Monday, September 13, 2010

இனி வருமோ !


பாவாடை தாவணியில் பட்டாம் பூச்சியாய் பறந்த காலம்
கலர் கலராய் தாவணியில் கனாக்கண்ட காலம்
ஹே நானும் ப்ள்ஸ் டூ முடித்த காலம்
கல்லூரி ஆசையில் துள்ளித்திரிந்த காலம்

பஸ் ஏறி படிகட்டில் பயணித்த காலம்
ப்ரண்ட்ஸுடன் பார்க் பீச் சுற்றிய காலம்
சைக்கிளில் சாகசம் செய்த சூப்பர் காலம்
எதையும் சட்டை செய்யாமல் சாதித்த காலம்

விசிலடிக்காத குறையாய் லூட்டியடித்த காலம்
வீட்டிலே இஷ்டத்துக்கு வீம்பு பிடித்த காலம்
ரேடியோவில் பாட்டுக்கேட்டு ஆடி ரசித்த காலம்
ரோட்டோரக் கடையில் வாங்கி தின்ற காலம்

வாய்க்காலில் குதித்து கும்மாளமிட்ட காலம்
வாயடித்து வீண்பேச்சு பேசித் திரிந்த காலம்
பிளந்த வாய் மூடாமல் படம் பார்த்த காலம்
பட்டாணி சுண்டல் பங்கிட்டு உண்ட காலம்

கதை எழுதி கவிதை எழுதி கிழித்த காலம்
கட்டு கட்டாய் சீட்டு வைத்து ஆடிய காலம்
சிட்டாய் பறந்து பம்பரமாய் ஊர் சுற்றிய காலம்
சிரித்து மகிழ்ந்து சீராடி சிங்காரித்த காலம்

இனி வருமோ ! அந்த வயது இனி வருமோ!
இனி வருமோ ! அந்த காலம் இனி வருமோ!


- ஆசியா உமர்.

22 comments:

LK said...

kaivthai kalakkal aasiyaa.. ilamai meelaathu

asiya omar said...

thanks l.k.

Mrs.Menagasathia said...

கலக்கல் கவிதை..இளமை துள்ளுகிறது கவிதையில்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

Kousalya said...

கவிதையும் அருமை ...அந்த படமும் அசத்தல்..

kavisiva said...

கலக்கல் கவிதை ஆசியா! பழைய புகைப்பட ஆல்பங்களை திருப்பியது போல் ஒரு உணர்வு :)

Chitra said...

அந்த துள்ளல் மாறாமல் எழுதி இருக்கீங்களே! அப்படி என்றால், இன்னும் உங்களுள் அந்த உணர்வுகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்குதுங்க...... நேரமும் நட்பும் கூடும் போது, மீண்டும் பட்டையை கிளப்புங்க!

ஸாதிகா said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே!!

velji said...

அது வேறு மழைக்காலம்!

கவிதை அருமை!

மனோ சாமிநாதன் said...

எல்லோருக்கும் அவ்வப்போது இந்தக் கவிதை மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது ஆசியா! இயந்திர கதியான வாழ்க்கையில் கனவாய் மறைந்து சென்ற இளம் வயது நினைவுகளை நினைத்துப்பார்க்க நேரமிருப்பதில்லை! இப்போது இந்தக்கவிதையை எழுதி ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்று பெருமூச்சுவிட வைத்து விட்டீர்கள்!!

asiya omar said...

மேனகா கவிதையில் மட்டும் தானா?புவனேஸ்வரி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

கௌசல்யா பாராட்டிற்கு மிக்க நன்றி.

கவிசிவா ,ஆமாம் .ஆல்பத்தை திருப்பினால் எப்பவும் மகிழ்ச்சி தானே!

சித்ரா இப்ப மட்டும் என்னவாம் கல்யாண,விஷேச வீடுகளில் மனம் போல் மகிழ்ச்சியாக இருப்பது நடக்கத்தான் செய்கிறது.

ஸாதிகா நீங்க குறிப்பிட்ட பாட்டு எனக்கும் பிடிக்கும்.

வேல்ஜி, அது ஒரு வசந்த காலம்.

மனோ அக்கா சரியாக சொன்னீர்கள்.என் மக்ள் எங்கிட்ட உங்க நேரமெல்லாம் எப்படி கழிந்தது என்று கேட்டதில் உருவானது தான் இது.

அனைவரின் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

சிநேகிதி said...

ஆஹா சேட்டகார பொண்ணாதான் இருந்திங்களா?
கவிதை அழகாக இருக்கு

நிலாமதி said...

மீண்டும் இளமையை நினை வூட்டியது உங்கள் கவிதை . மேலும் தொடர வாழ்த்துக்கள்.

நாடோடி said...

ம‌ல‌ரும் நினைவுக‌ள் எப்போதும் சுக‌மே.. :)

Anonymous said...

ஆசியா ஜி கவிதா ரொம்ப நல்லா இருக்கு ..அதெல்லாம் ஒரு கனவா மாறி போச்சு இல்லே ?

எம் அப்துல் காதர் said...

//இப்ப மட்டும் என்னவாம் கல்யாண, விஷேச வீடுகளில் மனம் போல் மகிழ்ச்சியாக இருப்பது நடக்கத்தான் செய்கிறது.//

உண்மையைச் சொல்லுங்க,,, கல்யாண வீடுகளில் மட்டும் தான் அப்படியா??

//பஸ் ஏறி படிகட்டில் பயணித்த காலம்
சைக்கிளில் சாகசம் செய்த சூப்பர் காலம்
விசிலடிக்காத குறையாய் லூட்டியடித்த காலம்
வாயடித்து வீண்பேச்சு பேசித் திரிந்த காலம்
கட்டு கட்டாய் சீட்டு வைத்து ஆடிய காலம்//

நீங்களா??...இப்படியா??.. நான் கொஞ்சம் இப்படி ஒதுங்கியே இருந்துக்கிறேன் ஹி..ஹி..

(ஒரு கவிதையில் இப்படி பய முறுத்திட்டீங்களே!! அம்மாடியோவ்..!! )

அசத்தல் தான் போங்க மேடம்!!

அமைதிச்சாரல் said...

அது ஒரு அழகிய நிலாக்காலம் :-)))).

asiya omar said...

சிநேகிதி
நிலாமதி
நாடோடி
சந்தியா
அமைதிச்சாரல்

உங்கள் அனைவரின் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் நாமும் தான் கொஞ்சம் பில்டப் கொடுத்து எழுதுவோமேன்னு பார்த்தால் இப்படி பயந்திட்டீங்களே!

அஹமது இர்ஷாத் said...

ஆஹா கவிதையில் கலக்குறீங்களே..தொடர்ந்து அசத்துங்க வாழ்த்துக்கள்..

ப்ரின்ஸ் said...

ரொம்ப நல்லா இருக்கு \

vanathy said...

super kavithai, akka. nice photo too.