Thursday, September 9, 2010

ஈத் முபாரக் - தங்கச் சங்கிலி - சிறுகதை

அன்புடன் அனைவருக்கும் என் இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

அரபிக் ஸ்வீட் மிக்ஸ் - எல்லோரும் எடுங்க,கொண்டாடுங்க ....


ஈகைப் பெருநாளை முன்னிட்டு நான் எழுதிய தங்கச்சங்கிலி சிறுகதையை வலையுலக அன்புள்ளங்களுக்கு பெருநாள் பரிசாக தருகிறேன்.
தங்கச்சங்கிலி

சம்சக்கா இரண்டு முறை வாக்கப்பட்டும் தலாக்காகி விட, இனிமே நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று காலத்தை ஓட்டி வந்த பொழுது சிங்கப்பூர்காரர் ஒருவர் வந்து சம்சக்காவை பெண் கேட்க, சரி என்று சம்மதித்தனர். வெளியூர்காரர் என்பதால் விசாரித்ததில் இரண்டு வருடத்திற்கு இரண்டு மாதம் வந்து செல்வதாயும், மாதம் செலவிற்கு தவறாமல் பணம் அனுப்பிவிடுவதாயும், ஊரார் முன்பு ஒப்புக்கொண்டதால், மூன்றாவதாக தாலி சம்சக்காவின் கழுத்தில் ஏறியது.

சம்சக்கா என்று அனைவராலும் அழைக்கப்படும் சம்சு, அவள் அம்மாவிற்கு ஒரே மகள் வயதான அந்தக்கிழவியும் மகளுக்கு இரண்டு திருமணம் செய்து வைத்தும், ஒன்றும் சரிவரலையே என்ற கவலையில் காலத்தை ஓட்டி, சுகமில்லாமல் இறந்துவிட பீடி சுற்றிய வருமானத்தில் காலத்தை கழித்து வந்தாள் சம்சு. சிறிய ஓட்டு வீட்டில் அவள் மட்டும் வசித்து வந்தமையால் ஊரார் சம்சுவிற்கு ஒரு திருமணம் செய்து வைத்தால், அவளுக்கென்று ஒரு குழந்தை கணவன் என்று நிம்மதியாக வாழட்டுமே என்று மும்முரமாக தேடியதில் கிடைத்த மாப்பிள்ளை தான் இந்த சிங்கப்பூர்காரர்.

அவருடன் சம்சு சந்தோஷமாக இரண்டு மாசம் வாழ்ந்ததில் நீண்ட நாட்கள் அவள் கண்ட கனவு பலித்தது. சம்சு கர்ப்பமடைந்த செய்தி அவள் வீட்டின் அக்கம் பக்கத்தாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, சிங்கப்பூர்காரரும் பயண நாள் நெருங்கவே, புறப்பட்டு சென்றார். போனவர் போனவர் தான். சொன்னபடி பணம் ஒன்றும் அனுப்பவில்லை, கஷ்டப்பட்டு பீடியைச் சுற்றி, காலத்தை ஓட்டினாள் சம்சக்கா. இரண்டு மாதம் வாழ்ந்ததற்கு மிஞ்சியது இந்த கருகமணியும், மகராசன் ஏதோ ஒரு பிள்ளையையும் தந்தானே என்று மனதை தேற்றி கொண்டு, தபால் வரும், பணம் வரும் என்று எதிர் பார்த்தவண்ணம் இருந்தாள்.

