Saturday, August 28, 2010

களச்சாப்பாடு - எஙக ஊர் பழக்கம்.



எங்க ஊரில் விஷேசம் என்றால் களத்தில் வைத்து சாப்பாடு பரிமாறுவது வழக்கம்.முன்பு நான்கு நபராக அமர்ந்து சாப்பிடுவாங்க,இப்ப பெரியவங்க என்றால் 3 நபர் தான்.களத்தில் அமர்ந்து சாப்பிடும் பொழுது அது ஒரு தனி சந்தோஷம்,ஒரு குடும்பமே ஒரு ப்லேட்டில் இருந்து சாப்பிட்டால் எவ்வளவு ஜாலியாக இருக்கும்.



இப்ப காலம் மாறி வந்தாலும் இந்த பழக்கம் இன்னமும் இருக்கு.எங்க பிள்ளைங்க ஊர் சென்றவுடன் உம்மா களத்தில் இருந்து சாப்பிடனும் என்று ஆசையாக சொல்வாங்க,இங்கே கூட பெரிய களம் வாங்கி வைத்து இருக்கிறேன்,ஆசைக்கு எப்பவாவது சாப்பிடுவது வழக்கம்.ஆனால் பிள்ளைங்க ,உம்மா எங்காவது விருந்து வீடு சென்று களத்தில் சாப்பிட்டால் தான் நல்லாயிருக்கும்னு ஒரு கமெண்ட் வேறு.


இந்த களத்தில் சோறு சுற்றி வைத்து நடுவில் கறிவைத்து,பின்பு தால்ச்சா ,சாப்பாடு தனியாக சப்ளை வரும்.கறி மறுபடி வராது.


இப்ப கொஞ்சம் மாறியதால் சின்ன சின்ன தட்டில் வெங்காயப்ச்சடி,சுருட்டு கறி,ஸ்வீட் என்று சைட் டிஷ் வைக்க ஆரம்பிச்சாச்சு.


இதிலே ஸ்பெஷல் என்னவென்றால் பகிர்ந்து சாப்பிடுவது.அவங்க முன்பு இருப்பதை சாப்பிடனும்,மற்றவரை அனுசரித்து சாப்பிடனும். சின்ன பிள்ளங்க என் முன்னாடி இருந்த கறியை அவன் எடுத்துக்கிட்டான்ன்னு செல்லமாக சிணுங்குவதும் நடக்கும்.அப்புறம் கறி காலியானதும் தால்ச்சாவை சோறு நடுவில் பாத்தி கட்டி சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும்.


களச்சாப்பாட்டில் நம்ம தேவைக்கு வாங்கி வைத்து கூச்சப்படாமல் அவரவர் வயிற்றுக்கு சாப்பிடலாம்.தெரிஞ்சவங்க சேர்ந்து இருந்து சாப்பிடுவாங்க,சிலசமயம் வீட்டில் ஒருவர் வீதம் விருந்துக்கு போனால் யார் இருக்காங்களோ அவங்களோட இருந்து சாப்பிட்டு கிட்டு போய்ட்டே இருப்பாங்க.



இந்தக்களத்தை எங்க ஊரில் தாலான்னு சொல்வாங்க,இந்த தாலாவில் சாப்பிட்டால் அளவே தெரியாது வைத்து வைத்து சாப்பிட்டு,சாப்பாடு அளவு கூடிவிடும்.


கையும் வாயும் மணக்கும் சாப்பிட்டு எழுந்தால்,அவ்வளவு மணம் ருசியாக அசத்தலாக இருக்கும்.அவங்க அவங்க வசதிக்கு தகுந்தபடி வெருஞ்சோறும், கறி ,கத்திரிக்காய் ஆனம் என்றும் நெய்ச்சோறு,தேங்காய்ச்சோறு தால்ச்சா,மட்டன் குருமா,இன்னும் பிரியாணி சைட் டிஷ் உடனும் பரிமாறுவது வழக்கம்.



அந்தக்காலத்தில் களத்தில் ஒற்றைக்காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவாங்க,இப்ப நாகரீகம் வளர்ந்து விட்டதால் சப்பணம் போட்டு இருந்து சாப்பிடுறாங்க.சப்பணம் போட்டால் அளவு தெரியாது,ஒற்றைக்கால் போட்டு சாப்பிடும் பொழுது கொஞ்சமாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கும்.


