Thursday, August 26, 2010

நேசம் - சிறுகதை
“கோமதிக்கா , கோமதிக்கா”


“டேபிளில் சாம்பார் இல்லை,சீக்கிரம் 10 நிமிடத்தில் வகுப்பிற்கு போகணும்” இது அன்றாடம் மெஸ்சில் கடைசி நேர களோபரம் தான்.அனு தினமும் இப்படிதான்.


இரண்டு இட்லியை அவசரமாய் வாயில் திணித்து விட்டு வெளியே வந்தால் சைக்கிளில் காற்று இல்லை.


“அய்யோ ! தாத்தா ,தாத்தா ..சீக்கிரம் என் சைக்கிளுக்கு முதலில் காற்று அடைங்க, என்ற அனுவிடம், “ஏம்மா முன்னாடியே செக் பண்ணக்கூடாதாமா? ”
“தாத்தா, யாரோ புடுங்கி விட்டுட்டாங்க,இன்னைக்கு ஃபீல்டுக்கு போகணும்,சீக்கிரம்..”.


எப்பப்பாரு இவளுக்கு இதே வேலையாப்போச்சு,என்று அங்கு காத்திருந்த கூட்டமே கத்த, “ பை தாத்தா,பை ஃப்ரண்ட்ஸ்” என்று சர்ரென்று பறந்தாள் அனு.


கல்லூரியில்,வகுப்பறையில்,ஹாஸ்டலில் அனுவை தெரியாதவர் இருக்க முடியாது..அவ்வளவு சுட்டி.ஹாஸ்டல் வாசலில் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் தாத்தா செல்லம்,மெஸ்ஸில் கோமதிக்கா,சமையல் ஆயா செல்லம்,இப்படி இவளுக்கு செல்லம் ஜாஸ்தி.


“ஓரம்போ ! ஓரம்போ ! ருக்குமணி வண்டி வருது” ,இப்படி சீனியர்ஸ் அடித்த கமென்ட்ஸ் சை காதில் வாங்காமல் போனவள் , சிவகுமரன் கையசைத்தவுடன் சட்டென்று சைக்கிளை ப்ரேக் போட்டாள்.


அழாத குறையாக கேட்டான், “ப்ளீஸ் அனு யாரோடவாவது டபுள்ஸ் போயேன்,இன்று எனக்கு ஒருத்தனும் கிடைக்கலை,உன் சைக்கிளை கொஞ்சம் கொடுக்க முடியுமா?”அவன் முகத்தை பார்த்தவுடன் எல்லாம் மறந்து போனது அனுவிற்கு,சைக்கிளை கொடுத்து அனுப்பிவிட்டு யாராவது வகுப்பு தோழிகள் வரட்டும் என்று காத்திருந்த பொழுது,ரூம் மேட் ரமணி வரவே அவளுடன் ஏறிக்கொண்டாள்.

சுப்ரமணியன் சார் அட்டென்டென்ஸ் போட்டு கொண்டிருந்தார்,3045, 3046, 3047 என்றவுடன் , “எஸ் சார் ” என்று படபடப்பாக நுழையவும் சரியாக இருந்தது.அப்பாடா ஒரு நிமிடம் பிந்தியிருந்தால் இன்று அம்பேல் தான்...


சைடில் இருந்த சிவகுமரன் அனுவை பார்க்க ,அனு அவனை பார்க்க ரமணிக்கு வந்ததே கோபம், “என்னடி இருவரும் லுக் ?” எதையும் கவனிக்காமல் முறுவலித்து கொண்டார்கள்.


அனு, “இது சரியில்லை,அவனைப்பாரேன்,கண்ணங்கரேலென்று கொரிலா மாதிரி,இவனைப்போய் பார்த்து ஏண்டி ஜொள்ளு விடுறே” என்ற ரமணிக்கு,அனு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தாள்.


ரமணிக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது,அனு யாரையும் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாளே,கடைசியில் இவளும் இப்படிதானா?சரி பொறுத்து பார்ப்போம் என்று விட்டு விட்டாள்.


இரண்டு நாள் கழிந்தது,அனு சிவகுமரனை அழைத்து ஒரு கவரை கொடுக்க அவனும் கண்ணாலேயே என்னவென்று வினவ உனக்குத்தான் என்று ஜாடை காட்டி சிரிக்க ஒன்றுமே புரியாமல் விழித்தாள் ரமணி.ஆகா அனுவும் சிவகுமரனும் அப்படியாக இருக்குமோ?என்று நினைக்கவும்,வகுப்பு முடியவும்,சிவ குமரன் இவளை “கொஞ்சம் வெட் லேன்ட் பக்கம் வர முடியுமா என்று கேட்க அவளும் ம்ம்” என்று தலையாட்டி உடன் செல்லவும்,ரமணி விக்கித்து போனாள்.


அரைமணி நேரம் கழித்து ஹாஸ்டல் வந்த அனுவிடம் ரமணி பேசவே இல்லை.