குழந்தை மைமூனும் பிறந்தாள். ஆசை ஆசையாக வளர்த்து வந்தாள் சம்சக்கா. அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் உடை, உணவிற்கு குறைவில்லாமல் காலம் கழிந்தது. ஆனால் சம்சக்காவிற்கு முன்பிருந்தே ஒரு ஆசை இரண்டு முறை வாக்கப்பட்டபோதும் கழுத்தில் கருகமணி தான், சிங்கப்பூர்காரராவது தங்கத்தில் தாலிச்சங்கிலி போடுவார் என்று எதிர்பார்த்து வாக்கப்பட்ட சம்சக்காவின் ஆசையிலும் மண் விழுந்தது. அவரும் அடுத்த பயணம் வரும்பொழுது, “சம்சு, உனக்கு நிச்சயம் செயின் போடுவேன்.” என்றவர் பணம் கூட அனுப்பாமல், தபாலும் போடாமல் போன இடம் தெரியலையே. எப்படியாவது ஒருநாள் திரும்பி வருவார் என்று நப்பாசையில் நாளும் ஓடிக்கொண்டிருந்தது.

மைமூனும் வளர்ந்து ஆளானாள். நல்ல உயரமாக சிவப்பாக சிங்கப்பூர்காரர் போல இருந்ததால் எல்லாப் பையன்களோட கண்ணும் இவள் மேல் தான். என்ன செய்ய, பணம் காசு இருந்தால் வசதியான இடத்தில் கட்டிக்கொடுக்கலாம். ஆனால் சம்சக்காவிற்கு எப்படியாவது பீடி சுற்றி சம்பாதித்ததில் சிறிது சிறிதாக சேமித்து, தன் மகளுக்கு தாலியை மட்டுமாவது, தங்கத்தில் செய்து போட வேண்டும் என்ற ஆசை. இருவரும் சேர்த்து 1000 அல்லது 1500 பீடி சுற்றினாலும், வரும் வருமானம் வீட்டுச் செலவிற்கே போதவில்லை. அக்கம் பக்கம் வீட்டு வேலை செய்தால் சாப்பாடும் பழைய துணியும் கிடைக்கும்.

இதற்கிடையில் ரமளான் மாதம் வந்தது. தாயும் மகளும், வசதி படைத்தவர்கள் கை நிறைய கொடுக்கும் ஸக்காத் கிடைக்கும் சந்தோஷத்தில் இருந்தனர். ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் ஸக்காத்தினால், மூன்று மாதம் கஷ்டமில்லாமல் கழியும் என்ற ஆசை தான்.

சம்சக்காவிற்கு வீடு தேடி வந்து, அன்போடு அனைவரும் ஸக்காத் கொடுத்து செல்வது வழக்கம். சம்சக்கா எங்கேயும் போய் யாரிடமும் வாய் விட்டு கேட்பதில்லை. இதற்கிடையில் சாயா கடை வைத்து பிழைக்கும் காசிம், மைமூனை விரும்பி பெண் கேட்டதால் மைமூனிற்கு கல்யாணம் கை கூடி வந்தது.


வரதட்சணை இல்லாமல் நிக்காஹ் செய்வதாயும், பெண் மட்டும் தந்தால் போதும் என்று கேட்டதால் ஊரில் வசதி படைத்தவர்களிடம், தன் மகளுக்கு நிக்காஹ் செய்ய உதவும் படி கேட்டாள், சம்சக்கா. இதுவரை யாரிடமும் வாய் விட்டு கேட்காத சம்சு, பார்த்தவர்களிடம் எல்லாம் தன் மகளுக்கு திருமணம் என்பதை கூறியபடி இருந்தாள். ஊராரும் நோன்பு பெருநாள் கழித்து திருமணம் வைக்கலாம் என்றதால், அதற்குள் மகளுக்கு எப்படியாவது சிறியளவிலாவது, தங்கத்தில் தாலிச் சங்கிலி போட்டுவிட வேண்டும், என்ற ஆசை மட்டும் சம்சக்காவின் அடிமனதில் இருந்தது. “இந்த ஏழையின் ஆசையை அல்லாஹ் தான் நிறைவேற்ற வேண்டும்.” என்று மனம் இறைஞ்சிய வண்ணமிருந்தது.

