Monday, August 16, 2010

நோன்பு ஸ்பெஷல் - பஜ்ஜி வடை / புதினா மல்லி சட்னி




பஜ்ஜி வடை சட்னி


சிம்பிளாக கஞ்சி போடுவது பற்றி சொல்லியாச்சு ,இனி கொஞ்சம் சைட் டிஷ் பார்ப்போம்.பேச்சிலர்ஸ் சிலபேர் அவங்களாக சமைத்து சாப்பிடுவதுண்டு,அவர்களுக்காகவே இந்த இடுகை.


பஜ்ஜி வகை
தே. பொ :
பஜ்ஜி மிள்காய் – 2-4
வெங்காயம்-2
கத்திரிக்காய் -1
உருளைக்கிழங்கு - 1
ப்ரென்ச் ப்ரை – ஒரு கையளவு
உப்பு எண்ணெய் தேவைக்கு
கடலை மாவு – 1 கப்
அரிசிமாவு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால்- அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரைடீஸ்பூன்
பஜ்ஜி கலர் – 1 பின்ச்
சோடா உப்பு - 1 பின்ச்
பஜ்ஜி மாவு தேவைக்கு தகுந்தபடி அளவை கூட்டி குறைத்தோ அல்லது அதிகமாகவும் கரைத்து கொள்ளலாம்.

பஜ்ஜி மிளகாயை விதை நீக்கி பெரியதாக இருந்தால் நான்காக கட் செய்து கொள்ளவும்,கத்திரிக்காயை வட்டமாக கட் செய்து கொள்ளவும்.

பின்பு விரும்பினால் பஜ்ஜி மிளகாய் ஓவனில் ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும்





கடலை மாவு,அரிசிமாவு ,பெருங்காயம்,மிளகாய்ப்பொடி,சோடா உப்பு,உப்பு தண்ணீர் சேர்த்து தளர்வாய் பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.மிகவும் கெட்டியாக இருந்தால் பஜ்ஜி , மாவு அடைச்சது போல் வரும்.



பின்பு கடாயில் தேவைக்கு எண்ணெய் காயவைத்து பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

சுவையான கிரிஸ்பி மிளகாய் பஜ்ஜிஸ் ரெடி.


அதே மாவில் ஆனியன் கட் செய்தும் பஜ்ஜி செய்யலாம்.




இப்ப சுவையான ஆனியன் பஜ்ஜியும் ரெடி.
அடுத்து உருளைக்கிழங்கு பஜ்ஜி:



மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி மெல்லிய ஸ்லைஸாக நீள் வாக்கில் சீவிக் கொள்ளவும்.பின்பு அதனை மைக்ரோஓவனில் 1-2 நிமிடம் வைத்து எடுக்கவும்.பின்பு பஜ்ஜி மாவில் தோய்த்து போடவும்.சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி.

கத்திரிக்காய் பஜ்ஜி:


கத்திரிக்காய் கட் செய்து ஓவனில் 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து பின்பு பஜ்ஜி மாவில் தோய்த்து காய்ந்த எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும்.



சுவையான கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி.மாவு மீதியிருந்தால் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் பிரட்டி பொரித்தும் எடுக்கலாம்.
உளுந்து வடை
தே.பொ:
உளுந்து – 200 கிராம்
பச்சைமிள்காய் – 2
இஞ்சி –பாக்களவு(விரும்பினால்)
மல்லி கருவேப்பிலை – 2 இணுக்கு
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன் (கர கரப்பாக பொடிக்கவும்)
உப்பு , எண்ணெய் – தேவைக்கு



உளுந்தை குறைந்தது 1-2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு அத்துடன் பச்சை மிளகாய்,இஞ்சி,மல்லி கருவேப்பிலை உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.தேவைப்பட்டால் சிறிது தெளிக்கவும்


அரைத்த உளுந்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தட்டிய மிளகு சேர்த்து கலந்து சிறிது நேரம் வைக்கவும்.உடனேயும் சுடலாம்.மாவு லூசானல் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து விரவவும்.

கடாயில் எண்ணெய் காயவிட்டு சிறிது தண்ணீர் தொட்டு நான்கு விரலால் மாவை எடுத்து பெருவிரலால் ஓட்டை போட்டு வடை தட்டி போட்டு சிவற சுட்டு எடுக்கவும்.கையில் தட்ட பழக்கம் இல்லாதவர்கள் பாலிதீன் பேப்பரில் மாவை உருண்டையாக எடுத்து வைத்து தட்டி எடுத்தும் போடலாம்.



சூப்பர் கிரிஸ்பி உளுந்து வடை ரெடி.தேங்காய் அல்லது புதினாமல்லி சட்னியுடன் பரிமாறவும்.



