Tuesday, August 10, 2010

புனித ரமலானே வருகவே !


பகலெலாம் பசித்து
இரவெலாம் விழித்து
அகமெலாம் நிறைந்து
அல்லாஹ்வைத் துதித்து
முகமத்(ஸல்) உம்மத்து
முழு மாதம் நோன்பு பிடித்து
அகமும் முகமும்
அமல்களால் அலங்கரித்து
இகம் பரம் ஈடேற்றமும் இறையின்
ரகசிய அறிவும் பெற்று தரும்
ரமலானே வருகவே...!!!

பசித்தவரின் பசியினை
பட்டு நீ உணர்த்திடும் பட்டினி- ஊனில்
வசித்திடும் ஷைத்தானை
வதைத்திட வைத்திடும் உண்ணாமை

குடலுக்கு ஓய்வுக் கொடுத்து;
குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர்
திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்;
திண்ணமாய் கிட்டும் சுவனம்

பாவம் தடுத்திடும்
பாதுகாப்பு கேடயம்;
கோபம் வென்றிடும்
குணத்தின் பாடம்

அல்லாஹ்வுக்காகவே நோன்பு;
அல்லாஹ் மட்டுமே அறியும் மாண்பு
அல்லாஹ்வே அதற்கான சாட்சி;
அல்லாஹ்வே தருவான் மாட்சி

முப்பது நாட்களை மூன்றாய் வகுத்து
முப்பதின் முதல் பத்தில் ரஹ்மத்து;
முப்பதின் இரண்டாம் பத்தில் மக்பிரத்து;
முப்பதின் மூன்றாம் பத்தில் நஜாத்து;
தப்பாது வேண்டிட வேண்டியே
தகை சான்றோர் வேண்டினரே

வானில் இருந்த இறைவேதம்
வஹியின் வழியாக
தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
திருவதனம் மொழிய வந்த மாதம்

ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு;
ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு;
போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு;
புனிதமிகு ரமலானின் வரவு...!!!

ஈகைத் திருநாளாம்
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
வாகைத்தரும் பித்ரா தர்மம்
வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே


குறிப்பு: தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அரபி பதங்கள்: அதன் பொருள் இதோ:

உம்மத்து= சமுதாயம்
அமல் = செயல்
மஹ்ஷர்= மறுமை தீர்ப்பு நாளின் பெருவெளி மைதானம்
ரஹ்மத்து= இறையருள்
மக்பிரத்து= இறைமன்னிப்பு
நஜாத்து= நரக விடுதலை
வஹி= வானவர் ஜிப்ராயில்(அலை)மூலம் இறைத் தூது
பித்ரா= ஏழைகட்கு ஈந்துவக்கும் தானிய தர்மம் (அதனால் தான் இந்த நோன்பு பெருநாளை "ஈதுல் பித்ர்" (ஈகைத் திருநாள்) என்பர்.மெயிலில் வந்தது.


-ஆசியா உமர்


மாண்புடன் புனித ரமலான் நோன்பிருந்து எல்லாம் வல்ல இறையருள் பெற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

24 comments:

சசிகுமார் said...

ஆஹா இப்பவே ரெடியாயிட்டீங்க போல இருக்கு, ரமலான் வாழ்த்துக்கள்

asiya omar said...

சசிகுமார் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.புனிதமிகு ரமலான் மாதத்தை வரவேற்பதும் ,அந்த மாதம் முழுவதும் இறைவனுக்காக அற்பணிப்பதும் மிக்க மகிழ்ச்சியே.மாண்புடன் நோன்பு இருந்து பெருநாளை கொண்டாடுவதே பெருமகிழ்ச்சி.

சாருஸ்ரீராஜ் said...

very nice kavithai .. ramalan wishes akka......

நாடோடி said...

ர‌ம‌லான் நோன்பு சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள்.

இளம் தூயவன் said...

உங்களோடு சேர்ந்து நாங்களும் வரவேற்கின்றோம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ர‌ம‌லான் வாழ்த்துக்க‌ள்.

எம் அப்துல் காதர் said...

புனித ரமலானே வருகவே!! அதை எழுதியவருக்கும், மிகச் சரியான நேரத்தில் எங்களோடு பகிர்ந்தமைக்கும், கூடவே விளக்கமும் அடடா!! வாழ்த்துகள்.
-----------------------------------
GREETINGS TO ALL!! "RAMADAN KAREEM"
-----------------------------------

அஸ்மா said...

ஆசியாக்கா! ரமலானில் அதிகமான அமல்செய்வதின் மூலம் அழகிய முறையில் அதை வரவேற்க இறைவன் நமக்கு உதவி செய்வானாக! இதையும் பாருங்கள்.

http://payanikkumpaathai.blogspot.com/

உங்கள் ஃபிஷ் கஞ்சி வித்தியாசமாக உள்ளது. ட்ரை பண்ணிப் பார்க்கணும்.

asiya omar said...

சாருஸ்ரீ
நாடோடி
இளம்தூயவன்
புவனேஸ்வரி
அப்துல் காதர்
அஸ்மா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Umm Mymoonah said...

Ramadhan Mubarak to you and your family, nice poem.

Mrs.Menagasathia said...

அழகான கவிதை ரமலான் வாழ்த்துக்கள்!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரமலான் மாதம் ரஹ்மத்துகள் நிறைந்த மாதம்.. இறைவன் நம் எல்லோருக்கும் ரஹ்மத்தும் பரக்கத்தும் தந்தருள்வானாக.. ஆமீன்.

ரமலானே இனிதே வரவேற்போம்..

சிநேகிதன் அக்பர் said...

இந்த நன்னாளில் இறைவன் நம் அனைவருக்கும் நல்லருளை தருவானாக. ஆமீன்.

Anonymous said...

ஆசியா ஜி ரமலான் வாழ்த்துக்கள்

asiya omar said...

உம் மைமூனா
மேனகா
ஸ்டார்ஜன்
அக்பர்
சந்தியா
வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

ஸாதிகா said...

ஜசகல்லாஹ் கைரன்

asiya omar said...

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி ஸாதிகா.

Mahi said...

இன்று நோன்பு ஆரம்பித்திருக்கும்..வாழ்த்துக்கள் ஆஸியாக்கா!

Ananthi said...

புனிதமான ரமலான் நோன்பிற்கு வாழ்த்துக்கள்..!!

prabhadamu said...

நோன்பு ஆரம்பித்திருக்கும்..வாழ்த்துக்கள் ஆஸியாக்கா!

asiya omar said...

ப்ரபா ரொம்ப நாளாக உங்களை பார்க்கவே இல்லை,சிங்கையிலா இந்தியாவிலா?வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

Kousalya said...

ரமலான் வாழ்த்துக்கள்...!!

Noorul said...

Firstly Ramadhan Kareem to you the readers, அக்கா கவிதை நிஜமா நன்றாக இருக்கிறது! அப்புறமா ... நான் உஙகல் Ramadhan special dishes பண்ண ஆரம்ப்பிது விட்டேன். Keep the work akka and please remember us in your doa. Alhamdhullillah.

asiya omar said...

கௌசல்யா மிக்க நன்றி.

நூருல் வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.