எல்லாரும் தாராளமாக ஸக்காத் கொடுத்தாலும் கல்யாணச் செலவுக்கு, அது போதுமானதாய் இல்லை. இதில் எங்கிருந்து தாலிச் சங்கிலி போட? சம்சக்கா தன் கழுத்தில் தான் தங்கச் சங்கிலி போடமுடியலை, மகளுக்காவது போட்டுப்பார்க்க ஆசைப்பட்டதும், நிறைவேறாது போலும், என்று மற்ற வேலைகளில் கவனத்தை செலுத்தினாள்.

இதற்கிடையில் துபாயில் இருந்து சம்சக்காவின் ஒன்று விட்ட சகோதரி, ஸீனத் வந்து இறங்கிய செய்தி கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது. ஆயிரம் ரூபாயும் நல்ல சேலையும் கிடைக்குமே. மகளின் கல்யாணத்திற்கு பழைய பட்டு சேலை இருந்தால் கேட்டு பார்க்கணும், என்று எண்ணிய வண்ணம் இருந்தாள் சம்சு.

எதிர்வீட்டு ஆமினா ஓடி வந்து, “சம்சக்கா, உன்னை துபாய் ஸீனத் கூப்பிடுறா” என்றவுடன் மகிழ்ச்சியுடன் கிளம்பினாள் சம்சு.


ஸீனத் ஏவிய வேலைகளை செய்து விட்டு கிளம்புவதாய் சொல்ல , “சம்சக்கா, உன் மகளுக்கு ஒண்ணு வாங்கி வந்திருக்கேன் என்னன்னு சொல்லு.” என்றவுடன், “ஸீனத், சேலையா?” என்றாள் சம்சு.
“இல்லை சம்சக்கா, ரொம்ப நாளாய் என்னிடம் இருக்கும் தங்க நகையை கணக்கு பண்ணி ஸக்காத் கொடுக்கனும்னு நினைச்சிருந்தேன், கணக்கு பண்ணினால், நாலு பவுன் வருது. உன் நினைப்பு வந்ததால் உன் மகளுக்கு கல்யாணத்திற்கு, தங்கச்சங்கிலி வாங்கி வந்திருக்கேன்.” என்றவுடன் சம்சுவிற்கு ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் துவாவை நிறைவேற்றி விட்டதை நினைத்து ஸீனத்தின் கரங்களை நன்றியுடன் பிடித்தாள் சம்சக்கா.

--ஆசியா உமர்
குறிப்பு:என் மற்ற கதைகளை வாசிக்க கதை கதையாம் கிளிக் செய்தால் வாசிக்கலாம்.

41 comments:

LK said...

eid mubarrak sagothari

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஈத் முபாரக்.

srividhya Ravikumar said...

Eid Mubarrak Asiya... lovely sweets..

Mahi said...

ஈத் முபாரக் ஆசியாக்கா!

அருமையான கதை! மனதைத் தொட்டுவிட்டது!பாராட்டுக்கள்.

ஸாதிகா said...

ஈத் முபாரக்!சம்சக்காவின் சந்தோஷம் எங்களையும் பற்றிக்கொண்டது.கதை நடை அருமை.

asiya omar said...

எல்.கே
புவனேஸ்வரி
ஸ்ரீவித்யா

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

தோழி ஸாதிகா

தங்கை மகி

வாழ்த்திற்கும் கதையை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான கதை.
இஸ்லாமிய இல்ல நடையில் உருக்கமான கதை, உண்மை கதை போல் இருக்கு.

Chitra said...

பக்லாவா!!!! I love them!
இனிய ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்!

அஸ்மா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் பெருநாள் நல்வாழ்த்துக்கள், ஆசியாக்கா!

asiya omar said...

ஜலீலா
வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.கதை 2004 -கில் நடந்த சம்பவத்தை சுற்றி பின்னப்பட்டது.நான் இதுவரை எழுதிய கதைகள் அனைத்தும் நடந்த சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்டதே!

asiya omar said...

