Thursday, August 19, 2010

நோன்பு ஸ்பெஷல் - வெரைட்டி கஞ்சி

ப்லைன் மசாலா கஞ்சி :
பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு -கையளவு
பூண்டு - 5 பல்
கறிமசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகம் - அரைஸ்பூன்
வெந்தயம் - அரைஸ்பூன்
சோம்பு - கால்ஸ்பூன்
ஏலம் - கிராம்பு - தலா-2
பட்டை - சிறிய துண்டு
தக்காளி -சிறியது 1
வெங்காயம்- பெரியது 1
பச்சை மிளகாய் -1- 2
மல்லி புதினா கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் +நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1கப் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு

அரிசி பாசிபருப்பை ஊறவைக்கவும்.



ஏலம் பட்டை கிராம்பு,சீரகம்,சோம்பு,,வெந்தயம் சேர்த்து பொடித்து கொள்ளவும்.வெங்காய்ம் தக்காளி மல்லி புதினா நறுக்கி கொள்ளவும்.


ஊறிய அரிசியுடன் 5 லிட்டர் குக்கரில், பாதி தண்ணீர் வைத்து பொடி செய்த கஞ்சிப்பொடி,கறிமசாலா,இஞ்சிபூண்டு பேஸ்ட்,நறுக்கிய பூண்டு பல்,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி,புதினா உப்பு சேர்த்து கொதி வரவும் குக்கரை மூடி ஆவி வரவும் வெயிட் போடவும்.முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து வைத்து 20 நிமிடம் கழித்து இறக்கவும்.



குக்கர் ஆவியடங்கியவுடன் திறந்து உடன் வெந்த கஞ்சியை சூட்டோடு நன்கு மசித்து விடவும்.


பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சிறிது சேர்த்து வதக்கி கருவேப்பிலை சேர்த்து தாளித்து,தேங்காய்ப்பால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நுரை கூடி வரவும் அடுப்பை அனைத்து ,அதனை குக்கரில் உள்ள வெந்து வந்த கஞ்சியில் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.கஞ்சி குடிக்கும் பதத்தில் கெட்டித்தன்மை இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.அவரவர் ருசிக்கு தகுந்தபடி தேங்காய் பால் அல்லது வெந்நீர் சேர்த்து மிக்ஸ் செய்து உப்பு சரி பார்த்து கொள்ளவும்.

சுவையான மசாலா கஞ்சி ரெடி.



கேரட் பொட்டட்டோ கஞ்சி :


பச்சரிசி -100 கிராம்
சிறிய கேரட் - 1
மிகச் சிறிய உருளைக்கிழங்கு - 1
வெந்தயம் -அரைஸ்பூன்
சீரகம் - அரைஸ்பூன்
பூண்டு பல்- 8
வெங்காயம் - 1
பச்சை மிள்காய் - 2
மல்லி புதினா கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் + நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பசும்பால் - கால் லிட்டர்.


கேரட்,உருளை,பூண்டு,மல்லி புதினா ,வெங்காயம் கட் செய்து வைக்கவும்.

அர்சியுடன் கேரட்,உருளைக்கிழங்கு ,வெங்காயம்,பச்சை மிளகாய்,வெந்தயசீரகப்பொடி,மல்லி புதினா,உப்பு , தண்ணீர் பாதி குக்கர் சேர்த்து கொதிவரவும்.மூடி முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து 20 நிமிடம் வைத்து இறக்கவும்.




கஞ்சி வெந்ததும் மசித்து விடவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு வெங்காயம் கருவேப்பிலை தாளித்து காய்ச்சிய பால் சேர்த்து வெந்த கஞ்சியில் கொட்டவும்.



நன்கு கலந்து பரிமாறவும்.



சுவையான கேரட்,உருளை கஞ்சி ரெடி.இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.


அரிசி பருப்பு கஞ்சி : மட்டன் கீமா கஞ்சி



மட்டன் கீமா கஞ்சி என்றால் 200 கிராம் மட்டன் கீமா நன்கு தண்ணீரில் அலசி வடிகட்டி வைக்கவும்.பின்பு அதனுடன் கறிமசாலா 1 டீஸ்பூன்,இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன்,கரம் மசாலா அரைஸ்பூன்,உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.விரும்பினால் பாதி வெங்காயம்,தக்காளி சேர்க்கலாம்.


