுமார் 45 - 50 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.பாபநாசம் கோவிலில் இருந்து மிகப்பக்கம்.ஒரு முறை போய் ஆசை தீர குளித்து விட்டு பஜ்ஜி,நுங்கு பதனி சாப்பிட்டு விட்டு வாங்க,கோவில் பக்கம் இட்லி வடை கிடைக்கும்


...... மீண்டும் மீண்டும் வாசித்தேன்..... வாயில் நீர் ஊற..... மனதில் ஆசையுடன்..... எப்பொழுது போவோம் என்று இருக்கிறது.... ஊருக்கு வரும் ஆசையை அதிகமாக்கி விட்டீர்கள்.... :-)

vanathy said...

அக்கா, சூப்பர் படங்கள் & பதிவு.
அவித்த கோழி முட்டை ..இன்னும் அதிரா கண்ணில் படவில்லை..

GEETHA ACHAL said...

ஆஹா...படங்கள் அழகு...நல்ல வேளை நீங்க சொன்னிங்க...அதனால் க்ளிக் செய்து பெருசாச்சி பார்த்தேன்...கொள்ளை அழகு...இயற்கை காட்சிகள் தான் எவ்வளவு அழகு...

அமைதிச்சாரல் said...

ஆஹா.. பதனியை கண்ணுல காமிச்சு ஏக்கத்தை உண்டாக்கிட்டீங்களே.. என்னதான் கப்ல குடிச்சாலும் பனங்கீற்றின் வாசனையோடு குடிக்கும்போது தனி ருசிதான்...

நாடோடி said...

ப‌தினி பார்த்த‌தும் குடித்த‌ திருப்தி.... எங்க‌ள் ஊரில் அக்கானி என்று சொல்வோம்...

sandhya said...

ஆசியா ஜி படங்கள் ரொம்ப அழகா இருக்கு அப்போ நேர்ல பார்க்க எவ்ளோ நல்லா இருக்கும் ..அப்புறம் நுங்கு பதனி பார்த்தாலே வாயில்நீர் ஊற சாபிடணம் போல் இருக்கு..பகிர்வுக்கு நன்றி

சசிகுமார் said...

வழக்கம் போல நல்லாயிருக்கு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

athira said...

ஆ... அ.கோ.மு.... ஆசியா, நான் அ.கோ.மு ஐ அப்படியே பொரித்து மட்டின் பிரியாணிக்குள் போடுவதுண்டு, ஆனால் இது புது முறையாக இருக்கே, மா எப்படி முட்டையில் ஒட்டும்??, கஸ்டமெல்லோ?

கால் வச வனீஈஈஈஈ நன்னி...நன்னி..நன்னி.... :).

asiya omar said...

கவிசிவா
சாருஸ்ரீ
சௌந்தர்
எல்.கே
மேனகா
அப்துல் காதர்
இளம்தூயவன்
ஸாதிகா
சித்ரா
வானதி
கீதா ஆச்சல்
அமைதிச்சாரல்
ஸ்டீபன்
சந்தியா
சசிகுமார்
அதிராயில் பஜ்ஜி மாவு முட்டையில் ஒட்டும் செய்து பாருங்க.

உங்கள் அனைவரின் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஹைஷ்126 said...

சீக்கிரமா விடுமுறையில் ஊருக்கு போனாதான் எல்லாம் கிடைக்கும்:)

சூப்பர் பதிவு, நன்றி

வாழ்க வளமுடன்

Gemini said...

Chumma kadavudathade, Naanum vkpuram thaan, muslim chathiram maintenance illama kitakku,perusaa builup kudukkiye..

Gemini said...

Chumma kadavudathade, Naanum vkpuram thaan, muslim chathiram maintenance illama kitakku,perusaa builup kudukkiye..

Gemini said...

Chumma kadavudathade, Naanum vkpuram thaan, muslim chathiram maintenance illama kitakku,perusaa builup kudukkiye..

cheena (சீனா) said...

அன்பின் ஓமர்

நல்ல தொரு பயணக் கட்டுரை - பதனி நுங்கு முட்டை பஜ்ஜி - சாதாரண செய்திகளை நகைச்சுவை கலந்து - புகைப்ப்டங்களுடன் ஒரு இடுகையாக எழுதுவது ..... பலே பலே

நல்வாழ்த்துகள் ஓமர்
நட்புடன் சீனா

asiya omar said...

சகோ.ஹைஷ் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சீனா சார் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

asiya omar said...

ஜெமினி தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.விக்கிரமசிங்கபுரம் வழியாத்தான் போனோம்.அருமையான ஊர்.முஸ்லிம் சத்திரம் - ஒரு ஆறு பகுதியை சிமெண்ட் தரை போட்டா மெயிண்டெய்ன் பண்ணமுடியும்.ஆனால் அங்கு கார்,வேன் போக வசதியாக இருக்கு.காரில் போய் பக்கத்தில் பார்க் பண்ணி இறங்கி தான் போனோம்.எங்களுக்கு பிடிச்சிருக்கு.இதில் கதை விட ஒன்றும் இல்லை.

