Tuesday, September 14, 2010

Paneer Gravy / பனீர் கிரேவி / பட்டர் பனீர்

தேவையான பொருட்கள் :

அமுல் ஃப்ரோசன் பனீர் - 200 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

இஞ்சி கட் செய்தது - 1 டேபிள்ஸ்பூன்

முந்திரிபருப்பு - 12

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கசூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன்

அல்லது கொத்தமல்லி இலை

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் அல்லது 2 டேபிள்ஸ்பூன் பட்டர்

ரெட் கலர்- பின்ச்(விரும்பினால்)

உப்பு - தேவைக்கு

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,முந்திரி, தக்காளி,இஞ்சி சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.ஆறவைக்கவும்.

வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
மீண்டும் கடாயில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பனீரை இலேசாக சிவற பொரிக்கவும்.அதனுடன் மிக்ஸியில் அரைத்ததையும்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு கலந்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வரவும் கசூரி மேத்தி 2 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.
கிரேவியை பிரட்டி விடவும்.5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து மூடவும். கமகமவென்று மணக்கும்.சுவையான ரிச்சான பனீர் கிரேவி ரெடி.கசூரி மேத்தி பதில் ஃப்ரெஷ் மல்லி இலை கட் செய்து தூவியும் பரிமாறலாம்.
சப்பாத்தி, பரோட்டா,நாண் ,ஃப்ரைட் ரைஸ் உடன் அருமையாக இருக்கும்.


Sending this Recipe to Nithu's Healthy Food for Healthy Kids Series - Paneer Delicacies for Kids.


-ஆசியா உமர்.


20 comments:

LK said...

veetuku kilambara timela ippadi post panna eppadi

Mrs.Menagasathia said...

woww yummy!!

ஸாதிகா said...

கசூரி மேத்தி சேர்த்து செய்தது இல்லை.கண்டிப்பாக வித்தியாசமாக நல்ல மணமாக இருக்கும்.டிரை பண்ணிடுவோம்.

Kousalya said...

ம்...நல்ல ரெசிபி ...தெளிவான படங்கள் அசத்தலா இருக்கு தோழி..

Chitra said...

I am going to try it with chicken... ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆஹா.. பார்க்கவே சூப்பரா இருக்கே..

GEETHA ACHAL said...

superb...Bookmarked...

asiya omar said...

எல்.கே
மேனகா
ஸாதிகா
கௌசல்யா
சித்ரா
புவனேஸ்வரி
கீதா ஆச்சல்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.செய்து பார்த்து பின்னூட்டம் சொல்லுங்க.

சிநேகிதி said...

சூப்பரா இருக்கு

Cool Lassi(e) said...

My, that looks splendid. Bookmarking it!

Kanchana Radhakrishnan said...

nice recipe.

நாடோடி said...

சூப்ப‌ரா இருக்கு.

சே.குமார் said...

நல்ல ரெசிபி.

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

பொதுவாக‌ வீட்டில் கசூரி மேத்தி ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை.சேர்த்துக்கொள்வ‌து உட‌ல் ந‌ல‌த்திற்கு ந‌ல‌மான‌து.

jagadeesh said...

அக்கா, கலக்கறீங்க

மகி said...

கசூரி மேத்தி வாங்கி பத்திரமா(!) வச்சிருக்கேன் ஆசியாக்கா!சீக்கிரமா செய்துபார்க்கிறேன்.

vanathy said...

அக்கா, சூப்பரா இருக்கு. படங்கள் அருமை.

Vijiskitchen said...

ஹெல்தி + நல்ல ரிச் ரெசிப்பி.

asiya omar said...

சிநேகிதி
கூல் லஸ்ஸி
காஞ்சனா
ஸ்டீபன்
குமார்
செஃப் பழனி முருகன்
மகி
ஜெகதீஸ்
வானதி
விஜி

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

நார்த் இந்தியா டூர் எங்க பார்த்தாலும் இந்த பனீர் கிரேவி தாஅன்

நானும் கசூரி மேத்தி சேர்த்து தான் செய்வேன்.
முந்திரி முதலில் வறுத்துட்டு வெங்காயம் வ்றுத்தால் நல்ல இருக்கும்.