“ரமணி மெஸ் வரலையா டிபன் சாப்பிடலாம்” என்ற அனுவிடம் நான் வரலை,”காஃபி மட்டும் எனக்கு எடுத்து வந்து விடு” என்று சொல்ல ,என்ன ஆச்சு ரமணிக்கு ஒரு சமயம் சிவகுமரனுடன் பழகுவது பிடிக்கலையோ?” என்று எண்ணி விட்டு மடமடவென்று மெஸ்ஸை நோக்கி போனாள் அனு.


அனுவிற்கு ரமணி இல்லாமல் சாப்பிட மனம் வரவில்லை.சாப்பிட்டேன் என்று பெயருக்கு ஏதோ கொரித்து வீட்டு ருமிற்கு மனது கேட்காமல் ரமணிக்கு டிஃபன் எடுத்து வந்தாள்.ஃபீல்டில் என்னால் முடியாத வேலையை தானே சிவகுமரன் செய்து உதவினான்,இவளுக்கு என்ன வந்தது,என்ற மனவோட்டத்துடன் ரூம் நோக்கி வந்தாள் அனு.


”ரமணி சாப்பிடு எதுவானாலும் சாப்பிட்டுட்டு பேசலாம்,என் மீது உள்ள கோபத்தை சாப்பாடு மேல் காட்டாதே” என்றவளிடம், “ஆமாம் சாப்பாடு ஒண்ணு தான் குறைச்சல் என்னைவிட அந்த சிவகுமரன் உனக்கு ஒசத்தியோ ?”


“இல்லைடா அனு ,அவனைப்பார்த்தால் எனக்கு என்னவோ பாவமாக இருக்கும்,நாடு விட்டு நாடு வந்து நேசத்திற்காகவும் பாசத்திற்காகவும் ஏங்குகிறான்.அவன் தப்பானவன் இல்லை புரிஞ்சுக்கோ.”


“என்னமோ இது காதலில் முடியாமல் இருந்தால் சரி” என்றாள் ரமணி.


“அன்றைக்கு என்னவென்றால் அவனோடு நின்னு அப்படியொரு கடலை ,அவன் என்ன அப்படி கொஞ்சி கொஞ்சி பேசறான்,நீயும் பதிலுக்கு வழிஞ்சியே ,நான் வந்ததும் கூப்பிட்டதும் கூட தெரியலை,ஆமாடி பேசினேன்,இப்ப என்ன ?”


”சிவகுமரனோட இலங்கைத்தமிழ் எனக்கு பிடிச்சிருக்கு,அவன் பேசியதை ரசித்து கேட்டு சிரித்தேன்.அவன் கஷ்டத்தை எங்கிட்ட சொன்னான்,அது உனக்கு கொஞ்சற மாதிரி தெரியுதா?”


“வேறு என்னன்ன சந்தேகம் இப்பவே கேட்டு முடிச்சிடு” என்ற அனுவிடம் ,ரமணியும் சளைக்காமல் ,”சீனியர்ஸ் பேர்வல் அப்ப அவன் சின்ன சின்ன ரோஜாப்பூவேன்னு பாடறான்,கண்ணை மூடாம அவனையே பார்த்தே,கண்ணில் இருந்து கண்ணீர் வேற” “ஆமாம், அந்த பாட்டு பிடிக்கும் ரசித்து கேட்டேன்.அதில் என்ன தப்பு ?”


“என்னை கூட கண்டுக்கொள்ளாமல் ஓடிப்போய் அவன்கிட்ட பேசினே ! “
“ நல்லாயிருந்ததுன்னு சொல்லப்போனேன் ,சாரி ரமணி,”நீ எப்பவுமே என்னை தப்பா புரிஞ்சுக்கறே ஜேசுதாஸ்,எஸ்பிபி நம்ம ஆடிட்டோரியம் வந்து பாடினால் எப்படி ரசிப்போமோ அதே மாதிரி ரசனை தான்,போடி போ உனக்கும் உன் சந்தேகத்திற்கும் வேலையில்லை,எனக்கு ரெக்கார்ட் ஒர்க் இருக்கு,என்னை மூடு அவுட் பண்ணாதே சொல்லிட்டேன்” ,என்ற அனுவிடம்,


”சரி நாம காலேஜ் சேரும் பொழுதே முடிவெடுத்ததை மறந்திடாதே,இந்த காதல் கத்திரிக்காய்ன்னு நம்ம இரண்டு பேரும் விழக்கூடாதுன்னு முடிவெடுத்தோம்,நினைவு இருக்கா?: ”உன்னை விட எனக்கு நல்லாவே நினைவு இருக்கு,எங்க அண்ணன் கூட சொன்னதையும் சொல்றேன் கேட்டுக்க,உனக்கு நிறைய ஃப்ரீடம் தந்திருக்கோம்,மிஸ்யூஸ் பண்ணகூடாதுன்னு சொன்னது எப்பவும் என் மனசில் இருக்கு,ஏண்டி ஒரு பையனும் பெண்ணும் பேசினால் அது காதலில் தான் முடியவேண்டுமா ?” இப்படியே வாக்குவாதம் தொடர்ந்ததே தவிர முடிவுக்கு வந்த பாடில்லை.