முத்தரசன் said...

பாபநாசத்தில் அகஸ்தியர் அருவியில குளிசிருக்கோம்... நீங்க சொல்ற இந்த இடம் புதுசா இருக்கு... பார்க்கணும்..

முட்ட பஜ்ஜி ரொம்ப ரெட்டிஷா இருக்கு... ஏதும் கலர் பவுடர் போடுரங்கன்னு தோணுது..

இந்த பதநீர் மேட்டர் சூப்பருங்க... இந்த காலத்துல பணமரமெல்லாம் கள்ளு மட்டும் தான் தருது... என் ஊரு களகாட்டுல அதன் நிலைமை.. படமெல்லாம் போட்டு அசத்திடிங்க..
அடுத்த இன்ப சுற்றுலா குற்றலமோ கண்ணியகுமறியோ இல்ல.... பாபநாசம் தான்......

மிக்க நன்றி...

இமா said...

படங்கள், குறிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது.

அக்பர் said...

முஸ்லிம் சத்திரம் பாபனாசம் பக்கத்தில் எங்குள்ளது அகஸ்தியர் அருவி பக்கத்திலா.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா.. ரொம்ப அருமையான இடமா இருக்கும்போல.. ஊருக்கு போனா இங்கெல்லாம் போகணுமென்று நினைக்க வச்சிட்டீங்களே.. ஆசியாக்கா.. பாபநாசத்தில் இருந்து முஸ்லிம் சத்திரத்துக்கு எப்படி போகணும்?..

ஊருக்கு போனஉடனே ஒரு டிரிப் அடிச்சிரவேண்டியதுதான்.. என்னடா முட்டை பஜ்ஜியை பற்றி ஒண்ணும் சொல்லலியேன்னு பாக்குறீங்களா.. ஆசியாக்கா முட்டை பஜ்ஜியை பற்றி சொன்னாலே இவ்வளவு நல்லாருக்கே.. செய்து அசத்துனாங்கன்னா கேட்கவா வேணும்.

நல்ல பகிர்வு ஆசியாக்கா.

asiya omar said...

முத்தரசன்
அக்பர்
ஸ்டார்ஜன்
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.பாபநாசம் கோவிலில் இருந்து ரைட் கட் செய்து நேரே போனால் முஸ்லிம் சத்திரம்.அங்கு கேட்டாலே வழி சொல்லுவாங்க. போனவுடன் சிறிய இடம் இருக்கும் அங்கு நிறைய பேர் துணி துவைத்து குளிச்சிட்டு இருப்பாங்க,கொஞ்சம் ஒரு நூறு அடி தூரம் நடந்தால் இந்த பெரிய ஆறு போன்ற பகுதி வரும்.அங்கு குளித்தால் அருவியில் குளித்த மாதிரி தான் இருக்கும்.

asiya omar said...

இமா நலமா? நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கீங்க.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

மங்குனி அமைசர் said...

போன இடத்தில சுத்திபாக்காம அங்க போயி பஜ்ஜி வடைனுகிட்டு ,
நீங்களும் பதனி சாப்பிடுவின்களா ? எங்கூரிலும் நிறைய கிடைக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

இயற்கைக்காட்சிகள் அருமை.

sweatha said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Meerapriyan said...

paaba naasam seyyum ramalan maatham muslim sathiram padri padithen. arumai.muddai pajji, pathaneer, nungu padriyum samaiyal kurippum-padangalum asathal.paaraddukal-meerapriyan.blogspot.com

asiya omar said...

நன்றி மீராப்பிரியன் .

மனோ சாமிநாதன் said...

தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com

கோமதி அரசு said...

பதனியில் இளம் நுங்கை போட்டு அப்படியே பனங்கீற்றில் தருவதை சாப்பிடும் பொழுது அப்படியே அமிர்தம் தான்,எத்தனை கீற்று வேண்டுமானாலும் மனம் கொள்ளும் வரை குடிக்கலாம்.//
ஆசியா , நான் குடித்தது இல்லை. நீங்கள் சொல்வதை கேட்கும் போது குடிக்க ஆசை வந்து விட்டது.
இரண்டும் தனி தனியாக சாப்பிட்டு இருக்கிறேன்.

Asiya Omar said...

என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அக்கா..

Asiya Omar said...

கோமதியக்கா கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.ஊர் செல்லும் பொழுது நுங்கும் பதநீரும் சேர்த்து ருசித்து பாருங்க.நெல்லை பை பாஸ், மற்றும் பல இடங்களில் பயணிக்கும் பொழுது ரோட்டோரங்களில் சைக்கிளில் வைத்து வியாபாரம் செய்வார்கள்.

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா உமர் - அன்னிக்கே இங்க மறுமொழி போடும் போதே ஆசியா ஓமர்னு தான் போட்டிருக்கேன் - அன்னிக்கேத் திருத்தி இருக்கலாமே - பரவால்ல - இப்பொழுது வலைச்சரத்து எழுதும் போது திருத்தீட்டிங்க - ! நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Chitra said...

droooooool!