Sunday, August 15, 2010

”எலேய்” சிறுகதை


சுதந்திர தினத்தையொட்டி ஒரு சிறு கதை சொல்லி என் அன்பான வாழ்த்தை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

“எலேய் “

மணிகண்டன் சார் நுழையும் பொழுதே இவ்வாறு சத்தம் கொடுப்பது வழக்கம்.
“ சார் வந்திட்டாவ ”என்ற ஒரு மாணவன் கொடுத்த குரலில், அனைத்து மாணவர்களின் சப்த நாடியும் ஒடுங்கிப்போனது நிஜம்.

“எலேய் ” , ”நேத்து என்ன நாள்லேய் ? ”
சுதந்திரதினம் சார்.
”எல்லாரும் கொடியேத்த வந்தியலா?”
ஆமா சார் ,மிட்டாய் தந்தாங்க சார்.
”சுதந்திர தினம்னால் கொடியேத்தியவுடன் மிட்டாய் வாங்குவதுக்குன்னே வந்தியலோ ! ”
எலேய் , ”எத்தனை பேருக்குல நம்ம தேசியக்கொடி வரைய தெரியும்?.”
சார் ,”நம்ம செந்தில் நல்லா வரைவான் சார்.”
மூச்....” எல்லாரும் ஒரு பேப்பரை எடுங்க,தேசியக்கொடியை வரைஞ்சு கலர் அடிச்சு கொண்டாங்கடா,”
இன்னைக்கு வகுப்பு நடத்த போறதில்லை எவனாவது தப்பா வரைஞ்சீங்க, ”பிச்சுப்புடுவேன் பிச்சு. ஜாக்கிரதை. ஆறாம் வகுப்பு வந்தாச்சில்ல. வரைங்கடா ..ஒருத்தனை ஒருத்தன் பார்க்க கூடாது ஆமா.”
”எலேய் , சிங்காரம் நீ மட்டும் ஒழுங்க வரையல ஊட்டுக்கு அனுப்பிடுவேன் .”
சோம்பேறி சிங்காரத்தை எப்படியாவது ஆளக்கனும்னு சாருக்கு ஆசை,ஆனால் எருமை மாடுக்கு கூட சொரனை இருக்கும் இவனுக்கு கிடையாது. எத்தனை முறை திட்டினாலும் எதுவும் மண்டையில் ஏறாது.
எல்லாரும் வரைய ஆரம்பிச்சானுவ.செந்தில் முதலில் வரைந்து முடித்து விட்டான் அழகாக கலர் கொடுத்து அப்படியே கண்ணில் ஒத்திக்கொள்வது போல் அச்சடிச்ச மாதிரி இருந்தது
.


எல்லாப்ப்யல்வளும் செந்தில் வரைஞ்சா சரியாத்தான் இருக்கும்னு காப்பி அடிச்சி கலர் பென்சிலை கடன் உடன் வாங்கி வரைஞ்சி முடிச்சிட்டானுவ.
மக்கு சிங்காரமும் வரைஞ்சி முடிச்சாச்சு.

”எல்லாபயல்வளும் பேப்பரை கொண்டாங்க ”என்று சார் போட்ட சப்தத்தில் அனைத்து பேப்பரும் சாரின் மேஜைக்கு வந்தது.

முதலில் நம்ம செந்தில் பேப்பர்,அடுத்து வரிசையாக எல்லாரும் கொடுக்க கடைசியாக நம்ம மக்கு சிங்காரம் கொடுத்தவுடன் சார் பேப்பரை திருத்த ஆரம்பித்தார்.

”ஒரு சத்தம் வரக்கூடாது ஆமா.”என்ற சாரின் சொல்லிற்கு அப்படியே வகுப்பு நிசப்தமானது.

எல்லாப் பேப்பரையும் திருத்திய சாரின் முகத்தில் ஈயாடலை.
எலேய் ,”எல்லாமுட்டாப் பசங்களும் செந்திலை பார்த்து காப்பியடிச்சையளோ !”செந்தில் வரைஞ்சா சரியா இருக்குமோ?
”இல்லை சார், ஆமாம் சார்”.
எலேய் ஆமாவா இல்லையாடா ?
சார் ,”நான் காப்பியடிக்கலை சார் ”என்ற சிங்காரத்தை ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்தார், மணிகண்டன்.