தேவையான பொருட்கள் ;
பச்சரிசி - 100 -கிராம்
பாசிபருப்பு - ஒரு கைகுத்து
கடலை பருப்பு - ஒரு கைகுத்து
வெங்காய்ம் - 1
தக்காளி -1
பச்சை மிள்காய் - 2
சீரகம்,வெந்தயம் பொடி செய்தது- தலா அரைஸ்பூன்
கரம் மசாலா,சோம்பு பொடி - தலா கால்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் -பாதிகாயில் (தேவைக்கு)
மல்லி புதினா கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் + நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


அரிசி பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
அரிசி பருப்பு,தண்ணீர்,சீரகவெந்தயப்பொடி,கரம் மசாலா,சோம்பு பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,வெங்காய்ம்,தக்காளி,மிளகாய்,மல்லி புதினா,உப்பு சேர்த்து கொதி வரவும் வெயிட் போட்டு முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து 20 நிமிடம் வைத்து இறக்கவும்.





உடன் வெந்த கஞ்சியை சூட்டோடு நன்கு மசித்து விடவும்.இதனை தேங்காய்ப்பால் தாளித்து கொட்டி கலந்து பரிமாறினால் சுவையான சத்தான அரிசி பருப்பு கஞ்சி ரெடி.



மட்டன் கீமா கஞ்சி


ரெடி செய்ய தயார் செய்த அரிசி பருப்பு கஞ்சியுடன் வேகவைத்த மட்டன் கீமாவை தேவைக்கு சேர்க்கவும்.கலந்து விடவும்.


பின்பு எண்ணெய் நெய் சேர்த்து வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்த தேங்காய்ப்பால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ,உப்பு சிறிது சேர்த்து நுரை கூடி வரவும் அடுப்பை அணைத்து ரெடி செய்த மட்டன் கீமா,அரிசி பருப்பு கஞ்சியுடன் சேர்க்கவும்.



தாளித்த தேங்காய்பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.




சுவையான மட்டன் கீமா கஞ்சி ரெடி.





குறிப்பு :


தண்ணீர் , பேரீச்சம் பழம் , ஜூஸ் பழம்,புட்டிங் வகைகளுடன் நோன்பு திறந்து பின்பு கஞ்சி குடித்தால் தான் நோன்பு திறந்தது போல் இருக்கும்.நோன்பு திறந்தவுடன் எல்லாம் நிறைய சாப்பிட முடியாது,கொஞ்சம் கொஞ்சம் அதனை சத்தானதாக வாயிற்கு ருசியாக வெரைட்டியாக நோன்பாளிகளுக்கு செய்யும் பொழுது ஒரு திருப்தி மனசுக்கு.
100 கிராம் அரிசி சேர்த்தால் 4 பேருக்கு கஞ்சி சரியாக இருக்கும்.அதிகம் வேண்டுமானால் கூட்டி குறைத்து கொள்ளவும்.இந்த வெரைட்டி கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் பச்சடி அருமையான காம்பினேஷன்.எங்க ஊர் பள்ளிவாசலில் நோன்பு காலத்தில் மண்கொட்டராவில் கஞ்சியும்,கத்திரிக்காய் பச்சடி அல்லது கடலை பருப்பு கத்திரிக்காய் பரிமாறுவது வழக்கம்.தினமும் கஞ்சி செய்ய வேண்டியதிருப்பதால் நாளுக்கொரு கஞ்சி செய்து அசத்தலாம்.அல் ஐனில் எங்கள் வீட்டின் இருபுறமும் பள்ளிவாசல் இருப்பதால் என் மகன் எப்பவாவது அங்கு சென்று நோன்பு திறக்க ஆசைப்படுவான் அங்குள்ள அரீஸ்,மந்தி ரைஸ் டேஸ்டிற்காக. யு.ஏ.இ -யில் நோன்பு நேரத்தில் அங்கங்கு கூடாரம்.பள்ளி வாசல்களில் நோன்பு திறக்க பலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது மிக பிரமாதமாக இருக்கும்.என்றாலும் என் கணவர் வீட்டில் தான் நோன்பு திறப்பது வழக்கம்.எனவே எப்பவும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சமையற் கட்டு கலகலப்பாக இருக்கும்.ஓதல் தொழுகையுடன் நோன்பும் சேர்ந்து இந்த ரமளான் மாதம் ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும்.ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்திற்காக எதிர்பார்த்து இருப்பதே ஆனந்தம்.