கறிமசால் வடைதே.பொ :
மட்டன் கீமா – 100கிராம்
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கரம்மசாலா - கால்ஸ்பூன்
கறிமசாலா – 1 டீஸ்பூன்
கடலைபருப்பு-200கிராம்
இஞ்சி துண்டு பாக்களவு
பூண்டு – 2 பல்
சோம்பு பொடி –அரைஸ்பூன்
மிளகாய்ப்பொடி – அரைஸ்பூன்
மஞ்சல் தூள் – அரைஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை,புதினா – சிறிது
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 100கிராம்
எண்ணெய் ,உப்பு தேவைக்கு


மட்டன் கீமா, இஞ்சி பூண்டு,கறிமசாலா,கரம்மசாலா,உப்பு மட்டும் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவைக்கவும்.கடலை பருப்பை ஊறவைக்கவும்.




கடலை பருப்புடன்,இஞ்சி துண்டு,பூண்டுபல்,சோம்பு,உப்பு,வெந்த கறி சேர்த்து பரபரவென்று மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.


பின்பு அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லிபுதினாகருவேப்பிலை,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

அனைத்தையும் கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவும் பொரித்து எடுக்கவும்



சூப்பர் கறிமசாலவடை ரெடி. கறி சேர்க்காமலும் வெறும் பருப்பு மட்டும் சேர்த்து மசால் வடை செய்யலாம்.

புதினா மல்லி சட்னி:புதினா – ஒரு கைபிடி
மல்லி – ஒரு கை பிடி
தேங்காய் துருவல் –ஒரு கைபிடி
பச்சை மிள்காய் – 2
புளி – பாக்களவு
உப்பு – தேவைக்கு




அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது தேவைக்கு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
இந்த மல்லி புதினா சட்னி வடை பஜ்ஜி கஞ்சிக்கு அருமையாக இருக்கும்.





குறிப்பு :
இன்னும் கஞ்சி வகைகளும் சைட் டிஷ் தொடர்ந்து
வரும்.
ஆசியா உமர்.

18 comments:

அமைதிச்சாரல் said...

விருந்து கொடுத்து அசத்திட்டீங்கப்பா..

இளம் தூயவன் said...

செய்முறை நன்றாக உள்ளது.

சசிகுமார் said...

அக்கா அடி பின்றீங்க வாழ்த்துக்கள்,

kavisiva said...

இப்பவே எல்லாம் செய்து சாப்பிடணும்னு இருக்கு :)

ஒரு பார்சல் ப்ளீஸ்

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் அக்கா..அசத்தீட்டீங்க..

சாருஸ்ரீராஜ் said...

வாய் ஊறுது அக்கா , இப்பவே சாப்பிடனும் போல

asiya omar said...

அமைதிச்சாரல்
இளம் தூயவன்
சசிகுமார்
கவிசிவா
மேனகாசத்யா
சாருஸ்ரீராஜ்

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

நாடோடி said...

போட்டோ வேற‌ போட்டு ப‌சியை கிள‌ப்புதீங்க‌.. :)))

Chitra said...

அந்த கறிமசால் வடை ரெசிபி, எனக்கு புதுசு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். ரொம்ப நன்றிங்க.

Mahi said...

பஜ்ஜி எல்லாம் சூப்பர்! உளுந்துவடை செய்யமட்டும் இன்னும் கான்ஃபிடன்ஸ் வரமாட்டேங்குது ஆசியாக்கா.

Jaleela Kamal said...

எல்ல ஸ்பெஷலும் நல்ல இருக்கு ஒரே மூச்சா ஒரே பதிவில் போட்டு விட்டீங்க
நானும் இன்று உளுந்து வடை, பருப்பௌ வடை, புதினா சட்னி தான்.

ப்ரென்ச் பிரை பஜ்ஜி ஐடியா சூப்பர்

சிநேகிதன் அக்பர் said...

சூப்பர் ரெஸிப்பீஸ். ஸ்டார்ஜன் லெட் ஸ்டார்ட்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான விளக்கங்களுடன்கூடிய செய்முறைகள்.. சாப்பிட்டா ரொம்ப நல்லாருக்கும்..

vanathy said...

akka, super! Can I have some?

asiya omar said...

நாடோடி
சித்ரா
மஹி
ஜலீலா
அக்பர்
ஸ்டார்ஜன்
வானதி
மிக்க நன்றி.தவறாது வந்து கருத்து தெரிவித்து வருகிறமைக்கு மிக்க மகிழ்ச்சி.

GEETHA ACHAL said...

ஆசியா அக்கா...இது எல்லாம் ரொம்ப ஒவராக இல்ல....இப்படி எல்லாம் சமைச்சு எங்களுக்கு போட்டோ போட்டு காட்டி எங்க டயட் பிளனை எல்லாம் கலச்சுட்டிங்க...போங்க அக்கா...படத்தினை பார்க்கும் பொழுதே சாப்பிட வச்சுட்டிங்க...இன்றைக்கு டயட் எல்லாம் காணாம போயே போச்சு...நல்லா பஜ்ஜி சாப்பிட்டாச்சு...

asiya omar said...

thanks geetha achal,ohhhh and also sorry geetha.

angelin said...

superb recipes asiya.enakku romba pidithathu potato carrot kanji.thanks for the pawpaw recipe also.