Tuesday, September 7, 2010

காளிப்ளவர் பக்கோடா

தேவையான பொருட்கள் ;
காளிப்ளவர் - அரைகிலோ
சிக்கன் 65 மசாலா -1 டேபிள்ஸ்பூன் அல்லது சில்லி பவுடர் -1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 1கப்
அரிசி மாவு - 2டேபிள்ஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிதளவு`
ரெட் கலர் -பின்ச்
சோடாஉப்பு - பின்ச்
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
எண்ணெய் உப்பு - தேவைக்கு.

நான்கு நபர்களுக்கு.

செய்முறை:

காளிப்ளவரை சின்ன சின்ன இதழாக பிரித்து பின்பு (அரை கிலோ இருக்க வேண்டும்) கொதிக்கும் நீரில் போட்டு பாதி வேக்காடு வெந்து தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.

தண்ணீர் வடிகட்டியதும் காளிப்ளவருடன் சிக்கன் 65 மசாலா சேர்த்து அரைமணி நேரமாவது ஊற வைக்கவும்.உப்பு மசாலாவில் இருக்கும் தேவைப்பட்டால் சேர்க்கவும்.



ஊறிய பின்பு கடலை மாவு ,அரிசி மாவு, பின்ச் சோடாஉப்பு,கலர் சேர்க்கவும்.நன்கு பிரட்டி வைக்கவும்,தண்ணீர் தேவைக்கு விரவும் பொழுது தெளிக்கவும்


மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.

நன்றாக எல்லாம் கலந்து வைக்கவும்.கலவை பக்குவமாக கெட்டியாக இருக்க வேண்டும்.உப்பு சரிபார்த்து கொள்ளவும்.

தேவைக்கு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் ரெடி செய்த காளிப்ளவரை போட்டு சிவற பொரித்து எடுக்கவும்.


பொரித்து பேப்பர் டவலில் வைக்கவும் .சூடாக பரிமாறவும்.மல்லி கருவேப்பிலை மணத்துடன் சூப்பராக இருக்கும்.
சுவையான கிரிஸ்பி காளிப்ளவர் பக்கோடா ரெடி.
இதனை ஸ்நாக்காகவும் சாப்பிடலாம்.வெரைட்டி ரைஸ்க்கு சைட் டிஷ் ஆகவும் பயன் படுத்தலாம்.


-ஆசியா உமர்

20 comments:

சிநேகிதன் அக்பர் said...

நல்ல டேஸ்டா இருக்கும் போல...

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த பகோடா..சூப்பர்ப்...அப்படியே இங்கே அனுப்பினால் நல்லா இருக்குமே...

vanathy said...

அக்கா, காலிப்ளவர் எனக்கு மிகவும் பிடிக்கும். சூப்பரான ரெசிப்பி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பர்.

jagadeesh said...

its great.

Swarna said...

பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல உள்ளது :))))

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ள் சூப்ப‌ரா இருக்கு.. அப்ப‌டியே பார்ச‌ல் அனுப்புங்க‌..

Chitra said...

நான் போன வருடம் நெல்லை வந்து இருந்த போது, நெல்லை பொருட்காட்சியில் விரும்பி சாப்பிட்ட ஐட்டம் இது. உங்கள் ரெசிபி அதை விட சூப்பர் ஆக இருக்கிறது.... நாளை மாலை டிபன் இதுதான். மிக்க நன்றி. ரொம்ப நன்றி. நன்றி. நன்றி. நன்றி.

Mrs.Menagasathia said...

mouthwatering snack...

சாருஸ்ரீராஜ் said...

mouth watering recepie my daughters all time favourite snacks ....

Vijiskitchen said...

nice crispy snack. I love it. send one parcel.

asiya omar said...

அக்பர்
கீதா ஆச்சல்
வானதி
புவனேஸ்வரி
ஜெகதீஸ்
ஸ்வர்னா
ஸ்டீபன்
சித்ரா
மேனகா
சாருஸ்ரீ
விஜி
உங்கள் அனைவரின் அன்பான கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

sandhya said...

ஆசியா ஜி படம் சுபேரா இருக்கு அப்போ சாப்பிட அதிலும் நல்லா இருக்கும் ன்னு சொல்லணமா என்ன ?பகிர்வுக்கு நன்றி

Mahi said...

சூப்பரா இருக்கு ஆசியாக்கா!

angelin said...

happy EID To you and your family

எம் அப்துல் காதர் said...

அருமையான ரெசிபி மேடம். அட்வான்ஸ் ஈத் பெருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும்...!!

asiya omar said...

சந்தியா
மகி
ஏஞ்சலின்

அப்துல் காதர் உங்களுக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

மொறுமொறு காலிஃபிளவர் பக்கோடா..அருமையான ரெஸிப்பி.

Jaleela Kamal said...

காளிபிளவர் பகோடா அருமை

asiya omar said...

தோழி ஸாதிகா,ஜலீலா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.