Monday, August 23, 2010

சிக்கன் சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள்:

சேமியா - முக்கால் கிலோ
சிக்கன் முக்கால் கிலோ
தயிர்- 100 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -முக்கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
எலுமிச்சை - 1
பச்சை மிளகாய் - 4
மல்லி,புதினா - தலா ஒரு கைபிடியளவு
தேங்காய்ப்பால் - அரைதேங்காயில்
எண்ணெய் -100 மில்லி
நெய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கு

சேமியாவை இப்படி இளஞ்சிவப்பாக வறுத்து கொள்ளவும்.வறுத்து இறக்கும் பொழுது 2 டீஸ்பூன் நெய் விட்டு மணத்திற்கு பிரட்டி எடுக்கவும்.
சிக்கனை கழுவி சுத்தம் செய்து தயிர்,அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் முழுவதும் வதக்கி சிவந்ததும் இஞ்சி பூண்டு கரம் மசாலா போட்டு வதக்கவும்,அடுப்பை மீடியமாக வைக்கவும்.பின்பு நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,உப்பு,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து மூடி போடவும்.எண்ணெய் தெளிந்து தக்காளி வதங்கியதும் தயிரில் ஊறிய சிக்கனை போடவும்.மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் விட வேண்டாம்.சிக்கனிலேயே தண்ணீர் விடும்.

வெந்த பின்பு அரைத்தேங்காயில் பால் எடுத்து பாலுடன் சேமியாவிற்கு மொத்தம் ஒன்றரை அளவு தேங்காய்ப்பாலும் தண்ணீரும் கலந்து வெந்த சிக்கனில் விடவும்.கோகனெட் மில்க் பவுடர் என்றால் 3 டேபிள்ஸ்பூன் கலந்து விடவும்.நன்கு கொதிவரவிடவேண்டும்.

கொதிவந்த பின்பு வறுத்த சேமியாவை தட்டவும்.பிரட்டி விடவும்.எலுமிச்சையை பிழிந்து விடவும்,சேமியாவை பிரட்டி பாத்திரத்தை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.


சேமியா வெந்து மேலெழும்பி வரும் .சிக்கன் சேமியாவை நன்கு ஒரு சேர பிரட்டி அடுப்பை அணைத்து சிக்கென்ற மூடியால் மூடி விடவும்.சேமியா புழுங்கி பத்து நிமிடத்தில் ரெடியாகிவிடும்.திறந்து சுடச்சுட பரிமாறவும்.


சுவையான சூப்பர் சிக்கன் சேமியா பிரியாணி ரெடி.ரைத்தாவுடன் பரிமாறவும்.
இஸ்லாமிய இல்லங்களில் செய்யக்கூடிய இந்த சேமியா பிரியாணி மிகவும் பிரசித்தம்.
--ஆசியா உமர்.

36 comments:

LK said...

present

asiya omar said...

நன்றி எல்.கே.இண்ட்லியில் சப்மிட் செய்தாலும் சப்மிட் செய்தது போல் காட்டமாட்டேங்குது ப்ளாக்கில்.ஏதோ ப்ராப்ளமோ ?

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர் சேமியா பிரியாணி ...

சாருஸ்ரீராஜ் said...

nalla irukku akka, ungal samosa kuripai parkka tk ponen anga zarunu per potu irutnhathu athu neenga thana......

asiya omar said...

ஆமாம் சாருஸ்ரீ,முதலில் நான் எழுத ஆரம்பித்தது அங்கு தான்,அப்ப என் குழந்தைங்க பெயரின் முதல் எழுத்தை என் புனை பெயராக வைத்து இருந்தேன்,அதன்பின்பு ஆசியா உமர் என்ற இயற்பெயரில் குறிப்புக்கள் கொடுக்க ஆரம்பித்தேன்.கருத்திற்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பர்.

நாடோடி said...

ஆஹா.. சிக்க‌ன் வித் சேமியாவா!!!.. பார்க்க‌ சூப்ப‌ரா இருக்கு.

kavisiva said...

சூப்பர் ரெசிப்பி ஆசியா! நான் ரைஸ் வெர்மியில் செய்யலாம்னு இருக்கேன் அடுத்த வாரம் :-)

கத்திரிக்காய் பச்சடி நன்றாக இருந்தது

kavisiva said...

//நன்றி எல்.கே.இண்ட்லியில் சப்மிட் செய்தாலும் சப்மிட் செய்தது போல் காட்டமாட்டேங்குது //

எனக்கும் அதே பிரச்சினைதான் :-(

சி. கருணாகரசு said...

சமைக்கவும் ருசிக்கவும் ஆவலை தூண்டும் வண்ன்ம் இருக்கிறது. பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு said...

