Saturday, August 28, 2010

சிக்கன் ப்ரெட் பக்கோடா

இந்த குறிப்பை படங்களுடன்   இங்கு (தமிழ்குடும்பம்)சென்று பார்க்கவும்.
தேவையான பொருட்கள்;
ப்ரெட் துண்டுகள் - 6  சிறியது
சிக்கன் கீமா- 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 கரம் மசாலா - கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள்  - அரை + கால்டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை +கால் டீஸ்பூன்
கடலை மாவு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
மல்லி,புதினா -சிறிது
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
 
1. சிக்கன் கீமாவை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும்.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்,பின்பு நறுக்கிய மிளகாய்,மல்லி புதினா சேர்த்து பிரட்டவும்.சிக்கன் சேர்க்கவும்.அதனுடன் மஞ்சள்,மி;ளகாய்த்தூள்களை சேர்க்கவும்.
 
2. நன்கு பிரட்டி மூடி போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்.சிக்கன் கீமா மசாலா ரெடி.
 
3.ப்ரெட் ஓரம் கட்செய்து கொள்ளவும்.ஒரு ப்ரெட் துண்டில் ரெடி செய்த சிக்கன் கீமா மசாலா வைத்து இன்னொரு ப்ரெட் மூடி மெதுவாக அழுத்தி வைக்கவும்.அதனை குறுக்கே கட் செய்து வைக்கவும்.
 
4.இப்படியே 3 செட் ரெடி செய்து கொள்ளவும்.
 
5.ஒரு பவுலில் அரை கப் கடலை மாவு,கால்ஸ்பூன் மஞ்சள் தூள்,கால்ஸ்பூன் மிளகாய்த்தூள்,சிறிது உப்பு சேர்த்து தளர்வாய் கரைத்து கொள்ளவும்.மாவு உள்ள பவுலில்  தயார் செய்த ப்ரெட் துண்டை வைத்து ஸ்பூனால் மாவை எடுத்து ப்ரெட் மீது விடவும்.
 
6.கடாயில் தேவைக்கு எண்ணெய் காயவைத்து காய்ந்தவுடன் மாவில் தோய்த்த ப்ரெட் துண்டை போட்டு இருபுறமும் சிவற பொரித்து எடுக்கவும்.பேப்பர் டவலில் வைக்கவும்.
 
7.சுவையான ரிச் டேஸ்டி சிக்கன் ப்ரெட் பக்கோடா ரெடி.
சிறிய துண்டாக கட் செய்து விரும்பியபடி அலங்கரித்து பரிமாறவும்.ரெட்,யெல்லோ,கீரீன் கேப்ஸிகம் கட் செய்து உடன் பரிமாறியுள்ளேன்.அதனுடன் இந்த சிக்கன் ப்ரெட் பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும்.
 
குறிப்பு :  3 - 4 செட் , நான்கு நபருக்கு போதுமானது.எண்ணெய் பதார்த்தம் என்பதால் அளவாய் சாப்பிடுவது நல்லது.



 -ஆசியா உமர்.

14 comments:

எம் அப்துல் காதர் said...

சிக்கென் ப்ரெட் பக்கோடா soooper ரெசிபி

இளம் தூயவன் said...

அருமையாக வித்தியாசமாகவும் உள்ளது.

asiya omar said...

கருத்திற்கு நன்றி .சகோ.அப்துல் காதர்,இளம்தூயவன் வருகைக்கு மகிழ்ச்சி.

vanathy said...

super & yummy.

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள்... செய்முறை ந‌ல்லா இருக்கு ச‌கோ..

Chitra said...

This is one of my favorite snacks ...
Thank you for the recipe.

asiya omar said...

வானதி
நாடோடி
சித்ரா

மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சே.குமார் said...

வாழ்த்துக்க‌ள்...

செய்முறை ந‌ல்லா இருக்கு ச‌கோ.

சசிகுமார் said...

அருமை அக்கா உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிநேகிதி said...

தமிழ்குடும்பத்தில் பார்த்தேன்.. ரொம்ப நல்லா இருக்கு அக்கா..

Jaleela Kamal said...

பிரெட் பஜ்ஜி அருமை, அங்கும் பார்த்தேன்.
நோன்பு என்பதால் எங்கும் சரியாக வரமுடியல

asiya omar said...

குமார்

சசிகுமார்

சிநேகிதி

ஜலீலா

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

Noorul said...

im new to this blog. actually i came to find some iftar recipes, got lotsa variety food receipes. Please post some more sweet based iftar items when time permits. Thanks. Alina Rahim

asiya omar said...

thanks alina for your visit.try to give more sweet recipes.