அப்ப களம் எனாமல்,செம்பு,பித்தளை(ஈயம் பூசி சூப்பராக இருக்கும்).இப்ப எவர்சில்வர்,அலுமினியம்,,அன்ப்ரேக்கபில் கூட வந்து விட்டது.



வெளியூர்வாசிகள் வரும்பொழுது அவர்களை தனியாக அமரவைத்து சாப்பாடு கொடுப்பது வழக்கம்.சிலருக்கு இப்படி களத்தில் உட்கார்ந்து சாப்பிட மனம் ஒப்பாது.எங்க ஊரில் சுத்தம் பார்க்கின் சுற்றம் இல்லை. கூடி சாப்பிடுவதையும் அனுபவிக்கனும்.


அந்தக்காலத்தில் திருமண வைபவங்கள் வீட்டில் மட்டும் தான் எங்க ஊரில் நடத்தினாங்க,அப்ப இந்தக்களச்சாப்பாடு எவ்வளவு கூட்டம் வந்தாலும் 2000 பேருக்கு 2 மணி நேரத்தில் சாப்பாடு பந்தி முடிந்து விடும்.இப்பமும் நடந்து கொண்டு தான் இருக்கு.இல்லாவிடில் தெருச்சாப்பாடு ,ஊர்ச்சாப்பாடு வைக்க முடியாதே.


எங்க ஊரில் 1990 -க்கு பின்பு மண்டபத்தில் அதிக திருமணம் நடக்க ஆரம்பித்து இருப்பதால் மண்டபத்தில் தனிச்சாப்பாடு தானே. இப்ப நிறைய வேஸ்ட் ஆவதை தடுக்க தனிச்சாப்பாடு நிறைய பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க.


நிறைய சிரமம் இருந்தாலும் இந்த களச்சாப்பாடு பழக்கத்தை எங்க ஊர் மக்கள் விடுவதாய் இல்லை.




-- ஆசியா உமர்.

22 comments:

Chitra said...

எங்க ஊரில் சுத்தம் பார்க்கின் சுற்றம் இல்லை. கூடி சாப்பிடுவதையும் அனுபவிக்கனும்.


......குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - சுத்தம் பார்க்கின் சுற்றம் இல்லை..... ரெண்டும் நல்லா இருக்குதே....
உங்கள் பதிவை வாசிக்கும் போது, உறவை ஒன்றுபடுத்தி, பலப்படுத்தும் இந்த பழக்கத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்டேன்.

இளம் தூயவன் said...

ஆஹா அந்த தனி ருசி ருசி தான். தாழிச்சா, குருமா, தனிகறி,சீனி துவை,தக்காளி பச்சடி,பிரிணி ஐந்து வகை சாப்பாடு என்று ,எங்கள் ஊரில் சொல்வார்கள். இதன் நோக்கம்
ஏழை பணக்காரன் என்று பாகுப்பாடு இருக்க கூடாது என்பதே,
வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு சிரமமாக இருப்பதால் ,
இந்த முறை சில ஊர்களில் குறைந்து வருகிறது.

vanathy said...

அக்கா, பார்க்கவே ஆசையா இருக்கு. குட்டீஸ்கள் அழகு & நல்லா போஸ் குடுக்கிறாங்க.

எம் அப்துல் காதர் said...

களச் சாப்பாடு :
சுவைபட அருமையா விவரித்து ஒரு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்ட திருப்தியை தந்தது மேடம். உங்கள் ஊரில் "தாலான்னு" சொல்வதை, எங்கள் ஊர்களில் "சஹன்" சாப்பாடு என்று சொல்வார்கள்.

அப்புறம் ஒரு கேள்வி?

உட்கார்ந்து போஸ் கொடுத்து சாப்பிடும் இளைஞ்சர்களில் உங்க பிள்ளைகள் யாரும் இருக்கிறார்களா மேடம்?? சும்மா தமாசு ஹா..ஹா..

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்க்கவே சூப்பரா இருக்கு.

நாடோடி said...

க‌ள‌ச்சாப்பாடு விள‌க்க‌ம் ந‌ல்லா இருந்த‌துங்க‌... சாப்பிட்ட‌ திருப்தி.

அஹமது இர்ஷாத் said...

