Sunday, August 22, 2010

வெஜ் சமோசா


நான் இஃப்தாருக்கு செய்த இந்த வெஜ் சமோசா குறிப்பை தமிழ்குடும்பத்திற்கு அனுப்பி வைத்தேன்.

இதோ குறிப்பு உங்களுக்காக:
தேவையான பொருட்கள்
கேரட் – 1 சிறியது

உருளைக்கிழங்கு – 2 சிறியது

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

கரம்மசாலா கால்டீஸ்பூன்

மிளகாய்த்தூள் கால்டீஸ்பூன்

மஞ்சள் தூள் கால்டீஸ்பூன்

மல்லி இலை சிறிது

உப்பு , எண்ணெய்  - தேவைக்கு

சமோசா சீட்ஸ் - 12

மைதா - 2 டேபிள்ஸ்பூன்

 
செய்முறை :

1.
சமோசா சீட்ஸ் -சை முதலில் ஃப்ரீசரில் இருந்து 2 மணி நேரம் முன்பு வெளியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

2.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் எடுத்து கொள்ளவும்.கேரட் வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.

3.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி லேசாக சிவறவும் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா போட்டு வதக்கவும்.

4.
பின்பு கேரட்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் வேகவைத்த உருளையை மசித்து போடவும்.பின்பு தேவைக்கு உப்பு,மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.மசாலா வாடை அடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.கட் செய்த மல்லி இலை தூவவும்.இப்ப சமோசாவிற்கான மசாலா ரெடி.

மைதாவை ஒரு பவுலில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கரைத்து வைத்து கொள்ளவும்.

சமோசா சீட்டின் ஒரு ஓரத்தில் 1 டேபிள்ஸ்பூன் மசாலா வைத்து அதனை முக்கோணமாக மடித்து அப்படியே தொடர்ந்து முக்கோணமாக மடித்து மைதா பேஸ்ட்டினால் முடிவை ஒட்டி ரெடி செய்து வைக்கவும்.இப்படியே தேவையான எண்ணிக்கைக்கு சமோசா ரெடி செய்து வைக்கவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் சமோசாவை போட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எண்ணெய் வடித்து எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.

எண்ணெய் குடிக்காத மொறு மொறு டேஸ்டி வெஜ்  சமோசா ரெடி..

செய்முறையை படங்களுடன் தமிழ்குடும்பம் சென்று பார்க்கவும்.


மிக்க நன்றி.

-ஆசியா உமர்.


25 comments:

LK said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

asiya omar said...

நன்றி எல்.கே. வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

athira said...

சூப்பர் சமோசா... எனக்கு சமோசா மடிக்கத் தெரியாது:((

நாடோடி said...

ச‌மோசா ப‌ட‌ம் சூப்ப‌ரா இருக்கு.. அப்ப‌டியே ரெண்டு பார்ச‌ல் அனுப்புங்க‌..

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

asiya omar said...

அதிரா வருகைக்கு நன்றி.ஒரு பதிவு சமோசா மடிப்பது எப்படின்னு போட்டால் போச்சு.அதன் பின்பு ப்பூ இவ்வளவு தானன்னு கேட்பீர்கள்.

asiya omar said...

ஸ்டீபன் கருத்திற்கு நன்றி.பார்சல் அனுப்பிடறேன்.

asiya omar said...

புவனேஸ்வரி வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.

இளம் தூயவன் said...

போட்டியில் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.

ஒ.நூருல் அமீன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்.நோன்பு கஞ்சியுடன் தின்ன சமோசா சரியான் ஜோடி! நோன்பு கஞ்சி செய்முறை எழுதி விட்டீர்களா!

மகி said...

சமோசா நன்றாக இருக்கு ஆசியாக்கா! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

சிநேகிதி said...

அக்கா குறிப்பினை பார்த்தேன்.. சூப்பராக இருக்கு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

asiya omar said...

இளம் தூயவன்
மகி
சிநேகிதி

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.வாழ்த்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

நூருல் அமீன் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

என் ப்ளாக்கில் இஃப்தார் என்பதை கிளிக் செய்து பார்த்தால் சிம்பிள் கஞ்சி,வெரைட்டி நோன்பு கஞ்சி கொடுத்து இருக்கேன்,ஆகஸ்ட் மாதம் குறிப்பில் தான் இருக்கு.

எம் அப்துல் காதர் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறோம் மேடம். அருமையா இருக்கு!!

asiya omar said...

அப்துல் காதர் வாழ்த்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

சௌந்தர் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் நிச்சியம் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்

Chitra said...

Best wishes for you to win!
Thank you for the recipe.

சசிகுமார் said...

நல்ல மணமாக இருக்கும் போல அக்கா வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

சமோசா பார்க்க அருமையாக இருக்கு,


முன்பெல்லாம் நிறைய மடித்து பிரீஜரில் போட்டு வைப்பேன். ,
அதிரா சமோசா மடிக்க நான் சொல்லி தராவா?

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

sandhya said...

ஆசியா ஜி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ..ரெசிபிக்கு நன்றி

asiya omar said...

சௌந்தர்
சித்ரா
சசிகுமார்
ஜலீலா
சந்தியா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

vanathy said...

அக்கா, அங்கேயும் உங்கள் ரெசிப்பி பார்த்தேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)

R.Gopi said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்....

தமிழ் குடும்பம் சென்று பார்த்து கமெண்ட் அளித்தது நினைவுக்கு வருகிறது....