அனு மீது ரமணிக்கு அப்படியொரு பொஸ்சஸ்சிவ்னெஸ்.
ரமணியை விட்டுட்டு மெஸ்ஸிற்கு போனால் கூட அன்று அனுவுடன் பேசமாட்டாள்,அந்தளவு உயிருக்குயிரான தோழிகள்.


”சரி ரமணி ,எனக்கு தூக்கம் வருது காலையில் மீட்டியாரொலஜி லேப் போகணும், சைக்கிள் அழுத்தனும்.சீக்கிரம் தூங்கு” என்ற அனுவிடம் , “சரிடி ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு சிவகுமரனுக்கு ஒரு லட்டர் கவர் கொடுத்தாயே,அது என்னவாம்?”

“முட்டாள், நல்லா புரிஞ்சிக்கோ இலங்கையில் கலவரம்,போர்ன்னு உனக்கு தெரியும் தானே ,அவனுக்கு மெஸ்பில்,எக்ஸாம் ஃபீஸ் அங்கிருந்து வரலை,என்னிடம் பணம் இருந்தால் கடனாக கேட்டான்,இருந்தது கொடுத்தேன் அவ்வளவே” என்ற அனு ஆயாசமாக கண் மூடி விட்டாள்.

காலையில் எழுந்தது தான் தெரியும்,லேட்டாக எழுந்ததால் அனுவும் ரமணியும் பார்த்துக்கொள்ளவே இல்லை.மடமடவென்று கிளம்பி மெஸ் சென்று சாப்பிட்டு இருவரும் சைக்கிளில் லேப் நோக்கி பறந்தனர்.


வழியில் சிவகுமரன்,அனு கண்டும் காணாமலும் போகவே பொறுக்காமல் ரமணி, “என்ன குமரா,சைக்கிள் இல்லையா ? என் சைக்கிளை வேண்டுமானால் தருகிறேன்,நான் அனுவுடன் டபுள்ஸ் போறேன்” என்ற ரமணியை ஆச்சரியமாக பார்த்தாள் அனு.

ஒன்றும் நடவாதது போல், ”ம்ம்ம் குவிக் குவிக் நேரமாகுது” என்று சைக்கிளில் தொற்றி ஏறினாள் ரமணி.

--ஆசியா உமர்.

20 comments:

Chitra said...

தோழமையின் சிறப்புடன் ஒரு நல்ல கதை. பாராட்டுக்கள்!

சே.குமார் said...

கதை அருமையா இருக்குக்கா...

நடையும் அருமையா இருக்கு.

அடிக்கடி எழுதுங்க.

LK said...

nalla kathai

kavisiva said...

கதை நல்லா இருக்கு ஆசியா! இந்த அனுவும் ரமணியும் உங்களோடு படிச்சவங்களா?! விவசாய கல்லூரியின் சூழலில் எழுதப் பட்டதால் கேட்டேன் :)

asiya omar said...

சித்ரா

குமார்

எல்.கே

அருமையான கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

கவி வருகைக்கு மகிழ்ச்சி. இது உண்மை கலந்த கற்பனை கதை,கதைகள் சம்பவங்களின் அடிப்படையில் தானே பிறக்கிறது.

சசிகுமார் said...

கதை நல்லா இருக்கு அக்கா

நாடோடி said...

இர‌ண்டு பேருடைய‌ கேள்வி ப‌தில்க‌ளை ஒரே ப‌த்தியாக‌ எழுதியிருப்ப‌தால் ப‌டிக்க‌ கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருக்கு... ம‌ற்ற‌ப்ப‌டி க‌தை சூப்ப‌ர்.

இளம் தூயவன் said...

கதை அருமை.

ஸாதிகா said...

ஆசியா..கதையில் மெருகு கூடிக்கொண்டே போகின்றது.

asiya omar said...

சசிகுமார்
இளம் தூயவன்
இருவரின் கருத்திற்கு மிக்க நன்றி.

நாடோடி நீங்கள் சொல்வது சரியே.

ஸாதிகா உங்கள் கருத்து எனக்கு மிக்க ஊக்கத்தை தருகிறது.நன்றி தோழி.

Mrs.Menagasathia said...

very nice akka!!

senthil1426 said...

good story. appadiyae oru college kondu sentrathu.

very nice.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது கதை...வாழ்த்துகள்...

sandhya said...

ஆசியா ஜி கதை நல்லா இருக்கு ..இன்னும் நிறையை கதை எழுத அன்புடன் கேட்டு கொள்கிறேன் வாழ்த்துக்கள் ..நன்றி

எம் அப்துல் காதர் said...

அருமையான கதை நடை மேடம்! நல்லா இருக்கு!!

vanathy said...

akka, super story.

asiya omar said...

மேனகா
செந்தில்
கீதாஆச்சல்
சந்தியா
அப்துல் காதர்
வானதி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

வாழ்க்கை சம்பவஙக்ளை அப்படியே கதையா சித்தரித்து , எழுதியது அருமை ஆசியா..

asiya omar said...

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி ஜலீலா.