Sunday, August 29, 2010

நோன்பு ஸ்பெஷல் - கூல் வெரைட்டி புட்டிங்ஸ் / IFTAR SPECIAL COOL VARIETY PUDDINGS.

ஆப்பிள் புட்டிங்


தே.பொ :
அகார் அகார் - ரெட் கலர் - ஒரு கைளவு
ஆப்பிள் -1
சீனி - 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - அரை லிட்டர்

அகார் அகாரை மிக்ஸியில் பொடித்து விட்டு தண்ணீரில் கால் - அரை மணி நேரம் ஊறவைத்து அடுப்பில் வைத்து கரையும் வரை காய்ச்சி,சீனி சேர்த்து கலந்து ஆறவிடவும்.

ஆப்பிள் தோல் நீக்கி சிறிய துண்டாக கட் செய்து வைக்கவும்.
ரெடி செய்த அகார் அகாரில் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து ஃப்ரிட்ஜில் உறைய வைக்கவும்.உறைந்த பின்பு துண்டாக கட் செய்தும் பரிமாறலாம்.ஆப்பிள் பார்ப்பதற்கு அழகாய் மேலே மிதந்து கொண்டிருக்கும்.

அப்படியே பவுலில் விட்டு செட் செய்தும் பரிமாறலாம்.

சுவையான சத்தான கூல் ஆப்பிள் புட்டிங் ரெடி.
பைன் ஆப்பிள் புட்டிங்:
மேற்சொன்ன முறையில் ஒயிட் அகார் அகாரை காய்ச்சி வடிகட்டி அதனில் தேவைக்கு
எல்லோ கலர் 2 சொட்டு விட்டு பைன் ஆப்பிளை கட் செய்து போடவும்.ஆப்பிள் லேசாக இருப்பதால் மேலே மிதக்கும்,ஆனால் பைன் ஆப்பிள் அடியில் சென்று தங்கிவிடும்,
ஃப்ரிட்ஜில் வைத்து உறைந்த பின்பு துண்டாக கட் செய்து பரிமாறலாம்.
சுவையான டேஸ்டி பைன் ஆப்பிள் புட்டிங் ரெடி.

சாக்லேட் புட்டிங் :
தே.பொ :
பால் - அரை லிட்டர்
சீனி - 6 டேபிள்ஸ்பூன்
சாக்கோ புட்டிங் மிக்ஸ் - 2 -3 டேபிள்ஸ்பூன்
அல்லது கோகோ பவுடர் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்தால் அகார் அகார் ஒரு கை பிடியளவு பாலுடன் சேர்த்து காய்ச்சவும்.ஆறியவுடன் அதனை பவுலில் விட்டு ஃப்ரிட்ஜில் செட் செய்து பரிமாறவும்.சாக்லேட் விரும்பிகளுக்கு இந்த டேஸ்ட் பிடிக்கும்.


சுவையான யம்மி சாக்லேட் புட்டிங் ரெடி.
கிரீம் கேரமல் புட்டிங்:
தேவையான பொருட்கள் ;
பால் - அரை லிட்டர்
க்ரீம் கேரமல் மிக்ஸ் -ரெடி மிக்ஸ்

[இந்த பேக்கில் கீரீம் கஸ்டர்ட் ,கேரமல் மிக்ஸ் இருக்கும்}அரை லிட்டர் பாலுடன் மிக்ஸை சேர்த்து காய்ச்சி ஆற வைக்கவும் சுகர் அதிலேயே இருக்கும்.பவுலில் முதலில் கேரமல் பின்பு காய்ச்சிய கீரீம் கஸ்டர்ட் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
அல்லது அரை லிட்டர் பால் காய்ச்சியதும் அடுப்பை அணைத்து பின்பு 2 டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் சிறிது பாலுடன் மிக்ஸ் செய்து சூடான காய்ச்சிய பாலில் கலந்தால் கெட்டியாகி விடும்,5 டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து கலக்கவும்.அதனை பவுலில் விட்டு செட் செய்யவும்.

ஃப்ரிட்ஜில் 1-2 மணி நேரம் வைத்து செட்டானதும் பரிமாறவும்.ஃப்ரூட் மிக்ஸ் செய்தால் ஃப்ரூட் கஸ்டர்ட் ரெடி. நான் கட் செய்த ஆப்பிள்,மாம்பழம்,கருப்பு,பச்சை திராட்சை சேர்த்துள்ளேன்.அழகுக்காக கருப்பு,பச்சை திராட்சையை மேலே தூவி உள்ளேன்.





ரெடிமேட் கேரமல் சாஸ் விட்டு பரிமாறவும்.சுவையான கீரீம் கேரமல் புட்டிங் ரெடி.

