Monday, September 6, 2010

பார்த்து செய்தது - லிபாஸ் பச்சை மீன் பிரட்டல்

லிபாஸ் பச்சை மீன் பிரட்டல் சில மாற்றங்களுடன் :

தேவையான பொருட்கள் :
வஞ்சிரமீன் - 200 கிராம்
நெய் - 100 மில்லி
பச்சை மிளகாய்- 4 -6
மல்லி இலை - இரண்டு கைப்பிடியளவு
புதினா இலை - ஒரு கைபிடியளவு
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
லைம் - 1
உப்பு -தேவைக்கு

மீனை கழுவி சுத்தம் செய்து நீர் வடிகட்டி வைக்கவும்.பச்சைமிளகாய்,மல்லி,புதினா,இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும்.அரைத்தவற்றுடன்,லைம் ஜூஸ்,கரம் மசாலா,சீரகத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


மீனுக்கு தேவையானளவு மசாலாவில் பிரட்டி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.


பொரிக்க சிறிது நெய் வைத்து விட்டு மீதி நெய்யை விட்டு பானில் விட்டு காய்ந்ததும் மீதி இருக்கும் மசாலாவை போட்டு பிரட்டி நன்கு பச்சை வாடை போனதும் சிம்மில் சிறிது வைத்து இறக்கவும்.நெய் எல்லாம் காணாமல் போய் மசாலா மட்டுமே இருக்கும்.


பானில் சிறிது நெய் விட்டு மீனை சாஃப்டாக பொரித்து எடுக்கவும்.

மீன் பொரித்து சூப்பராக ரெடியாகிவிட்டது.இப்பவே வாய் ஊறும் சாப்பிட்டுவிடாதீங்க.

பொரித்த மீனை ரெடி செய்த மசாலாவில் கோட் செய்து பரிமாறவும்.
சுவையான வித்தியாசமான லிபாஸ் பச்சை மீன் பிரட்டல் ரெடி.

குறிப்பு :
செஃப் பழனிமுருகன் அளவெல்லாம் துல்லியமாக கொடுத்து இருந்தார்.நான் சும்மா கையளவு போட்டு செய்து இருக்கிறேன்.அவர் சொன்ன பச்சை மிளகாய் அளவை மட்டும் குறைத்து போட்டு செய்து இருக்கிறேன்.அருமையாக இருந்தது, தால் சப்பாத்தி ப்லைன் ரைஸ் உடன் இதனை பரிமாறினேன்.

-ஆசியா உமர்.

17 comments:

சௌந்தர் said...

சாப்பிடனும் தோணுது

Mrs.Menagasathia said...

very nice & mouthwatering recipe...

Chitra said...

நெய்யில் வறுத்த மீன்? ம்ம்ம்.... புதுசா இருக்குங்க.

சிநேகிதன் அக்பர் said...

வித்தியாசமான மிக்ஸிங்காக இருக்கு.

நல்ல ரெஸிப்பி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா.. ஆசியாக்கா.. இது புதுவிதமாக இருக்கிறது.. எளியதும்கூட செய்து பார்க்கிறேன்.. ரொம்ப நன்றி.. பாத்ததுமே நாக்குல எச்சி ஊறுது..

asiya omar said...

சௌந்தர்
மேனகா
சித்ரா
சிநேகிதன்
ஸ்டார்ஜன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

GEETHA ACHAL said...

மிகவும் வித்தியசமாக இருக்கின்றது..சூப்பர்ப்...

நாடோடி said...

போட்டோவுட‌ன் கூடிய‌ செய்முறை சூப்ப‌ரா இருக்கு..

ஸாதிகா said...

வித்தியாசகாமாக இருக்கின்றது ஆசியா.

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

என் குறிப்பை வீட்டு முறையில் சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் செய்துபார்த்து ந‌ன்றாக‌ இருந்ததில் மிக்க‌ ம‌கிழ்ச்சி.முய‌ற்சிக்கும் ஆர்வ‌த்துக்கும் வாழ்த்துக்க‌ள்.மீண்டுமொருமுறை ந‌ன்றியையும் ம‌கிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

asiya omar said...

கீதா ஆச்சல்
ஸ்டீபன்
ஸாதிகா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

செஃப் வந்து பார்த்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சே.குமார் said...

சாப்பிடனும் தோணுது

vanathy said...

looking very yummy.

எம் அப்துல் காதர் said...

இது புது வரைடீஸா இருக்கே மேடம்! செய்து பார்க்கணும்!!

Jaleela Kamal said...

கிரீன் பிஷ் பிரை அருமை.
நானும் அருசுவையில் கொடுத்து இருக்கிறேன், ஆனால் 100 கிராம் நெய் அதிகம். ஓ இத தான் நெய் மீன் வறுவல் என்பார்களோ

Gopi Ramamoorthy said...

கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நல்லாத்தான் போட்டோ புடிச்சுப் போடறீங்க நீங்க.