Wednesday, September 1, 2010

ஹரீஸ் / Harees

ரமலான் நோன்பில் அரபு நாடுகளில் செய்து சாப்பிடக்கூடிய பிரசித்தமான உணவாகும்.நாமும் செய்து பார்ப்போமேன்னு செய்தேன்.அருமையாக வந்தது.
தேவையான பொருட்கள்;
உடைத்த கோதுமை -200 கிராம்
மட்டன் அல்லது சிக்கன் - 400 கிராம்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 4 டேபிள்ஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகத்தூள் - அரைஸ்பூன்
வறுத்து பொடித்த பட்டைத்தூள் - கால்ஸ்பூன்(விரும்பினால்)
உப்பு - தேவைக்கு


கோதுமையை ஒரு நாள் இரவு முழுவதும்தேவைக்கு தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.முதல் நாள் மதியம் ஊறப்போட்டால் மறுநாள் மதியம் இப்படி நன்கு ஊறி விடும்.தண்ணீர் மாற்றி வேறு தண்ணீர் வைத்து சமைக்கவும்.


ஊறிய கோதுமை,சிக்கன் அல்லது மட்டன் தேவைக்கு உப்பு,மேல் நிற்கும் அளவு தண்ணீர் வைத்து வேக வைக்கவும்.


கொதிவரவும் மூடவும்.அடுப்பில் என்றால் நேரம் அதிகம் ஆகும்,எனவே குக்கரில் முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து அரை- முக்கால் மணி நேரம் வேக வைக்கவும்.
குக்கரை திறந்து நன்கு அடித்து மசிக்கவும்,அதனுடன் நெய்,சீரகத்தூள்,பட்டைதூள் (விரும்பினால்) சேர்க்கவும்,கையால் அடிக்க சிரமாய் இருந்தால் ஃபுட் ப்ராசஸ்சரில் போட்டு கடைந்து எடுக்கவும்.கறியும் கோதுமையும் சேர்ந்து நன்கு மிக்ஸ் ஆகி அருமையாக பேஸ்ட் மாதிரி வரும் பொழுது எடுக்கவும்.அதனை செர்விங் பவுலில் எடுத்து வைத்து மேலே விரும்பினால் ஆலிவ் ஆயில் விடவும்.


சுவையான சத்தான ஹரீஸ் ரெடி.இதனை அப்படியே சாப்பிடலாம்,நோன்பு நேரத்தில் நோன்பு திறக்க ஏற்ற உணவு,இதுவும் நம்ம அரிசி கஞ்சி போலத்தான்.நம்ம நாட்டில் கஞ்சி அரபு நாட்டில் ஹரீஸ்.


குறிப்பு:
இதற்கு வெள்ளைக்கோதுமை என்றால் பார்க்கவும்,ருசியும் அருமையாக இருக்கும்.உடைக்காமலும் ஊறவைத்து வேக வைக்கலாம்.எலும்புடன் கறி சேர்த்தால் வெந்த பின்பு எலும்பை அரீஸ் அடிக்கும் பொழுது எலும்பை எடுத்து விடவேண்டும்.ஒட்டக நெய் அரபி வீட்டில் சேர்ப்பார்களாம்,அதன் ருசி தனியாம்.நான் அதிகம் நெய் சேர்க்க வேண்டாம் என்று ஆலிவ் ஆயில் சேர்த்து உள்ளேன்,பட்டை தூள் விரும்பாதவர்கள் நெயில் உடைத்த பட்டையை சிறிது தாளித்தும் கொட்டலாம்.சாப்பிடும் பொழுது பட்டையைஎடுத்து விடவும்.முயற்சி செய்திருக்கேன்,நீங்களும் விரும்பினால் செய்து பாருங்க.
-ஆசியா உமர்.

25 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

வித்தியாசமா இருக்கு. சூப்பர்.

இளம் தூயவன் said...

அருமையாக உள்ளது.

