Sunday, September 12, 2010

ஈத் ஸ்பெஷல் - ஷீர் குர்மா


ஷீர் குர்மா ரெடியானால் இறுதியாக இப்படி தான் இருக்கும்.

தேவையான பொருட்கள் ;

மெல்லிய வறுத்த சேமியா -100 கிராம்

பால் - ஒன்னரை லிட்டர்

ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின் (தேவைக்கு)

அல்லது 200 கிராம் சுகர்.

நெய் - 50 மில்லி

பாதாம் பருப்பு - ஒரு கையளவு

பிஸ்தா பருப்பு- ஒரு கையளவு

சாரப்பருப்பு (charoli nuts) - 1 -2 டேபிள்ஸ்பூன்

முந்திரி பருப்பு - ஒரு கையளவு

கிஸ்மிஸ் பழம் - 1-2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் - 6

உப்பு - பின்ச்

சாஃப்ரான் - 2 பின்ச்.


ஒரு பானில் சிறிது நெய் விட்டு தடவி வறுத்த சேமியா வாங்கினாலும் அதனை திரும்ப சிவற வறுக்கவும்.கருகி விடக்கூடாது.வறுத்து போடுவதால் சேமியா குழையாமல் ஒன்றொன்றாக பார்க்க அழகாக அருமையாக இருக்கும்.

பாதாம் பிஸ்தா பருப்பை வெந்நீரில் போட்டு தோல் எடுத்து கொள்ளவும்.அல்லது தோல் நீக்கிய பருப்பு வாங்கலாம்.


பாலை நன்கு காய்ச்சவும்.பின்பு பாலை சிம்மில் வைத்து கால்மணி நேரம் வற்ற வைக்கவும்.


பாதாம் பிஸ்தாவை மிக்ஸியில் பல்ஸில் வைத்து சுற்று சுற்றி சிறிதாக உடைத்து வைக்கவும்.


கொதித்து வற்றி வரும் பாலில் உடைத்த பாதாம்,பிஸ்தா,லேசாக கீரிய ஏலக்காய்,சாரப்பருப்பு (கிடைத்தால்)ஆகியவற்றை போடவும்.10 நிமிடம் மூடி வைக்கவும்.பருப்பு வெந்து விடும்.


வறுத்த சேமியாவை வற்றி வரும் பாலில் சேர்க்கவும். 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.இனிப்பிற்கு சீனி அல்லது கண்டன்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.


கிளறி விடவும்,சாஃப்ரான் இழைகளை சேர்க்கவும்.நெய்யில் முந்திரி , கிஸ்மிஸ் லேசாக சிவற வறுத்து எடுக்கவும்.

ரெடியான ஷீர் குர்மாவில் வறுத்த முந்திரி,கிஸ்மிஸ் தட்டவும்.கலந்து விடவும்.


அழகான சிறிய கண்ணாடி பவுலில் விட்டு பரிமாறவும்.சுவையான ஈத் ஸ்பெஷல் ஷீர் குர்மா ரெடி.பெருநாள்,மற்ற விஷேச காலங்களில் இந்த பாயாசம் செய்து அசத்தலாம்.


குறிப்பு :


ஷீர் குர்மா நல்ல கெட்டியாக இருந்தால் அருமையாக இருக்கும்.ரொம்ப கெட்டியாக இருந்தால் வெந்நீர் சேர்க்கலாம்.இனிப்பு அவரவர் டேஸ்ட்டுக்கு சேர்க்கலாம்.நெய் அதிகம் சேர்க்க வேண்டாம்.திகட்டும்.விரும்பினால் கூட்டலாம்.


--ஆசியா உமர்.

24 comments:

kavisiva said...

நல்லா இருக்கு ஆசியா!

படம் பார்த்து ஜொள்ளிக்கிட்டேஏஏஏஏஏ
அன்புடன்
கவிசிவா :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பரா இருக்கு.

ஸாதிகா said...

ரிச்சான ஷீர் குருமா!கண்டிப்பாக செய்து பார்த்துவிட வேண்டும்.

asiya omar said...

கவிசிவா கருத்திற்கு மகிழ்ச்சி.உங்கள் குடும்ப ஸ்டில் அங்கு பார்த்தேன்.வெரி ஸ்வீட்.

asiya omar said...

புவனேஸ்வரி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா நிச்சயம் செய்து பாருங்க.

அஹமது இர்ஷாத் said...

இப்படி படங்களை 'க்ளோஸ்'ல போட்டு..ம்ம்ம்

சிநேகிதி said...

ஹைதராபாத்தில் இருக்கும் பொழுது அடிக்கடி செய்வோம். இங்கு இந்த சேமியா கிடைக்கவில்லை.. கிடைத்தபின்பு செய்யனும்.

ஈத் முபாரக்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

தங்களின் சமையல் செய்முறை விளக்கங்களும் . அதற்கு தகுந்த புகைப்படங்களும் மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை . பகிர்வுக்கு நன்றி

asiya omar said...

அஹமது இர்ஷாத் வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

பனித்துளி சங்கர் வந்து பாராட்டியது மிக்க மகிழ்வைத் தருகிறது.நன்றி.

asiya omar said...

சிநேகிதி எனக்கும் ஊரில் வறுத்த இந்த சேமியா கிடைக்காது.எங்க ஊரில் வறுக்காத மெல்லிய சேமியா கிடைக்கும்.வறுத்தால் இதே மாதிரி இருக்கும்.பாகிஸ்தான் ப்ராட்க்ட்ஸ் (சேமியா)இங்கு கிடைப்பதால் மிக அருமையாக வந்தது.

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த ஷீர்குருமா...

Chitra said...

ரொம்ப ரிச்சான சேமிய பாயாசம்.... பார்க்கவே சூப்பர் ஆக இருக்குதே!

மகி said...

Photos are very nice Asiya akka!Yummy sweet! :P:P

R.Gopi said...

ஜொள்ளிக்கொண்டே பார்த்தேன்....

இந்த ஜொள் ஷீர் குருமாவின் டேஸ்டை நினைத்து...

படங்களே சாட்சி சொல்கிறது இது எவ்வளவு நன்றாக இருக்குமென்று...

படு சூப்பர் ரெசிப்பி....

sandhya said...

சுபேரா இருக்கு ஆசியா ஜி

சசிகுமார் said...

அக்கா படங்களை பார்த்தால் வாயில் எச்சில் ஊறுகிறது அக்கா அருமை.

Mrs.Menagasathia said...

ரிச்சான சூப்பர்ர் சேமியா பாயாசம்...

vanathy said...

அக்கா, சூப்பரோ சூப்பர். எனக்கு கொஞ்சம் தருவீர்களா???

Umm Mymoonah said...

Very delicious. thank you for sending it to the event

asiya omar said...

thanks umm for your immeediate response.

sam said...

mouthwatering recipe and like to try.

ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்

1 tin is howmuch gram/milli

reply plz to make it.

Asiya Omar said...

சாம்,
நான் வாங்கியது 385 கிராம் டின் SWEETENED CONDENSED MILK . உங்களுக்கு இனிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பொருத்து தேவைக்கு சேர்த்து கொள்ளவும்.பாயாசம் திக்னஸ் பொருத்து இனிப்பு அளவு மாறுபடும்.

sam said...

Thanks for your reply in helping me.

We made it today.Great recipe,turned out well and very rice in taste.We enjoyed it.

Thanks for sharing this recipe.