இப்ப காலம் மாறி வந்தாலும் இந்த பழக்கம் இன்னமும் இருக்கு.//

எங்கள் ஊரிலும் தான்..

Jaleela Kamal said...

களச்சாப்பாடு அருமை, தாலாவில் உட்கார்ந்து சாப்பிடும் போது நல்ல இருக்கும், 1991 நில் மேலபாளையம் வந்த போது கள்த்தில் உட்காரவைத்து சாப்பாடு ஊட்டிவிடாத குறையா அன்பு மழையில் குளிக்க வைத்து விட்டார்கள் .

என் கல்யாணத்திலும் தாலாவில் தான் தக்குடி, சேமியா, எல்லாம் ஒன்று கூடி சாப்பிட்டோம்.

மாமியார் வீட்ட்லும் முன்பு எல்லா நாத்தனார்கள் (மைனிமார்களுடன்) களத்தில் தான் சாப்பிடுவோம்.

syed mohammed said...

தயவு செய்து இது எந்த ஊரு வழக்கம்முன்னு தெரிய படுத்த முடியுமா?

ஸாதிகா said...

ஆஹா..பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள் தோழி.இது இப்பொழுதும் எங்கள் ஊரிலும் உண்டு.இதனை சஹன் என்போம்.சஹனில் சாப்பிடுவதற்காகவே உறவினர்கள்,தோழிகள் என்று குழுக்கலாக சேர்ந்து செல்வோம்.மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.வீட்டிலேயே சஹன் வைத்து சாப்பிடுகின்றீர்களா?பேஸ்..

asiya omar said...

சித்ரா ஆமாம் பழமொழியை நமக்கு தகுந்தபடி மாற்றியாச்சு.

இளம் தூயவன் நல்ல கருத்து.

வானதி மகிழ்ச்சி.

அப்துல் காதர் இவங்களும் எங்க வீட்டு பிள்ளைங்க தான்,என் பிள்ளைங்க ப்ளஸ் 2,ஒன்பது படிக்கும் பெரிய பிள்ளைங்க.

asiya omar said...

புவனேஸ்வரி

ஸ்டீபன்

அஹமத் இர்ஷாத்

ஜலீலா

வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

செய்யது முகம்மது உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.இது திருநெல்வேலி பழக்கமுங்கோ.

asiya omar said...

ஸாதிகா வருகைக்கு மகிழ்ச்சி,பிள்ளைங்க ஆசைப்பட்டாங்கன்னு சோறு வச்சு கொடுக்கும் பொழுது தற்செயலாக எடுத்தது தோழி.

செ.சரவணக்குமார் said...

அருமையா எழுதியிருக்கீங்க மேடம்.

இலா said...

கேக்கவே ஆசையா இருக்கு.. இப்ப பாக்கிற சுத்ததில போட்டோ மட்டும் தான் எடுக்க முடியும் போல... 2004ல ஒரு எத்தியோப்பியன் உணவகத்தில பெரிய கூடை மாதிரி தட்டத்தில 4 பேர் (அண்ணா/அண்ணி/நான்/இவர்) இப்படி சாப்பிட்டோம்.. ரொம்ப சிரிப்பா இருந்தது... இந்த பழக்கமும் எல்லா ஊர்லையும் இருக்கும்போல.. ஒரு முறை டிராவல் சேனலில் அரேபியாவிலும் இப்படி சாப்பிட்டதை காட்டினாங்க...

asiya omar said...

சரவணக்குமார் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

இலா அத்திபூத்தாற்போல் வந்தாலும் மிக்க மகிழ்ச்சி.நேரம் கிடைக்கும் பொழுது வந்து போங்க.

syed mohammed said...

அருமையான பதிவு. இந்த கல சாப்படுலே உள்ள பிரச்சனை எண்ணான கல்யாணம் மற்றும் விஷேசங்களில் விரிப்பு மற்றும் குடி தண்ணீர் ஆகியவற்றில் பெரும்பாலனவர்கள் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.

Mahi said...

புதிய வழக்கமா இருக்கு.போட்டோல பசங்க நல்லா போஸ் தராங்க ஆசியாக்கா!

asiya omar said...

ஆமாம் செய்யது முகம்மது நீங்கள் சொல்வது மிகச் சரியே.

asiya omar said...

மகி கருத்திற்கு மகிழ்ச்சி மகி.