மில்க் அகார் அகார் இங்கு சென்று பார்க்கவும்.மில்க் அகார் அகார் ரெடி செய்த பின்பு செட் செய்வதற்கு முன்பு நாம் அவற்றில் வெனிலா ப்லேவர் ரோஸ்மில்க் ஃப்லேவர்,பாதாம் மில்க் ஃப்லேவர், சேர்த்தால் பாதாம், ரோஸ்மில்க் ஃப்லேவருடன் அகார் அகார் ரெடியாகிவிடும்,எல்லாம் நம் விருப்பம் தான்.வெறும் தண்ணீர், அகார் அகார்,சீனி சேர்த்து காய்ச்சிய பின்பு ரூஹ் ஆஃப்ஸா ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்தால்ரூஹ் ஆஃப்ஸா அகார் அகார் ரெடி.



 Rooh Afza Agar Agar

குறிப்பு :
கேரமல் சாஸ் வீட்டில் செய்ய ப்ரவுன் சுகர் அல்லது நார்மல் சுகருடன் பட்டர் சேர்த்து கருகாமல் சிம்மில் வைத்து கரைய வைத்து பால் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் சிறிது சேர்த்து கெட்டியானவுடன் பக்குவமாக காய்ச்சி இறக்கினால் கேரமல் ரெடி.


- ஆசியா உமர்.

27 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

athira said...

சூப்பர் ஆசியா. அனைத்துமே சூப்பர். நோன்புக்காக விதம் விதமாச் செய்கிறீங்களோ?

ஆப்பிள் டிஷ்களும் அழகு.

சிநேகிதி said...

அக்கா பார்க்கும் பொழுதே சாப்பிட தோணுது... அசத்தலாக இருக்கு

asiya omar said...

புவனேஸ்வரி
அதிரா
சிநேகிதி
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

அருமையா இருக்கு மேடம்!! வெயில் நேரத்துக்கு தேவையான ஒன்று.

ஹைஷ்126 said...

என் நண்பர்களையும், நோன்பு திறப்பதையும் மிஸ் பண்ணுகிறேன் :(((

Vijiskitchen said...

சூப்பர் ஆசியா எல்லாமே சாப்பிடனும் போல் இருக்கு. அப்படியே இங்கு ஒரு பார்சல்.
ரெட் கலர் அகர் அகர் கூட கிடைக்குதா, நான் இப்ப தான் எங்கு எங்கோ தேடி வெள்ளை கலரில் ஒரு பாக்கெட் வாங்கியுள்ளேன். இனிமேல் தான் செய்யனும்.

Pavithra Srihari said...

super !!!!!

நாடோடி said...

செய்முறையுட‌ன் ப‌ட‌ங்க‌ளும் பார்க்க‌ அழ‌கா இருக்கு..

Chitra said...

Agar Agar.... is it same as Jello???

சசிகுமார் said...

பார்ப்பதற்கே நன்றாக உள்ளது அக்கா இன்னும் சாப்பிட சொல்ல வேண்டுமா என்ன

அஹமது இர்ஷாத் said...

arumai...

ஸாதிகா said...

வித்தியாசமான முயற்சி.செய்து விடுவோம்.

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

நேர்த்தியான‌ ச‌மைய‌ல். வாழ்த்துக்க‌ள்

asiya omar said...

அப்துல் காதர்
சகோ.ஹைஷ்
விஜி
பவித்ரா
நாடோடி
சித்ரா
சசிகுமார்

அஹமது இர்ஷாத்
ஸாதிகா
உங்கள் அனைவரின் வருகைக்கு மிக்க நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

செஃப் பழனி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

ஒ.நூருல் அமீன் said...

ரமலான் ஸ்பெஷல் அருமை

Mrs.Menagasathia said...

ellame kalakala irukku.....

vanathy said...

அக்கா, கலர் கலராக சூப்பரா இருக்கு.

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமையான ரெஸிப்பி.

இளம் தூயவன் said...

அருமையாக உள்ளது. செய்முறை விளக்கம் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளம்.

asiya omar said...

தமிழ் உலகம்
நூருல் அமீன்
மேனகா
வானதி
அக்பர்
இளம்தூயவன்

உங்கள் அனைவரின் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

சாக்லேட் அகார் புட்டிங் புது ஐடியா, செய்துட வேண்டியதுதான்.
கோக்கோ பவுடர் வாங்கி அப்படியே இருக்கு.

எல்லா புட்டிங்கும் அருமை

Mahi said...

ஆஹா..கோடைக்கேற்ற குளு-குளு ரெசிப்பியா போட்டு தாக்கிட்டீங்க ஆசியாக்கா! கலர்புல்லா இருக்கு எல்லா புட்டிங்க்ஸ்-ம்!

asiya omar said...

ஜலீலா,மகி கருத்திற்கு மகிழ்ச்சி.

அன்னு said...

ஆஸியாக்கா...கலக்குறீங்க!! வாழ்த்துக்கள்!!