படத்துடன் விளக்கம் மிக நல்லாயிருக்குங்க.... பாராட்டுக்கள்.

Umm Mymoonah said...

Nice semiya briyani, we too used to make this for some special occasion.

இளம் தூயவன் said...

அருமையான உணவு. விரைவு உணவு என்று கூறிப்பிடுவது நன்று. நோன்பு திறக்க நேரமாகி விட்டது பார்சல் வந்து
சேரவில்லை.

Chitra said...

சேமியா பிரியாணி? இதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்..... ம்ம்ம்ம்.....

மங்குனி அமைசர் said...

வணக்கம் வணக்கம் மேடம், பாத்து ரொம்ப நாள் ஆச்சு , அது ஒன்னும் இல்லை மேடம் இப்பைஎல்லாம் ஆபீசுல ஆணிபுடுங்க சொல்லி ரொம்ப இம்சை பண்றானுக , அது தான் ....... ரொம்ப டயர்டா வந்தேன் , உங்க சிக்கன் சேமியா பிரியாணி சாப்ட்டு இப்போ தெம்பாகிட்டேன்

asiya omar said...

புவனேஸ்வரி
ஸ்டீபன்
கவிசிவா
கருணாகரசு
உம் மைமூனா
இளம் தூயவன்
சித்ரா

அனைவரின் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி,

asiya omar said...

அமைச்சரே நீண்ட நாள் கழித்து வந்தமைக்கு மிக்க நன்றி,கருத்திற்கு மகிழ்ச்சி.

மகி said...

நல்லா இருக்கு ஆசியாக்கா!

ஆயிஷா அபுல் said...

சிக்கன் சேமியா பிரியாணி சூப்பர்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையா இருக்கு சேமியா பிரியாணி.. எங்க வீட்டுல சிலசமயம் எங்கம்மா செய்வாங்க ரொம்ப நல்லாருக்கும்.. இதைமாதிரி இங்க செய்து பார்த்திரவேண்டியதுதான்.

asiya omar said...

மகி

ஆயிஷா அபுல்

ஸ்டார்ஜன்,நல்ல வறுத்திட்டு செய்யணும்.செய்து பாருங்க.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

vanathy said...

Akka, super biryani!

Suhaina said...

pls add in translator so that we can also read ur recipes.. u have a wonderful blog. i am a big fan of tamil recipes.

சிங்கக்குட்டி said...

பிரியாணி சூப்பர் படங்களும் அருமை :-)

கீதா கூட இதை பற்றி எழுதியதை படித்த நினைவு இருக்கிறது.

asiya omar said...

vanathy thanks for your visit and comments.

asiya omar said...

welcome suhaina. thanks for your comments and your first visit.i love your singapore kitchen very much.

asiya omar said...

சிங்கக்குட்டி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சசிகுமார் said...

வித்தியாசமாக உள்ளது அக்கா, பிரிண்ட் எடுத்தாச்சு

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...அருமையாக இருக்கின்றது...அப்படியே சாப்பிடுவேன்...

சே.குமார் said...

படத்துடன் விளக்கம் மிக நல்லாயிருக்குங்க.... பாராட்டுக்கள்.

asiya omar said...

சசிகுமார்
கீதாஆச்சல்
குமார்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

சிக்கன் சேமியா பிரியாணி நல்ல இருக்கு.

அதிக ஃபேட் காரணமா இப்ப எல்லாம் ஊரில் களறியில் மட்டன் சேமியா பிரியாணிக்கு பதில் சிக்கன் சேமியா பிரியாணி, சிக்கன் மக்ரூனி தான் செய்கிறார்கள்

எம் அப்துல் காதர் said...

சிக்கன் சேமியா பிரியாணி sooooper.

sabeeca said...

அஸ்ஸலாமு அலைகும்.சேமியா பிரியானிக்கு பால் ஒன்ரை அளவு போட்டு இருக்கிங்க அப்படின்னா ஒன்ரைலிட்டரா.

asiya omar said...

சபீகா வருகைக்கு நன்றி.பொதுவாக கறியில் தண்ணீர் ஊறுவதால் சேமியாவின் அளவிற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் அளவு இருக்க வேண்டும்.உதாரணத்திற்கு ஒரு கப் சேமியாவிற்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் வைக்க வேண்டும்.சேமியாவின் தரத்தை பொருத்து தண்ணீர் அளவு மாறுபடும்.தேங்காயை நன்கு பால் எடுத்து அந்த பாலுடன் குறைவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

riswana parvin said...

hi......we too frm melapalayam.happy to see ths blog....wher r u living now?