Thursday, August 12, 2010

மில்க் அகார் அகார்

கோடைக்காலம் அல்லது நோன்பு காலத்தில் தயாரிக்கும் உணவு வகையில் இது மிக முக்கியமானது, நோன்பு திறக்கும் பொழுது இதனை சாப்பிடும் பொழுது வயிறு குளுமையாக இருக்கும். அகார் அகார் அல்லது சைனா கிராஸ் என்றால் கடற்பாசிதான். விதம் விதமாய் தயாரிக்கலாம்.நான் இதனை சிம்பிளாக செய்து காட்டியிருக்கிறேன்.

தேவையான பொருட்கள் ;
கடற்பாசி - ஒரு கைபிடியளவு
சீனி - 6 டேபிள்ஸ்பூன்
பால் - கால் லிட்டர்( விரும்பினால் அதிகமாகவும் சேர்க்கலாம்,தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ளலாம்)
தண்ணீர் - அரை- முக்கால் லிட்டர்

இப்படி பாக்கெட்டில் அகார் அகார்(கடற்பாசி)கிடைக்கும்.
ஒரு கைபிடியளவு கட் செய்து எடுத்து கொள்ளவும். . பின்பு 15 நிமிடம் சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின்பு ஒரு அரைலிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிம்மில் அடுப்பை வைத்து அது ஓரளவு கரையும் வரை காய்ச்சி எடுக்கவும்.

கால் லிட்டர் காய்ச்சிய பாலை சேர்க்கவும்.6 டேபிள்ஸ்பூன் சீனி சேர்க்கவும்.நன்கு சேர்ந்து காய்ச்சி எடுக்கவும்.
காய்ச்சியதை வடிகட்டி கொள்ளவும்.
பின்பு இப்படி அகலமான பாத்திரம் அல்லது தட்டில் விட்டு ப்ரிட்ஜில் வைத்து உரைய வைக்கவும்.


ப்ரிட்ஜில் வைத்து உரைந்த பின்பு கட் செய்து பரிமாறவும்.
காய்ச்சிய பின்பு பாலில் ரோஸ்மில்க் எசன்ஸ் அல்லது வெனிலா எசன்ஸ் அல்லது பாதாம் எசன்ஸ் சில துளிகள் சேர்த்தும் உறைய வைக்கலாம்.


சுவையான கூல் கூல் மில்க் அகார் அகார் ரெடி.
பக்குவமாக காய்ச்சி வடிகட்டுவதில் தான் அதன் சாஃப்ட்னெஸ்,ருசி அருமையாக வரும்.
-ஆசியா உமர்


25 comments:

LK said...

mm inga irukara veyiluku nalla irukkum

srividhya Ravikumar said...

mm...romba nalla irukku..romba nal asai akar akar seiyanumnu...nandri asia..

vanathy said...

அக்கா, சூப்பரா இருக்கு. எனக்கும் கொஞ்சம் அனுப்புங்கோ.

Mrs.Menagasathia said...

நல்லாயிருக்குக்கா..

துளசி கோபால் said...

வெறும் பாலுக்கு பதிலா கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்து செஞ்சு பாருங்க. ருசி கூடும்.

இதுலே பழங்களைத் துண்டுகளாக்கிச் சேர்க்கலாம்.

டின்னில் வரும் மிக்ஸட் ஃப்ரூட்களைச் சேர்ப்பேன். அருமையான டிஸ்ஸர்ட் கிடைக்கும்.

ஒன்று கூடல் நிகழ்ச்சிகளில் இது கொண்டு போவேன்.

ஐஸ்க்ரீம் போல எளிதில் கரைஞ்சு தண்ணி ஆகாது. ஃப்ரிட்ஜ் இல்லாத இடங்க்ளிலும் சமாளிக்கலாம்.

jagadeesh said...

அக்கா, நோன்பு இருப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் என்ன?தெரிந்து கொள்ள ஆவலை உள்ளேன்.

நாடோடி said...

சிம்பிள் டிஷ் ந‌ல்லா இருக்கு ச‌கோ... அகார் அகார் என்றால் என்ன‌ என்று இப்ப‌ தான் தெரிந்து கொண்டேன்..

asiya omar said...

எல்.கே
ஸ்ரீவித்யா
வானதி
மேனகா
அனைவரின் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

துளசி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஜெகதீஸ்
ரமலான் மாதம் அறிவியல் ரீதியாக
வருடம் முழுவதும் சுயக்கட்டுப்பாடுடன் வாழ்வதற்கும் பயிற்சி அளிக்கும் மாதம்.
உடல் உறுப்புக்கள் அனைத்திற்கும் ஓய்வு அளிக்கும் மாதம்
அனைத்து உடல் உறுப்புக்களும் இம்மாதத்தில் தூய்மை பெற்று புதுப்பொலிவுடன் செயல்பட உதவுகிறது.

asiya omar said...

நாடோடி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

நல்ல உணவு, நோன்பு நாட்களில் அனைத்து வீடுகளில் செய்வார்கள். செய்முறை அருமை.

அமைதிச்சாரல் said...

அகர் அகர்.. டேஸ்ட் மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது என்று கேள்விப்பட்டிருக்கேன்.

உங்க ரெசிப்பி சூப்பரா இருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

ஈசியா இருக்கு அக்கா டிரை பண்ணி பார்கிறேன்,ஜலீலா அக்கா குறிப்பில் இருந்து இளநீர், டாங்க பவுடர் போட்டு செய்து பார்த்து இருக்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் , ரமலான் மாத வாழ்த்துக்கள்

Anonymous said...

ஆசியா ஜி சூப்பர்

சசிகுமார் said...

சூப்பர் அக்கா கலக்கி புட்டீங்க

asiya omar said...

இளம் தூயவன்
அமைதிச்சாரல்
சாருஸ்ரீ
சந்தியா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா said...

நோன்புகாலத்திற்கு ஏற்ற உணவு.இனி ஒரு மாதம் வரை இது இல்லாமல் இருக்காது.அழகாக கட் செய்து பறிமாறி உள்ளீர்கள் ஆசியா.

ஒ.நூருல் அமீன் said...

ரம்ஜான் ஸ்பெஸல் உணவு.
குடும்பத்தினர் விடுமுறையில் இந்தியாவில் இருப்பதால் உங்கள் சமையல் குறிப்பு உதவுகிறது.

asiya omar said...

ஸாதிகா
நூருல் அமீன்

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு ஆசியா

நிறைய பதிவு இருக்கு மெதுவா தான் பார்க்கனும்

asiya omar said...

நன்றி.ஜலீலா.

Divya Pramil said...

Looks so delicious :)
Today's Recipe - Carrot Beans Stir-Fry / Carrot Beans Poriyal
You Too Can Cook Indian Food Recipes

naanani said...

நான் கேள்விப்படாத புது ருசி. கட்டாயம் செய்து பார்ப்பேன். சுகர் இருக்கு ...கொஞ்சமா சர்க்கரை சேத்துக்கலாமா? மேலும் துள்சியின் என்ஹான்ஸிங்கும் சூப்பர். மிக்க நன்றி ஆசியா உமர்!