--ஆசியா உமர்.

17 comments:

Kousalya said...

எப்படி தோழி இத்தனை item செய்து அசத்துறீங்க.... ஒவ்வொன்றும் அசத்தல்....பொறாமையா இருக்கு எல்லாம் பார்த்து..... !! :))

Chitra said...

எனவே எப்பவும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சமையற் கட்டு கலகலப்பாக இருக்கும்.ஓதல் தொழுகையுடன் நோன்பும் சேர்ந்து இந்த ரமளான் மாதம் ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும்.ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்திற்காக எதிர்பார்த்து இருப்பதே ஆனந்தம்.


..... வாசிக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது. It is a blessing from God.

எம் அப்துல் காதர் said...

ஆஹா இத்தனை வகை கஞ்சிக்காகவே வருஷம் முழுக்க நோன்பு வச்சுகிட்டே இருக்கலாம் போலிருக்கே...!

இளம் தூயவன் said...

சூப்பர் கஞ்சி.

asiya omar said...

கௌசல்யா
சித்ரா
அப்துல் காதர்
இளம் தூயவன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சசிகுமார் said...

அருமை அக்கா எங்களுக்கும் வேணும்.

GEETHA ACHAL said...

கஞ்சியில் இவ்வளவு விதமா...கலக்குறிங்க ஆசியா அக்கா...எனக்காக இதே மாதிரி துவையல், சட்னி வகைகளையும் போடுங்க...

மனோ சாமிநாதன் said...

நோன்பு கஞ்சி வகைகள் பிரமாதம் ஆசியா! வழக்கம்போல விளக்கப்படங்க்ள் அனைத்தும் அருமை! கறி மசாலா என்று எழுதியிருக்கிறீர்கள். என்னென்ன மசாலா சேர்த்து அதை அரைப்பீர்கள்?

asiya omar said...

வருகைக்கு மகிழ்ச்சி சசிகுமார்.உங்களுக்கு இல்லாமலா சகோ? தந்துட்டாப்போச்சு.

asiya omar said...

கீதா வருகைக்கு மகிழ்ச்சி.
துவையல் சட்னி வகைகள் தானே நான் வீட்டில் செய்வதை குறிப்பிடுகிறேன்.

asiya omar said...

மனோ அக்கா உங்கள் பாராட்டிற்கு மகிழ்ச்சி.நான் ப்ளாக்கிலேயே மசாலான்னு தலைப்பில் கொடுத்து இருக்கேன்,அது இல்லாவிடில் ரெடிமேட் கறிமசாலா 1 டீஸ்பூன் கூட போடலாம்.நன்றியக்கா.

vanathy said...

அக்கா, சூப்பரோ சூப்பர். எப்படி இவ்வளவும் செய்ய முடிகிறது? அழகான, தெளிவான படங்கள்.

ஸாதிகா said...

அசத்திவிடட்டீர்கள் தோழி..

Mahi said...

அம்மாடி..கஞ்சி வெரைட்டீஸ்-ஐ பார்த்தாலே கலக்கலா இருக்கு.இதெல்லாம் நானா செஞ்சு சாப்பிடறத விட உங்கவீட்டுக்கே வந்துடறேன் ஆசியாக்கா! :)

asiya omar said...

vanathy
shadiqah
mahi

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நோன்பு தொடங்கி 1 வாரம் ஆகிவிட்டதே,தினமும் செய்வதை படம் எடுத்தது தான்..

சிநேகிதி said...

அக்கா உங்களுக்கு ரொம்ப பொறுமை அதிகம்.. ஆ...அ...ம்மாடி..... எத்தனை எத்தனை விதங்கள்

Nagoor Khani M said...

Masha allah