Tuesday, August 17, 2010

பப்பாளிக்காய் பொரியல்

தே.பொ:
பப்பாளிக்காய் - மீடியம் சைஸ்
சின்ன வெங்காயம் அல்லது பெரியது- 200 கிராம்
பச்சை மிளகாய் -2
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
சீரகப்பொடி - கால்ஸ்பூன்
சோம்பு பொடி -கால்ஸ்பூன்
மிளகாய்வற்றல் - 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரைஸ்பூன்
மல்லி -கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு-தேவைக்கு

பப்பாளிக்காயை தோல் நீக்கி கொள்ளவும்.

பொடியாக பொரியலுக்கு நறுக்குவது போல் நறுக்கவும்.வெங்காயம் பொடியாக நறுக்கவும்.தேங்காய் துருவல்,மிளகாய் மிக்ஸியில் பரபரவென்று சுற்றி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி பப்பாளிக்காயை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும்.மஞ்ச,சோம்பு,சீரக தூள் சேர்க்கவும்.


நன்கு பிரட்டி திரும்ப வேகவிடவும்.

காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் மிளகாய் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.

சுவையான சத்தான பப்பாளிக்காய் பொரியல் ரெடி.சும்மாவே சாப்பிடலாம்.நீங்க சொன்னால் தான் எந்த காய்ன்னு தெரியும்.இளம் காயாக பார்த்து பறித்து செய்யவேண்டும்.


பப்பாளிப்பழம் கிடைத்தால் சாப்பிடுங்க.
இது எங்க வீட்டு மரத்தில் பழுத்தது.
அருமையாக இருக்கும்.









அப்படியே கட் செய்து கொஞ்சம் மில்க் மெய்ட் விட்டு ஃபோர்கினால் சாப்பிட்டால் யம்மியாக இருக்கும்.








-ஆசியா உமர்

13 comments:

ஸாதிகா said...

பப்பாளிக்காயையும் விட்டுவைக்கவில்லையா தோழி.டிரை பண்ணிப்பார்த்துவிடுகின்றேன்.

athira said...

நான் கேள்விப்பட்டதே இல்லை ஆசியா, புதுவிதமான ரெசிப்பி. என்ன என்ன உணவெல்லாம் உலகில் இருக்கிறதென இப்போதுதானே தெரியுது.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் பொரியல்...பப்பாளிக்காயில் பொரியல் சாப்பிட்டு இருக்கின்றேன்..சூப்பராக இருக்கும்...பழத்தினை மில்க்மெயிடுடன் சாப்பிட வேண்டும் என்ற ஆசையினை கிளப்பிவிட்டிங்களே...சரி...சாப்பிட்டு விடுவோம்....

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் பப்பாளிக்காய் பொரியல்..எனக்கு ரொம்ப பிடித்தமானது..ஆனா எனக்குதான் இங்க கிடைக்கமாட்டேங்குது..

Pavithra Srihari said...

innikku thaan marketla pappalika parthuttu ,, ithu ethukku veg sidela vechu irukkaanu ninachen .. vaaangittu vandhirundhaa senju paarthu irukkalam .. book marking it .. will try it next time

மகி said...

ஆஹா..நானும் ஒரு பப்பாளிப்பழ பைத்தியம்! பழத்தின் கலரே சூப்பரா இருக்கே..இனிப்பும் சூப்பரா இருந்திருக்கும் இல்ல ஆசியாக்கா??

பொரியல் நல்லாருக்கு..அதிகம் சாப்பிட்டதில்லை..ஊரில் ஒரு சில முறை சுவைத்திருக்கேன்.

asiya omar said...

ஸாதிகா
அதிரா
கீதா ஆச்சல்
மேனகா சத்யா
பவித்ரா
மகி
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.கூட்டு கூட வைக்கலாம்.

Chitra said...

பப்பாளி பழம் சாப்பிட்டு இருக்கிறேன். உங்கள் ரெசிபி மற்றும் படங்கள் பார்த்த பின், காயும் நல்லா இருக்கும் போல தெரிகிறது

vanathy said...

அக்கா, வித்யாசமான ரெசிப்பி. ஒரு நாளைக்கு செஞ்சு பார்த்திட வேண்டியது தான். பப்பாளிபழம் + மில்க் மெய்ட் ம்ம்ம்ம்ம்...யம்மி.

asiya omar said...

நன்றி வானதி,சித்ரா.காய் சாப்பிட்டுப்பார்த்து சமைக்கவேண்டும்.இனிக்காமல் சும்மா சாப்பிடவே அருமையாக இருக்கும்.அந்தக்காய் தான் சமையலிற்கு பொருத்தமாக இருக்கும்.

தெய்வசுகந்தி said...

நான் பப்பாளிக்காயில் கூட்டுதான் செஞ்சுருக்கேன். பொரியல் நல்லா இருக்கும் போல இருக்குது.

எம் அப்துல் காதர் said...

பப்பாளிப் பழம் சாப்பிடலாம் நல்லா இருக்கும். ஆனாக்க அதில் பொரியலா?? இப்ப தான் கேள்வி படுறேன். செய்து பார்க்கச் சொல்லணும். ஊரானா தோட்டத்தில் freeya கிடைத்துவிடும். இங்க கிலோ எட்டு ரியால்ல. அம்மாடி!!

Jaleela Kamal said...

பப்பாளி பார்த்ததும் உடனே வாங்கி ஜூஸ் போடனும் போல இருக்கு.

பப்பாளிக்காய் பொரியல் ரொம்ப நல்ல இருக்கு