Kousalya said...

புதுசாகதான் இருக்கிறது....ம் .

Mrs.Menagasathia said...

different & nice one...

Cool Lassi(e) said...

Healthy porridge-like dish. Looking fabulous Asiya.

ஸாதிகா said...

நான் அங்கு வந்திருந்த பொழுது சாப்பிட்டு இருக்கின்றேன்.இப்பொழுது படத்துடன் செய்முறை கொடுத்து விட்டீர்கள்.நோன்புக்குள் சமைத்து விடுவோம்

vanathy said...

akka, super recipe.

Noorul said...

Seems to be Yummy, InsyaAllah nalaiku try pannaporen. My hubby is nagging at me saying "Ambulance ku phone pannittu "serve pannu" nu.

asiya omar said...

புவனேஸ்வரி
இளம் தூயவன்
கௌசல்யா
மேனகா
கூல் லஸ்ஸி
ஸாதிகா
வானதி
நூருல்

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

சிநேகிதி said...

பார்க்க ஹலீம் போலவே இருக்கு.. சூப்பர்

Chitra said...

New dish..... :-)

LK said...

new one

Mohamed Faaique said...

i thought it as a big isuue... easy.... thnks

நாடோடி said...

பார்க்க‌ ஹைதிராபாத் நோன்பு ஸ்பெச‌ல் ஹ‌லீம் போல் இருக்கிற‌து..

Jaleela Kamal said...

ஹரீஸ் ரொம்ப நல்ல இருக்கு

ஸ்டார்ஜன் கேட்டு இருந்தார் நானும் செய்து போட இருந்தேன்.

இது என் பெரிய பையனுக்கு தான் ரொம்ப பிடிக்கும் செய்தால் அவன் ஞாபகம் வந்துடும் என்று செய்யாமல் இருந்தேன். அவன் வந்ததும் செய்து போடலாம் என்று அதற்குள் நீங்க போட்டுட்டீங்க.

இதை நான் ஓட்ஸிலும் செய்து இருக்கேன் ரொம்ப நல்ல இருக்கும்./

asiya omar said...

சினேகிதி ஹலீம் மட்டன்,கோதுமை ,தால்,கரம்மசாலா எல்லாம் சேர்த்து செய்யணுமே,இது மைல்டாக இருக்கும்.

asiya omar said...

சித்ரா

எல்.கே

ஃபையீக்

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

நாடோடி ஹலீம் மசாலா மணத்துடன் தால் எல்லாம் சேர்த்து அது வேறு டேஸ்ட்.

மனோ சாமிநாதன் said...

நன்றாக இருக்கிறது ஆசியா! பின்னாலுள்ள குறிப்பும் படங்களும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது!!

asiya omar said...

ஜலீலா வருகைக்கு நன்றி.நான் எப்பவும் நோன்பு சமயம் செய்து பார்ப்பேன்,இந்த தடவை செய்யும் பொழுது படம் எடுத்ததால் ப்ளாக்கில் குறிப்பாக கொடுத்தேன்.

சசிகுமார் said...

ஹரிஷ் என்று சொன்னது உங்களுடைய மகன் பேர் என்று நினைத்து வந்தேன் அக்கா ஹி ஹி ஹி

asiya omar said...

மனோ அக்கா உங்கள் பாராட்டு மிக்க மகிழ்வை தருகிறது.நன்றி.

சசிகுமார் இது பிரசித்திபெற்ற அரபிய உணவிற்கும் இந்த பெயர்.வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

தெளிவான செய்முறை,அழ‌கான Presentation superb!

Mahi said...

வித்யாசமான ரெசிப்பியா இருக்கு ஆசியாக்கா! எங்களுக்கு அரபி உணவுகளை அறிமுகப்படுத்தறீங்க,பாராட்டுக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

differnt recepie ...

எம் அப்துல் காதர் said...

இது நல்லா டேஸ்டா இருக்கும் மேடம்..