Saturday, August 21, 2010

கத்திரிக்காய் பச்சடி / Brinjal Pachadi

தேவையான பொருட்கள் ;

கத்திரிக்காய் - கால் கிலோ
சின்ன அல்லது பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - சிறியது 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
புளி - நெல்லியளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு

சிறிய பிஞ்சி வயலட் கத்திரிக்காயாக பார்த்து வாங்கவும்.

நறுக்கிய கத்திரிக்காய்,சின்ன வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரகத்தூள்,புளிக்கரைசல்,தேவைக்கு உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வைக்கவும்.
இப்படி நன்றாக குழைய வெந்து விடும்.


வெந்த கத்திரிக்காயை இப்படி நன்கு மசித்து விடவும்.

கடாயில் எண்ணெய் காயவும்,கடுகு உளுத்தம்பருப்பு,வற்றல் தாளிக்கவும்,பின்பு அத்துடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.சிறிது வதக்கவும்.

தாளித்தவற்றுடன் குக்கரில் வெந்து மசித்த கத்திரிக்காயை சேர்க்கவும்.


நன்கு கலந்து பிரட்டி விடவும்.உப்பு,புளி சரிபார்க்கவும்.கெட்டியாக இருக்க வேண்டும்.
சுவையான கத்திரிக்காய் பச்சடி ரெடி.விரும்பினால் பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிது தூவி அலங்கரிக்கலாம்.
இது நோன்பு கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள நல்ல பொருத்தமாக இருக்கும்.சாதத்துடன் தொட்டும், பிரட்டியும் சாப்பிடலாம்.இட்லி தோசை,சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.

--ஆசியா உமர்

30 comments:

kavisiva said...

ஆசியா கத்திரிக்காயில் என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே வந்தேன். இணையத்தை திறந்ததும் உங்கள் ரெசிப்பிதான் கண்ணில் பட்டது. இதோ இப்பவே செய்துட்டு வந்து சொல்றேன் :).

LK said...

indlila add pannalaiyaa

prabhadamu said...

இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.

http://cookeryindexer.blogspot.com/

நாடோடி said...

போட்டோக்க‌ளுட‌ன் விள‌க்க‌ம் ந‌ல்லா இருக்குங்க‌..

சசிகுமார் said...

சூப்பர் அக்கா கலக்குங்க

asiya omar said...

மிக்க மகிழ்ச்சி கவிசிவா.செய்து பார்த்து விட்டு சொலலுங்க.

asiya omar said...

எல்.கே இண்ட்லியில் போட்டாச்சே .காலையில் பதிவு போட்டதும் சேர்த்தாச்சே,இண்ட்லியை பார்க்க முடியலை.

asiya omar said...

ப்ரபாதாமு வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

ஸ்டீபன்
சசிகுமார்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் said...

பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

easy method i will try it soon

ஹைஷ்126 said...

எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்:)

வாழ்க வளமுடன்

பி.கு: உங்க நாட்டில் DHL இல்லையா???

Chitra said...

looks so good...... mmmmmm...... :-)

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அழைக்கும் ,
கத்திரிக்காய் பச்சடி அருமை,

சிநேகிதன் அக்பர் said...

நல்லா செய்து இருக்கிங்க.

asiya omar said...

இளம் தூயவன்
சாருஸ்ரீ
சகோ.ஹைஷ்
சித்ரா
ஆயிஷா
அக்பர்
கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இதைச் சொன்னா, நீயே செஞ்சு சாப்புடு போடா... ன்னு அம்மா திட்டுறாங்க.. எப்பப் பாத்தாலும் நாக்கு ருசி கேக்குதான்னு கேக்குறாங்க...

நான் தான் ட்ரை பண்ணனும் போல..

asiya omar said...

ப்ரகாஷ் வருகைக்கு நன்றி.அம்மா செய்து தருவாங்க,இது ரொம்ப சிம்பிள்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

சங்கரா மீன் கையில இருக்கு... வருக்கலாமா..? இல்லை குழம்பு வைக்கலாமா...? ரொம்ப நேரமா நெட்டுல தேடிகிட்டு இருக்கேன்..
ஆன்லைன்ல இருந்தா சொல்லுங்களேன்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

எங்கம்மா சமைச்சிட்டாங்க...

கொழம்பு... சூப்பரா இருக்கு..

asiya omar said...

சகோ.ப்ரகாஷ் வறுத்துடுங்க.அருமையாக இருக்கும்.என்னுடைய மீன் சமையலை பாருங்க.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ரொம்ப நன்றிங்க.. வருப்பதற்கும் கொஞ்சம் பகுதியை எடுத்து வெச்சிருக்காங்க எங்க அம்மா...மீன் வறுவல் மசால் தடவி எலுமிச்சைப் பழச்சாறு ஊற்றி காய விட்டிருக்காங்க... இனி தான் வறுக்கும் படலம்...

எம் அப்துல் காதர் said...

ம்ம்ம்ம் இப்பல்லாம் ஆன் லைன்லேயே பதிலா?? நடக்கட்டும் நடக்கட்டும்.

இனி நாங்களும் கேட்போம்ல. சும்மா தமாஷ்!!

கத்திரிக்கா பச்சடி சுவையோ சுவை!!

asiya omar said...

சகோ.அப்துல் காதர் ,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

மகி said...

நன்றாக இருக்கு கத்தரிக்காய் பச்சடி..நான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வேன்.பெரிய கத்தரிக்காய்தான் கைவசம் இருக்கு.அடுத்தமுறை தோசைக்கு இந்த பச்சடிதான்.:)

நன்றி ஆசியாக்கா!

R.Gopi said...

ரெசிப்பியும் அதற்கான ஃபோட்டோஸும் படு சூப்பரா இருக்கு....

சுவையான கத்தரிக்காய் பச்சடி மிக நன்றாக இருக்கிறது....

கொஞ்சம் பார்சல் கிடைக்குமா?

அன்னு said...

ஆஸியாக்கா,

இன்னிக்கு இதுதேன். பூரிக்கு நல்லா வருமா சொல்லுங்க.

asiya omar said...

இட்லி தோசைக்கு நல்லாயிருக்கும்,பூரிக்கும் ட்ரை பண்ணுங்க.

அன்னு said...

ஆஸியாக்கா,

கீதாக்காவோட ப்ளைன் ஓட்ஸ் தோசைக்கும் இந்த கத்தரிக்காய் புர்தாக்கும்(எங்க வீட்டுல இப்படித்தேன் சொல்வோம்), அடிச்சுக்க ஆளே இல்லை. சமைச்ச முத நாள் ஏனோ எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கலை. ஃபிரிட்ஜுல வச்சிட்டு மறந்துட்டேன். நேத்து (ஒரு நாள் கழிச்சு), ஓட்ஸ் தோசைக்கு இதை வச்சுக்கலாம், எப்படியாவது முடிச்சிரணும்னு நினச்சி எடுத்து சாப்பிட்டா....பேஷ் பேஷ்..செம காம்பினேஷன்...ரெம்ப ரெம்ப நன்றி

asiya omar said...

செய்து பார்த்து பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அன்னு.