Monday, August 9, 2010

ஈசி நோன்பு கஞ்சி



தேவையான பொருட்கள் ;


பச்சரிசி – 100 -150 கிராம்
வெந்தயம் – அரைடீஸ்பூன்
சீரகம் –அரைஸ்டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் -  1 டீஸ்பூன்

கரம் மசாலா - கால்ஸ்பூன் (விரும்பினால்)
பூண்டு – 4-6 பல்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2

ரம்பை இலை- சிறிது
மல்லி ,புதினா,கருவேப்பிலை – சிறிது
தேங்காய்ப்பால் –பாதி காயில்.
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

முதலில் அரிசியை தண்ணீரில் கழைந்து எடுத்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.சீரகம் வெந்தயம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,பூண்டு பொடியாக அரிந்து கொள்ளவும்.


பின்பு குக்கரில் 750 மில்லி தண்ணீர் வைத்து அரிசியை போட்டு கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் முழுதாய்,மல்லி புதினா இலை,ரம்பை இலை,சீரகவெந்தயப்பொடி சேர்த்து கொதி வரவும் குக்கரை மூடி சிம்மில் 10-15 நிமிடம் வைத்து இறக்கவும்.



கஞ்சி வெந்து இப்படி இருக்கும்.மசித்து கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு வெங்காயம் வதக்கி ,அரைஸ்பூன் இஞ்சி பூண்டு ,கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் தேங்காய்ப்பால் சேர்த்து நுரை கூடி வரும்.


பின்பு தாளித்த தேங்காய்ப்பாலை ரெடி செய்த கஞ்சியில் சேர்த்து விடவும்.உப்பு சரி பார்த்து கொள்ளவும்.இந்த கஞ்சி சத்தானதும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும்.




சுவையான கமகமக்கும் சிம்பிள் நோன்பு கஞ்சி ரெடி.இதற்கு புதினா அல்லது மல்லித்துவையல் அருமையாக இருக்கும்.

நோன்பு கஞ்சி வீடியா சமையல் பகிர்வுக்கு இங்கே கிளிக்கவும்.


முருங்கைக்கீரை கஞ்சி :



மேலே குறிப்பிட்டபடி கஞ்சியை ரெடி செய்து கொள்ளவும்.
ஒரு குத்து முருங்கைக்கீரை, ,சிறிது நறுக்கிய வெங்காயம்,4 பல் பூண்டு ,கால்ஸ்பூன் சீரகம் ,1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ரெடி செய்து கொள்ளவும்.



கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் வெடித்து,வெங்காயம்,பூண்டு ,முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.



ஏற்கனவே தயார் செய்த கஞ்சியை ஒரு பவுல் எடுத்து அதில் ரெடி செய்த கீரையை சேர்த்து கலந்து பரிமாறவும்.இந்த கஞ்சியை நிறைமாத கற்பிணிக்கு கூட கொடுக்கலாம்.மிகவும் சத்தானதும் ருசியானதும் ஆகும்.தனியாக கீரை கஞ்சி செய்ய அரிசி பாதி வெந்து வரும் பொழுது கீரை சேர்த்து மேற் சொன்னபடியும் கஞ்சி தயாரிக்கலாம்.அல்லது கஞ்சி ரெடியானபின்பு ரெடி கீரையை கலந்து பின்பும் பரிமாறலாம்.


சுவையான முருங்கைக்கீரை கஞ்சி ரெடி.


-ஆசியா உமர்.



பிஷ் கஞ்சிமேலே குறிப்பிட்ட படி கஞ்சியை ரெடி செய்து கொள்ளவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு துண்டு முள் இல்லாத மீனை,உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து பின் பொரிக்கவும்.பொரித்த மீனை உதிர்த்து கொள்ளவும்.
மீன் பொரித்த அந்த கடாயில் நறுக்கிய வெங்காயம்,இரண்டு பல் பூண்டு ,மல்லி இலை வதக்கி பொரித்து உதிர்த்த மீனை போட்டு நன்கு வதக்கவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.
ஒரு பவுலில் ரெடி செய்த கஞ்சியை எடுக்கவும்.பொரித்து உதிர்த்து தயார் செய்த மீனை போட்டு கலந்து பரிமாறவும்.



சூப்பர் சுவையுள்ள பிஷ் கஞ்சி ரெடி.



குறிப்பு :

நோன்பு காலத்தில் வித விதமாக கஞ்சி போட்டு அசத்தலாம்.வெஜ் கஞ்சி,மட்டன் கீமா,சிக்கன்,பயறு வகைகள் சேர்த்தும் செய்யலாம்.நான் இதனை டேஸ்ட் ஆஃப் பேர்ல் சிட்டி இஃப்தார் இவென்ட்க்கு அனுப்புவதால் வித்தியாசமாய் இருக்கட்டுமேன்னு கீரைக்கஞ்சி ,மீன் கஞ்சி செய்து இருக்கிறேன்.
-ஆசியா உமர்


30 comments:

kavisiva said...

நோன்புக் கஞ்சி எனக்கு ரொம்பவே பிடிக்கும். நீங்க விதம் விதமா ரெசிப்பி கொடுத்திட்டீங்க. இனிமே என்ன செய்து சாப்பிட வேண்டியதுதான். எங்கள் ஊரும் ரமலான் மாதத்திற்கு கலக்கலாக தயாராகிறது

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

எனக்கும் நோன்புக்கஞ்சி ரொமப் பிடிக்கும்..விதவிதமான கஞ்சி அசத்தலா இருக்கு...

புவனேஸ்வரி ராமநாதன் said...

அனைத்தும் அருமை.

Pavithra Srihari said...

kanji romba rich irukkae photola ... variety super .. athuvum bowls athavida super

asiya omar said...

