Friday, September 3, 2010

பயறு பஃப்ஸ்



பயறு பஃப்ஸ் படங்களுடன் செய்முறையை இங்கு சென்று பார்க்கவும்.

  தேவையான பொருட்கள் ;
பஃப் பேஸ்ட்ரி சீட் – 12
முட்டை அடித்தது -1
வெள்ளை தட்டை பயறு (cowpeas)- 100 கிராம்
கொடைமிள்காய் -1
வெங்காயம் -1தக்காளி -1
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் தாளிக்க – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
உப்பு - தேவைக்கு

செய்முறை :

பயறை 4 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் பயறுடன் மூழ்கும் அளவு தண்ணீர் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 3 விசில் வைத்து எடுக்கவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கிள்ளிய வற்றல்,
வெங்காயம்,தக்காளி,கொடைமிள்காய்,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்,வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்,பயறு சேர்க்கவும்.இப்ப பஃப்ஸ் -சில் வைக்க பயறு ரெடி.
 
பேஸ்ட்ரி சீட் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் பயறு வைத்து மடக்கி மேலே அடித்த முட்டையை  ப்ரெஷ் கொண்டு தடவவும்.பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.
வெப்பம் 250 டிகிரி செட் செய்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பப்ஸ் திருப்பி வைத்து சிவந்ததும் எடுக்கவும்.


சுவையான ஆரோக்கியமான பயறு பஃப்ஸ் ரெடி.

-ஆசியா உமர்





14 comments:

சிநேகிதன் அக்பர் said...

போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.

Chitra said...

looks nice....

ராஜவம்சம் said...

அசத்துங்க வாழ்த்துக்கள்.

vanathy said...

அங்கேயும் உங்கள் ரெசிப்பி பார்த்தேன். நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

LK said...

vaalthukkal.. looks yummy

நாடோடி said...

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ..

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

வெல்வ‌தற்கான‌ த‌குதி இருக்கிற‌து வாழ்த்துக்க‌ள்

எம் அப்துல் காதர் said...

அருமையாக இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகிறோம் மேடம்.

Mrs.Menagasathia said...

congrats to win!! healthy puffs..

மங்குனி அமைசர் said...

எச்சூச்மி , இதையெல்லாம் சாப்புடுற போட்டி எங்கையாவது வச்சிருக்காங்களா ????

Priya said...

சுலபமான குறிப்பாக இருக்கிறது, பகிர்வுக்கு நன்றி.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

asiya omar said...

அக்பர்
சித்ரா
ராஜவம்சம்
வானதி
எல்.கே
ஸ்டீபன்
செஃப் பழனி முருகன்
அப்துல்காதர்
மேனகா
மங்குனி அமைச்சர்
ப்ரியா முதல் வருகைக்கு மகிழ்ச்சி.

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Mahi said...

பஃப் பேஸ்ட்ரில ஒரு வித்யாசமான பில்லிங்.ப்யூஷன் ரெசிப்பி சூப்பர் ஆசியாக்கா!

Jaleela Kamal said...

பயறு பப்ஸ் ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள்