Sunday, September 5, 2010

அபுதாபி ஷேக் செய்யது கிராண்ட் மாஸ்க் - இஃப்தார்


அற்புதமாக காட்சியளித்தது ஷேக் செய்யது கிராண்ட் மாஸ்க். இதனைப்பற்றி விரிவான விளக்கம் படங்களுடன் இனியொரு பதிவில்.இது இஃப்தார் பதிவு தான்,


அல் ஐனில் இருந்து இன்று அபுதாபி போவதாக முடிவு செய்தாச்சி.அபுதாபியில் இருந்த சமயம் ஷேக் செய்யது மாஸ்க்கிற்கு இஃப்தார் சமயம் ஒரு நாள் செல்வது வழக்கம். ஒரு வருடம் ஆகிவிட்டதே போய் பார்த்து வருவோமே என்றும் கிளம்பினோம்.என் கணவரும் குழந்தைகளும் ப்ளாக்கில் போடனும் அதுதான் நான் விருப்பமாய் கிளம்புவதாய் கிண்டல் வேறு.
நாலரை மணி கிளம்பி ஐந்தே முக்காலுக்கு அபுதாபி போய் சேர்ந்தாச்சு..இன்னும் நோன்பு திறக்க கிட்டதட்ட முக்கால் மணி நேரம் இருக்கே,சில ஸ்நாப்ஸ் எடுக்கலாம் என்று பார்வையை ஓட்டினேன். .

அதற்குள் ஒருவர் வந்து அதோ லாஸ்டில் இருப்பது தான் லேடீஸ் டெண்ட் என்று சொன்னார்.இந்த டெண்ட்டில் 500 நபர் அமரலாம்.

உள்ளே வந்தால் நம்ம மக்கள் ஒருவரும் இல்லை.10 வாலண்டியர்ஸ் மட்டும் இருந்தாங்க,அஸ்ஸலாமு அலைக்கும் ரமதான் கரீம் என்று ஆர்வமாய் வந்து வரவேற்று வாழ்த்தினார்கள்.ஜில்லென்று ஏசி அழகாக பரிமாறப்பட்ட உணவுகள் என்று பார்க்க இதமாக இருந்தது.

வெளியில் வந்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை டெண்ட் தெரிந்தது.


அதற்குள் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் வர ஆரம்பித்து விட்டார்கள்
இது ஆண்களுக்கான டெண்ட்.நிறைய பங்களாதேஷிரையும்,பாக்கிஸ்தானியரையும் பார்க்க முடிந்தது.
நாங்கள் டெண்ட் உள்ளே வந்து அமர்ந்து கொண்டோம்.நோன்பு திறப்பதற்கான நேரம் நெருங்கி கொண்டிருந்தது.டெண்ட் முழுவதும் பெண்கள் கூட்டம் நிரம்பி விட்டது.முன்னால் உணவு பேக் ரெடியாக இருந்ததது,தண்ணீர்,மோர்,ஜூஸ்,சாலட் மற்றும் சாப்பாடு பேக்கிங் ஒன்றும் இருந்தது.
நோன்பு திறக்க நேரம் நெருங்கியது ,பாங்கு சொல்லும் சத்தம் கேட்கவே அனைவரும் நோன்பு திறக்க ஆரம்பித்தோம்.பேக்கிங்கில் பேரீட்சை,ஆப்பிள்,சப்ஜி,மட்டன் மந்தி ரைஸ் இருந்தது,ஒரு பார்சல் மிக அதிகம்.நானும் என் மகளும் ஒன்றை பகிர்ந்து சாப்பிட்டோம்.அதிலும் மீதியிருந்தது.மற்றொரு பேக்கிங்கை கையில் எடுத்து வந்து விட்டோம்.
இது ஆண்கள் டெண்ட். கிட்டதட்ட 15 ஆயிரம் நபர் ஒரு நாள் சராசரியாக நோன்பு திறக்கிறார்களாம்,1000 நபர் அமரக்கூடிய டெண்ட் ஐந்தும்,500 அமரக்கூடிய டெண்ட் பத்தும் இருக்கும்,அது தவிர வெளியேயும் கார்பெட் விரித்து பரிமாறியிருந்தாங்க அமைதியாக எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டது் பார்க்க அழகாக இருந்தது.அத்தனை கீளீனர்ஸ்,வாலண்ட்டியர்ஸ் என்று அற்புதமான பரிமாற்றம். நோன்பு திறந்ததும் மாஸ்க் போய் தொழுதுவிட்டு கிளம்பிவிட்டோம்.வந்து காரில் ஏறும் பொழுது கிளிக்கியது இந்த ஸ்நாப்.ஒரு புறம் பார்த்தால் கியுவில் மீதி இருந்த பேக்கிங்கை வாங்க கூட்டம்.இன்னும் நிறைய ஸ்நாப் எடுக்க ஆசை தான், ஆனால்அபுதாபியில் உள்ள அவர் தம்பி வீட்டீற்கு செல்ல வேண்டும், அல் ஐன் திரும்பி வந்து சகருக்கு சமைக்க வேண்டுமே ! இன்னொரு முறை வருவோம் என்று சொன்னதால் அவசரமாக திரும்பி வந்தாச்சு.


குறிப்பு:


படத்தை பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.


