Tuesday, August 31, 2010

மட்டன் போன் கஞ்சிதேவையான பொருட்கள் ;
ஆட்டு எலும்பு - 400 கிராம்
பச்சரிசி - அல்லது பச்சரிசி குருணை - 200 கிராம்
விரும்பினால் ஒரு குத்து பாசிபருப்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
வெங்காயம்- 2
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 4
தேங்காய்ப்பால் - பாதி காயில்
எண்ணெய் +நெய் - த்லா 1 டேபிள்ஸ்பூன்
மல்லி ,புதினா,கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு

கஞ்சிப்பொடிக்கு
சீரகம்- ஒன்னரை டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்-அரைடீஸ்பூன்
ஏலம்-2
கிராம்பு - 3
பட்டை -சிறிய துண்டு
மேற்சொன்ன ஆறு பொருளையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

குறுக்கெலும்பு அல்லது கிடைக்கும் எலும்பை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகெட்டி வைக்கவும்.எலும்பில் கொழுப்பு இருக்கக்கூடாது.

குக்கரில் அரிசியுடன் எலும்பை போட்டு தேவைக்கு தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.


பாசிப்பருப்பு ஒரு குத்து,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட், மேற் சொன்ன படி பொடித்த கஞ்சிப்பொடி,மல்லி,புதினா ,உப்பு சேர்த்து அரிசிக்கு 6 - 7 மடங்கு தண்ணீர் வைத்து கொதிவரவும் மூடி விடவும்.


முதல் விசில் வரவும் சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவைக்கவும்,வெந்ததும் சூட்டோடு மசித்து விடவும்.

கடாயில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம் சிறிது போட்டு வதக்கி சிவறவும் கருவேப்பிலை போட்டு வெடித்து தேங்காய்ப்பால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ,உப்பு சேர்த்து கொதிவரவும் இறக்கவும்.

ரெடி செய்த தேங்காய்ப்பாலை வெந்த கஞ்சியில் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.நன்கு கலந்து பரிமாறவும்.சுவையான மட்டன் போன் கஞ்சி ரெடி.இது மிகவும் மணமாக பதமாக இருக்கும்.நாம் மசாலா எதுவும் சேர்க்காமல் இப்படி வெள்ளையாக வைத்தால் அருமையாக இருக்கும்.கஞ்சியில் உள்ள மட்டன் போன் எடுத்து சாப்பிட ருசியாக இருக்கும்.வெஙகாய பக்கோடாவுடன் பரிமாறவும்.நான் 200கிராம் அரிசிக்கு தகுந்தபடி சேர்க்கும் பொருட்கள் கொடுத்திருக்கேன்,நீங்கள் செய்யும் அளவிற்கு தகுந்தபடி பொருட்கள் அளவை எடுத்து கொள்ளவும்.


-ஆசியா உமர்.


30 comments:

ஹைஷ்126 said...

ஆகா என் நண்பன் கபீர் & ஹூஸ்னாவை நினைவு படுத்திவிட்டீர்கள். இப்போ 2000 கி.மீ போனால்தான் இந்த கஞ்சி கிடைக்கும்:(


Dr.Sameena Prathap
said...

Hi Asiya,

Super recipe...ennakku mihavum pidithathu!!!

Sameena@www.myeasytocookrecipes.blogspot.com

Deepa said...

வாவ்! அருமை. முன்பு என் வீட்டுக்கு மேலிருந்த அக்கா நோன்புக் காலத்தில் வெஜ் கஞ்சி செய்து எங்களுக்கும் கொடுப்பார்.
அதன் மணமே ஊரைத் தூக்கும். இதைச் செய்து பார்க்கிறேன்.
ஒரு ட‌வுட். கஞ்சிப் பொடி என்ப‌து சோள‌மாவா?

Chitra said...

super.... onion pakoda.....எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நாடோடி said...

செய்து பார்த்துப் போட்டோவுட‌ன் போடுவ‌து தான் உங்க‌ளின் சிற‌ப்பு.. :)

சசிகுமார் said...

எலும்ப கூட வேஸ்ட் பண்றதில்லை போல சூப்பர் அக்கா

ஸாதிகா said...

புது விதமாக இருக்கே.இஃப்தாருக்கு ஒரு தடவை செய்து விடுவோம்.

asiya omar said...

சகோ.ஹைஷ் கருத்திற்கு நன்றி.எப்படியாவது இந்த நோன்பில் கஞ்சி டேஸ்ட் பண்ணிடுவீங்க.

asiya omar said...

சமீனா உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

தீபா கஞ்சிப்பொடி என்பது சீரகம்,வெந்தயம்,சோம்பு,ஏலம்,பட்டை கிராம்பு சேர்ந்தது.நான் தேவையான பொருளில் கொடுத்து இருக்கேன்,பாருங்க.

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஸ்டீபன் ஸ்டெப் பை ஸ்டெப் படத்துடன் போட்டால் புதுசாக சமைச்சு பார்க்கிறவங்களுக்கு ஈசியாக இருக்குமே.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

சசி குமார் கருத்திற்கு மகிழ்ச்சி. எலும்பில் நல்ல சத்து இருக்கு தெரியுமா?அப்புறம் சேர்த்து செய்தால் ருசியும் அருமையாக இருக்கும்.

asiya omar said...

ஸாதிகா நிச்சயம் செய்து பாருங்க.நல்ல இருக்கும்.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

GEETHA ACHAL said...

wow...so tempting...Send me parcel...

Mrs.Menagasathia said...

எலும்பு கஞ்சி சூப்பரோ சூப்பர்ர்ர்...

vanathy said...

அக்கா, பார்க்கவே நல்லா இருக்கு. சூப்பர்.

Riyas said...

நோம்பு திறக்க தேவையான உணவு,,

சே.குமார் said...

எலும்ப கூட வேஸ்ட் பண்றதில்லை போல சூப்பர் அக்கா.

பக்கோடாவும் படங்களும் நல்லாயிருக்கு.

அமைதிச்சாரல் said...

நான், வெஜ்ஜில் செஞ்சதுண்டு.. சூப்பராவே இருக்கும்..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பார்க்க்வே அருமையா இருக்கு ஆசியா.. அனுப்பி வைங்க..:))

இளம் தூயவன் said...

மட்டன் கஞ்சி அருமையாக உள்ளது.

asiya omar said...

கீதா ஆச்சல்
மேனகா
வானதி
ரியாஸ்
குமார்
அமைதிச்சாரல்
தேனக்கா
இளம் தூயவன்
அனைவரின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

//ஸ்டீபன் ஸ்டெப் பை ஸ்டெப் படத்துடன் போட்டால் புதுசாக சமைச்சு பார்க்கிறவங்களுக்கு ஈசியாக இருக்குமே.மிக்க மகிழ்ச்சி//

இத நீங்க சொல்லனுமா மேடம்! அது தான் உலகம் முழுக்க தெரிஞ்ச விஷயமா கிடக்கே. டெஸ்க் டாப்ல எப்பவுமே உங்க வலைப்பூ தான் வரும்படி எங்க வீட்ல செட் பண்ணி இருக்காக!!

asiya omar said...

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றிங்க அப்துல் காதர்.

சௌந்தர் said...

இந்த கஞ்சி எனக்கு புடிக்கும் ஆனா எங்களுக்கு செய்ய தெரியாது (:

asiya omar said...

கருத்திற்கு மகிழ்ச்சி சௌந்தர்,வருகைக்கு நன்றி.

reny said...

Hi Sister, I want to try this recipe for a health reason. Pictures really tempting to try anyone and looks yummy.

I am totally new to cooking and staying with my friends. Have got some basic questions,could you please help us?

1) விரும்பினால் ஒரு குத்து பாசிபருப்பு

Like to put paasi paruppu, could we get the dal measures in ml needed for this recipe?
(We have got measuring spoons and cups)

2)வெங்காயம்- 2

in gram measures

3)தக்காளி - 1 பெரியது
in gram measures

4) தேங்காய்ப்பால் - பாதி காயில்
Here we get fresh grated coconut in packets. Could we get the ratio of grated coconut : water in ml measures, to get the coconut milk needed foe this recipe?
(we have got measuring cups of 200ml)

5) for the seasoning, how many tablespoons(15ml) of chopped onion we can use for this recipe?

We know these are very basic questions to the talented person like you. For people like us, your answers will really be of great help. Hope you understand from our point of view.

As soon as we get your reply, we will do it and get back to you with our feedback.

Looking forward to your help sister. Thank you in advance.

Reny


reny said...

Looking forward to your reply sister. Thank you and have a nice day!

Asiya Omar said...

reny //sorry for the delayed response.Add ingredients depends upon your taste.
2-3 table spoon - paasi paruppu,onion - 100 gm, tomato - 100gm,2 cup coconut milk(medium thickness)
chopped onion - one small onion is enough.