Friday, August 13, 2010

கிங் ஃபிஷ் பிரியாணி

தேவையான பொருட்கள்:

கிங் ஃபிஷ் - 8 துண்டுகள் அல்லது 600 கிராம்
பாசுமதி அரிசி - அரைகிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை பழம் -1
மிளகாய்த்தூள் - 1 + 1 ஸ்பூன்
மஞ்சல் தூள் - அரைஸ்பூன்
கால்ஸ்பூன் மிள்குத்தூள்
பச்சை மிள்காய் - 4
மல்லி,புதினா - தலா ஒரு கைபிடியளவு
எண்ணெய் - 50 + 50 மில்லி
நெய் - 50 மில்லி
ஏலம் பட்டை கிராம்பு தூள் - முக்கால் டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் -அரைஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
சாஃப்ரான் - 2 பின்ச் அல்லது லெமன் எல்லோ கலர்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-


மீனை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகட்டி 1 டீஸ்பூன் சில்லி பவுடர்,அரைஸ்பூன் மஞ்சள்தூள்,கால்ஸ்பூன் மிளகுத்தூள்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரிசியை கழைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.


பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் நெய் கலவை விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் முழுவதும் போட்டு வதக்கி சிவறவும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் ,ஏலம்பட்டைகிராம்பு, பெருஞ்சீரகம்,சீரகம் கலந்த தூளை போட்டு வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி,பச்சை மிள்காய்,மல்லி புதினா,1 டீ ஸ்பூன் மிள்காய்த்தூள் ,உப்பு சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.எண்ணெய் தெளீந்து வரும்.


கடாயில் 50 மில்லி எண்ணெய் விட்டு மசாலா கலந்து ஊறிய மீனை முறுக பொரித்து எடுக்கவும்.

எலுமிச்சை ஜூஸ்,2 பின்ச் சஃப்ரான் கலந்து வைக்கவும்.
பிரியாணி மசாலா ரெடியான பின்பு அரிசியை முக்கால பதமாக வடித்து 2 பகுதியை முதலில் போட்டு மீனை பரத்தி வைக்கவும்.


பின்பு மீதமுள்ள ஒரு பகுதி வெந்த சாதத்தை போடவும்.லைம் சாஃப்ரான் கலவை மேலே தெளித்து விடவும்.சிறிது நறுக்கிய மல்லி புதினா போடவும்.அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து 10 - 15 நிமிடம் தம் போடவும்.அடுப்பை அணைக்கவும்.

அடுப்பை அணைத்து கால் மணி நேரம் கழித்து திறந்து மீன் உடையாதபடி அடியில் உள்ள மசாலா வெந்த சோறு மீன் சேர்த்து பிரட்டவும்.பின்பு பரிமாறவும்.


சுவையான கிங் ஃபிஷ் பிரியாணி ரெடி.இதனை ரைத்தா, தால்ச்சா உடன் பரிமாறவும்.
முள் அதிகம் இல்லாத மீன் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.காரம் அவரவர் விருப்பம்.
என்னுடைய ஆங்கிலப்ளாக்கில் பார்க்க சிறிய மாற்றத்துடன் பகிர்ந்துள்ளேன்.கிளிக்கவும்.

- ஆசியா உமர்.

21 comments:

LK said...

present madam

asiya omar said...

நன்றி எல்.கே.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பர்.

அமைதிச்சாரல் said...

பகிர்வுக்கு நன்றி.

சிநேகிதி said...

படத்தினை பார்க்கும பொழுதே அக்கா நாவில் நீர் ஊற வைக்கிறது

நாடோடி said...

சூப்ப‌ரா இருக்கு.. போட்டோவும் ந‌ல்லா வ்ந்திருக்கு..

ஹைஷ்126 said...

இதுவரை சாப்பிட்டது இல்லை அங்கு தான் வரவேண்டும்:)

வாழ்க வளமுடன்

இளம் தூயவன் said...

எனக்கு மிக பிடித்த ஓன்று. என் தாயார் மிக அருமையாக ருசியாக செய்வார்கள்.

மனோ சாமிநாதன் said...

மீன் பிரியாணி பிரமாதம் ஆசியா! வழக்கம்போல் படங்களும் அசத்தல்!

ஸாதிகா said...

அசத்தல் பிரியாணி.

எம் அப்துல் காதர் said...

படங்களோடு அருமையான பிரியாணி வாழ்க!!

angelin said...

aahha super recipe with attractive photo.enakku romba piditha vanjiram fish.

சசிகுமார் said...

பேர பார்த்ததும் ஏதோ மல்லையா வீட்ல செய்ற பிரியாணின்னு நெனச்சேன் ஹி ஹி ஹி

vanathy said...

அக்கா, சூப்பரோ சூப்பர். அழகான படங்கள்.

pradeep said...

இந்த மெத்தட்ல ஒரு தப்பு இருக்கு மேடம்.

asiya omar said...

புவனேஸ்வரி
அமைதிச்சாரல்
சிநேகிதி
நாடோடி
சகோ.ஹைஷ்
இளம்தூயவன்
மனோஅக்கா
ஸாதிகா
அப்துல்காதர்
ஏஞ்சலின்
சசிகுமார்
வானதி
அனைவரின் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ப்ரதீப் எதில் தவறுன்னு சொன்னால் திருத்தி கொள்கிறேன்,மாற்று மெத்தட்டையும் சொல்லவும்.கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

இதே பிரியானி நானும் செய்து வைத்து 3 மாதம் ஆகுது அனுப்ப நேரமில்லாமல், அபப்டியே இருக்கு.

GEETHA ACHAL said...

Superb bryani...Loved the way you prepared...Thanks for sharing

asiya omar said...

jaeela,geethaachal thanks for your comments.

shadiq said...

salaam....thanks ur new fish briyani.i wil try inshallah.