சித்ரா உங்களுக்கு இந்த ஸ்வீட் பிடிக்குமா? மகிழ்ச்சி.வாழ்த்திற்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்!!

சசிகுமார் said...

முடிவில் உடம்பு சிலிர்த்தது, கதையாக இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம். நன்றாக இருந்தது அக்கா

sandhya said...

ஈத் முபாரக் ஆசியா ஜி ...கதை ரொம்ப அருமையா இருந்தது ..நன்றி ..ஸ்வீட் சூப்பர்

abul bazar/அபுல் பசர் said...

சம்சக்காவின் ஆசைகள் நிறைவேறியது போல் எல்லோருடைய ஆசைகளும் நிறைவேற இறைவன் துணை செய்வானாக.ஆமீன்.
"அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் "

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஆசியா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
என் இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!

சாருஸ்ரீராஜ் said...

arumaiyana kathai , happy ramzan akka.

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப நல்லாயிருக்கு ஸ்வீட்டும் சிறுகதையும்.. எனது உளம்கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

dobby said...

ஈத் முபாரக் லாத்தா......அருமையான கதை.....ஜக்காத்தின் முக்கியத்தை அழகாக சொல்கிறது.

சே.குமார் said...

ரமலான் வாழ்த்துக்கள் அக்கா.
கதை நல்லாயிருக்கு.

prabhadamu said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம் கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் அக்கா.

:)

Mrs.Menagasathia said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!! மனதை தொட்ட கதை..அருமை அக்கா!!

ஹைஷ்126 said...

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

kavisiva said...

ஆசியாவுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்..

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..

Priya said...

ஈத் முபாரக்!!!
ரொம்ப அருமையான கதை!

எம் அப்துல் காதர் said...

ஸ்வீட் எடுத்துக் கொண்டேன் வயிறும் மனசும் நிறஞ்சு போச்சு. கதை படித்தேன் மனம் நெகிழ்த்து போச்சு!!

அருமையான கதை சரியான நேரத்தில் பகிர்வு!!

மின்னஞ்சல் அனுப்பி வாழ்த்து சொன்னாலும் மீண்டும் ஒரு முறை....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃ பித்ர் நல் வாழ்த்துகள்!!

மின்மினி RS said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள ஆசியாக்கா..

ஈகைத்திருநாளாம் இந்நன்னாளில் நாம் எல்லாவளமும் பெற்று வாழ்வில் சந்தோசத்தை என்றென்றும் நம் இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..

மின்மினி RS said...

நெகிழவைத்த கதை.. சம்சக்கா நம் மனதில் குடியேறிவிட்டார்..

கதை ரொம்ப நல்லாருக்கு ஆசியாக்கா..

vanathy said...

நல்லா இருக்கு உங்கள் கதை. நல்ல இயல்பான நடை.
வீட்டில் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

அன்னு said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

jagadeesh said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள் அக்கா.

இமா said...

திருநாள் வாழ்த்துக்கள் ஆசியா.

கதை அருமை. மனதைத் தொட்டு விட்டது. பாராட்டுக்கள்.

Vijiskitchen said...

தமாதமாகி விட்டது.ஈத் முபாரக் ஆஸியா.

பித்தனின் வாக்கு said...

eid mubarack sokothari.

May the Inshah Allahh wil fullfil all desires.
engalukku sweet mattum pathathu, briyaniyum parcel anuppavum.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்குண்ணே..ஈகை வாழ்த்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அந்த ஸ்வீட் எனக்கு ஒரு பார்சல் அனுப்பி விடுங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வோட்டு பொட்டாச்சு

asiya omar said...

சதீஷ்குமார் வருகைக்கும் கருத்திற்கும்,ஓட்டிற்கும் மிக்க நன்றி.நான் அண்ணே இல்லைங்க,ஆசியா அக்கா.