கவிசிவா தவறாமல் கருத்து தெரிவிப்பது மிக்க மகிழ்ச்சி.இந்தோனேஷியா முஸ்லிம்கள் நிறைந்த நாடாச்சே.ரமலான் நாட்களை எஞ்சாய் பண்ணுங்க.

asiya omar said...

சசிகுமார்
மேனகா
பவித்ரா
புவனேஸ்வரி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

Umm Mymoonah said...

Thank you Asiya for this varieties of kanji, it's must in our home during ramadhan. Perfect entry for the event.

சாருஸ்ரீராஜ் said...

எங்க வீட்ல எல்லோர்கும் நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும் , கட்டாயம் செய்து பார்கிறேன். பார்கும் போதே சுவைக்க தோன்றுது.

Riyas said...

நோன்புக் கஞ்சி நோன்பு திறக்க ஏற்ற உணவு..

LK said...

நல்ல இருக்கே.. வாழ்த்துக்கள்

Kousalya said...

இப்பவே சாப்பிட தோணுகிறது தோழி....படங்களும் அருமை.....

உங்கள் விருது எனது மற்றொரு பிளாக்கை அலங்கரிக்கிறது மிக அழகாக..
http://sanvishblue.blogspot.com/
....

சிநேகிதன் அக்பர் said...

டிப்ஸ் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

காலையில்தான் எப்படி செய்யணும்னு யோசிச்சேன். சரியான நேரத்தில் சரியான இடுகை.

சிநேகிதி said...

அக்கா நோன்பு கலை கட்ட தொடங்கிவிட்டது..ரொம்ப சிம்பிளான கஞ்சி அருமையக்கா

நாடோடி said...

நோன்பு க‌ஞ்சி ந‌ல்லா இருக்கு... ப‌ட‌ங்க‌ளும் அருமை.

எம் அப்துல் காதர் said...

மூன்று வகை டேஸ்டில் சுவையான நோன்புக் கஞ்சி. அருமை.
"RAMADAN KAREEM"

asiya omar said...

umm mymoonah thanks for your visit and comments.

asiya omar said...

சாருஸ்ரீ
ரியாஸ்
எல்.கே.
கௌசல்யா
அக்பர்
சிநேகிதி
நாடோடி
அப்துல் காதர்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

நோன்பு கஞ்சி, அது இல்லாமல் நோன்பு திறக்க முடியாது என்கின்ற அளவுக்கு கஞ்சியோடு நெருக்கம். அத்தோடு ஒரு புலி சம்பால். மப்ரூக்.

angelin said...

wow .this looks so yummy.ifew ago my sister in law told me about this.thanks for sharing the recipe.
angelin Nirmala.

angelin said...

oh just now i checked the comment instead of typing few days ago ,i missed out letters while typing .i ve never tasted this yummy food .i m gonna make this today.can i use red rice in this recipe

asiya omar said...

இளம் தூயவன்
ஏஞ்சலின்
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.ஊரில் பள்ளிவாசலில் இருந்து வரும் அந்த டேஸ்ட் வேறு.இங்கு தினமும் வெரைட்டியாக செய்து அசத்தலாம்.

Maria Mcclain said...

Looks too yummy & delicious I will try it myself now anyway your blog is too outstanding and eye catching,you should try website for advertising and marketing.

Mahi said...

மூணு வித ரெசிப்பி தந்திருக்கீங்க..மூணாவது நான் செய்யமாட்டேன்..ரெண்டாவது செய்ய முருங்கைகீரை கிடைப்பதில்லை.:-|

முதல்ல இருக்க கஞ்சி செய்யலாம்னா..ஒரு டவுட்டு!:) பாஸ்மதி அரிசில செய்யலாமா ஆஸியாக்கா?

asiya omar said...

மகி நான் பாசுமதி அரிசியில் தான் செய்தேன் .தாராளமாக செய்யலாம்.ஊருல் இருந்து கொண்டு வந்த கீரையை வைத்து செய்தேன்.வெஜ்டபிள்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

Vijiskitchen said...

super recipe. I love it. I want to try veg variety. Post more nonunu receipes.

Vijiskitchen said...

எனக்கு உங்க நோன்பு கஞ்சி ரெசிப்பி ரொம்ப பிடிச்சிருக்கு. சிம்பிளா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

asiya omar said...

விஜி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.செய்து பாருங்க.உங்களுக்காக இன்னும் சிம்பிள் கஞ்சி ரெசிபி கொடுக்கிறேன்.

Syed Saleem said...

அன்பு அக்காவிற்கு,
ஆயிரம் நன்றிகள் இந்த உணவு செய்முறையை சொல்லி தந்ததற்கு
துணைவியார் ஊர் சென்று விட்டதால் தேடியலைந்த எனக்கு
இன்று ஒரு அருமையான வாய்ப்பு.
The recipe turned out exceddingly good and i have given it to all my neighbours too.

Dhanabalan G said...

Asiya akka,
Firstly,thank you somuch for your timely help in replying our queries to make this yummy 'murungai keerai kanji'.
It was sooooo delicious in taste & there was nothing left and we wish we could have made it more.More demand from my friends when we made today,but we could prepare only this measure as we don't have big cooker than this.we totally loved and enjoyed having it,my friends liked it somuch and they want to prepare it often and they conveyed their thanks to you for sharing this recipe..Luckily here we get murungaikeerai all the time,we are going to make it once a week for sure,healthy one & superb taste.
Your empty salna recipe we liked it to the core and going to make it on all weekend.
Because of this awesome taste,we made it the next day again & had it with parotta.
We tried 2 recipes from your blog sofar. Rendume marrakka mudiyatha suvai.
Thank you somuch for sharing lovely recipes and plz keep posting more & more recipes.