-ஆசியா உமர்.

26 comments:

Jaleela Kamal said...

ஆசியா இப்தார் படம் பார்க்கவே அருமை.அபுதாபி கிராண்ட் பாஸ்க் ரொம்ப அருமையா இருக்கு.
இங்கும் ஜபீல் பேலஸ், மற்றும் ஜுமைரா போர வழியில் உள்ள மாஸ்க்கில் ரொம்ப அருமையான இதே போல வைத்துள்ளார்கள் என்றார்கள், பேச்சுலர் பதிவுக்காக பதிவு போட போட்டோக்கள் தான் கிடைக்கல.
நெட்டில் சில போட்டோக்கள் மட்டும் எடுத்து வைத்தேன். இதை பற்றி எழுத .நேரம் தான் எழுத்வதற்கு சரிபட்டு வரவில்லை.

(நீங்கள் குறீப்பிட்டுள்ளது ரொம்ப நல்ல இருக்கு.)

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப அழகாக இருக்கிறது பள்ளி..சிறப்பான பகிர்வுக்கு நன்றி..

சே.குமார் said...

Abu dhabi shah zayed masque vanthingala sister... mmm...
anupavichchu photo edutththirukkinga.
vazhththukkal.

srividhya Ravikumar said...

arumai asiaakka...abu dhabi sutri vanthathu pol irunthathu..

வடுவூர் குமார் said...

முத‌ல் ப‌ட‌ம் அருமை.

எம் அப்துல் காதர் said...

ஆஹா..அருமையான பகிர்வு சகோதரி! நாங்களே உங்களோடு வந்து நோன்பு திறந்த மாதிரி ஒரு நிறைவு!!

//என் கணவரும் குழந்தைகளும் ப்ளாக்கில் போடனும் அதுதான் நான் விருப்பமாய் கிளம்புவதாய் கிண்டல் வேறு.//

ஆர்வமிருந்தால் அதெல்லாம் நம் காதிலேயே விழாது. நாம அப்படி தானே மேடம்! ஹா..ஹா..

kavisiva said...

எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து நோன்பு திறப்பது ரொம்ப நல்லா இருக்கும் இல்ல ஆசியா. நானும் சின்ன வயதில் இஃப்தார் விருந்துகளுக்கு போயிருக்கிறேன். எல்லோரும் செய்வதைப்போல் நானும் செய்து விட்டு சாப்பிடுவேன் :)( அந்த பிரேயர்க்கு என்ன பேர்னு தெரியல ஆசியா.)

இலா said...

Nice pictures akka! I like this communal festivities.

asiya omar said...

ஜலீலா
இர்ஷாத்
குமார்
ஸ்ரீவித்யா
வடுவூர் குமார்
அப்துல் காதர்
கவிசிவா
இலா

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ரொம்ப பிஸி,என்னால் இப்ப அதிகம் ப்ளாக் பக்கம் வரமுடியலை.

சசிகுமார் said...

அருமை அக்கா விளக்க படங்களுடன் நன்றாக உள்ளது சூப்பர்

மங்குனி அமைசர் said...

அதிலும் மீதியிருந்தது.மற்றொரு பேக்கிங்கை கையில் எடுத்து வந்து விட்டோம்.////

அதான பாத்தேன் , என்னடா எல்லாம் தெளிவா போட்டு இருக்காங்களே நமக்கு ஒன்னும் மேட்டர் இல்லையேன்னு நினைச்சேன் அடுத்த செகண்டு ,,,, ஹி,ஹி,ஹி

asiya omar said...

சசிகுமார் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

மங்குனி அமைச்சர் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

LK said...

nalla irukkunga

Riyas said...

நல்ல பதிவு.. நானும் இங்கே ஒரு நாள் நோம்பு திறக்க போனேன்.

சாருஸ்ரீராஜ் said...

niraya visayanga therinthu kolkiren ... thanks for posting photos ellam superb...

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் படங்கள்,பகிர்வுக்கு நன்றி அக்கா!!

asiya omar said...

எல்.கே
சாருஸ்ரீ
ரியாஸ்
மேனகா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Chitra said...

awesome photos! Thank you.

vanathy said...

அக்கா, படங்கள் அருமை. கடைசி படம் சூப்பரோ சூப்பர்.

ஸாதிகா said...

அருமை ஆசியா.கணவர்,மகன்,மகள் கிண்டல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களையும் கையோடு அழைத்துப்போய் ஷேக் ஜைத் பள்ளியில் இஃப்தார் சென்று படமும் எடுத்து அழகாய் பறிமாறி உள்ளீர்கள்.

Saravanan said...

Good Post! Like a documentary Film

asiya omar said...

சித்ரா
வானதி
ஸாதிகா

வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

saravanan thanks for your first visit and nice comments.

சுல்தான் said...

Sh. Zayed Grand Masjid. Nice....

smb said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரி, நான் உங்களின் சமையல் கலைகள் அனைத்ததையும் படித்து நிறைய செய்து இருக்கிரேன். நீங்கள் ஒவ்வொரு ரெசிபி கொடுக்கும் போதும் ஒரு குரான் வசனத்தையோ அல்லது ஹதீஸையோ குறிப்பிட்டால் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றி அறியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

asiya omar said...

சுல்தான்
smb
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.