ராசா நீ மட்டும் தான் சரியா வரைஞ்சிருக்கே எப்படிடா ?
சார், ”எங்கம்மா நேத்து சோறு போடும் பொழுது பச்சையா வாழை இலையை போட்டு வெள்ளையா சோறு வச்சி குழம்பு ஊத்துச்சு சார்,அப்ப சொல்லுச்சு நம்ம தேசியக்கொடி கலரை நினைவுல வச்சிக்க பச்சை இலை,வெள்ளைக்கு சோறு சிவந்த நிறத்துக்கு குழம்புன்னு அதான் சார் கரீட்டா வரைஞ்சிட்டேன் என்றான்.சக்கரத்திற்கு ஒரு வெங்காயத்தை வெட்டி வைச்சிச்சு சார்.”


டேய், ”எல்லோரும் கேட்டுக்கோங்க,இனிமே கலர் மாத்தி வரைஞ்சீங்க பின்னிப்புடுவேன் பின்னி ஜாக்கிரதை.”

செந்தில் தப்பா இலையை மேலே போட்டுட்டானேன்னு, எல்லா மாணவர்களும் அவனை முறைக்க சிங்காரம் ஹீரோவாகிவிட்டது அனைத்து மாணவர்கள் அவனை பார்த்ததிலேயே தெரிந்தது.

மணிகண்டன் சாருக்கு சந்தோஷம் தாங்க முடியலை,”நம்ம சிங்காரம் இனிமே தேறிடுவாம்ல” என்றார்.
எலேய்,”நான் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க வீட்டுல பிள்ளேளுக்கு பாடத்தை தாய்மாரும் சொல்லிக்கொடுக்கனும்ல” என்றார்.


--ஆசியா உமர்.

34 comments:

ஹைஷ்126 said...

ஜெய்ஹிந்த் :)

LK said...

கதை அருமை. அதை மூன்று வர்ணத்தில் கொடுத்தது மிக அருமை . உங்களுக்கும் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

கதை டேஸ்டாக இருக்கிறது...

asiya omar said...

சகோ.ஹைஷ்

ஜெய்ஹிந்த் !

வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.

asiya omar said...

வாழ்த்துக்கள் எல்.கே .மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

கேஆர்பி.கருத்திற்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
கதையும் அதில் வரும் பெயரும் கற்பனையே.உங்கள் பெயர் தற்செயலாக அமைந்துவிட்டது.

athira said...

வாழ்த்துக்கள்.

ஜெய்ஹிந்த்:).

கதை நன்றாக இருக்கு ஆசியா.

kavisiva said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

asiya omar said...

வாழ்த்துக்கள்.நன்றி அதிரா.

Padhu said...

Nice story .Happy Independence Day

இளம் தூயவன் said...

கலரை வைத்து ஒரு கதையை வரைந்து விட்டிர்கள்,நன்றாக உள்ளது.

அஹமது இர்ஷாத் said...

Story Super.. Continue...

நாடோடி said...

க‌ருத்துட‌ன் கூடிய‌ க‌தை ந‌ல்லா இருந்த‌து ச‌கோ.. இனிய‌ சுத‌ந்திர‌ தின‌ ந‌ல் வாழ்த்துக்க‌ள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

கதை மிக அருமை அக்கா!! ஜெய் ஹிந்த்!!

எஸ்.கே said...

கதை மிக நன்றாக உள்ளது! சுதந்திர தின வாழ்த்துக்கள்!

angelin said...

colourful story .independence day wishes to you .

asiya omar said...

கவிசிவா
பத்தூ
இளம்தூயவன்
அஹமதுஇர்ஷாத்
நாடோடி
புவனேஸ்வரி
மேனகா
எஸ்.கே
ஏஞ்சலின்
அனைவரின் கருத்திற்கும் நன்றி.சுதந்திரதின வாழ்த்துக்கள்.

இலா said...

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !
அருமையான கதை ஆசியா அக்கா!

எம் அப்துல் காதர் said...

//நான் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க வீட்டுல பிள்ளேளுக்கு பாடத்தை தாய்மாரும் சொல்லிக்கொடுக்கனும்ல//

உண்மைதான். அருமையா இருக்கு டீச்சர்!!

தெய்வசுகந்தி said...

நல்ல கதை!!!!!!!

சிநேகிதன் அக்பர் said...

கதை அருமை. சுதந்திர தின வாழ்த்துகள்.

இதுக்கும் சாப்பாட்டை எடுத்துக்காட்டா கூறி சமையல் ராணின்னு நிருபிச்சிட்டிங்க :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கதை.. வீட்டுபாடமும் சொல்லிக்கொடுக்கணும்.. இனிய சுதந்திரதின வாழ்த்துகள் ஆசியாக்கா..

சாருஸ்ரீராஜ் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா , இரண்டு வருசதுக்கு முன்னாடி என் பசங்க தப்பா கொடியை குத்திகிட்டதை பார்த்து , நானும் இப்படி தான் சொன்னேன் , (எதோ புத்தகத்தில் படித்தது )அதை இன்று வரை கொடி எப்படி குத்தனும்னு கேட்டா இலை போட்டு அப்படின்னு தான் அர்த்தம் சொல்லுதுங்கள்.

Chitra said...

ராசா நீ மட்டும் தான் சரியா வரைஞ்சிருக்கே எப்படிடா ?
சார், ”எங்கம்மா நேத்து சோறு போடும் பொழுது முதலில் பச்சையா வாழை இலையை போட்டு வெள்ளையா சோறு வச்சி குழம்பு ஊத்துச்சு சார்,அப்ப சொல்லுச்சு நம்ம தேசியக்கொடி கலரை நினைவுல வச்சிக்க முதலில் பச்சை இலை,வெள்ளைக்கு சோறு சிவந்த நிறத்துக்கு குழம்புன்னு அதான் சார் கரீட்டா வரைஞ்சிட்டேன் என்றான்.சக்கரத்திற்கு ஒரு வெங்காயத்தை வெட்டி வைச்சிச்சு சார்.”...... அம்மா இங்கே வா, வா.... ஆசை முத்தம் தா, தா...
இலையில் சோறு போட்டு....
ஈ நாட்டின் பெருமை சொல்லி கொடு .....

சூப்பர், மா!

asiya omar said...

இலா
அப்துல் காதர்
தெய்வசுகந்தி
அக்பர்
ஸ்டார்ஜன்
சித்ரா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சாருஸ்ரீ எனக்கும் பெரியவங்க சொல்லித்தந்ததை வைத்து தான் இந்த அழகான கதையை எழுதினேன்.கருத்திற்கு மகிழ்ச்சி.

vanathy said...

akka, super story!

Mahi said...

சிம்பிளா குழந்தைகளுக்கு புரியவைக்க ஒரு வழி! நல்லகதை ஆசியாக்கா!

asiya omar said...

thanks for your comments, vanathy and mahi.

கோமதி அரசு said...

எலேய்,”நான் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க வீட்டுல பிள்ளேளுக்கு பாடத்தை தாய்மாரும் சொல்லிக்கொடுக்கனும்ல” என்றார்.//

அருமையான கதை.

தாய் தானே முதல் ஆசிரியர்.

சுதந்திரதின வாழ்த்துக்கள்.

james jenagaraj said...

அன்பு ஆசியா, எலேய் சிறுகதை அருமை, வட்டார மொழியில் தந்தது அதை விட அருமை, தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை. அன்புடன் சாந்தா ராஜன். (Sister of Dr. Sujatha, TVS Nagar, Tirunelveli.)

Asiya Omar said...

கோமதியக்கா வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Asiya Omar said...

சாந்தா வாங்க வாங்க,உங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.நம்ம நெல்லை சொல்வாடையில் நானும் முயற்சித்து எழுதி பார்த்தது தான்.என் ப்ளாக்கை தங்களுக்கு அறிமுகப்படுத்திய அன்புத்தோழி சுஜாதாவிற்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கவும்.