Thursday, September 16, 2010

பனீர் தோசை

தேவையான பொருட்கள்:
பனீர் - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்
சில்லி பவுடர்- கால்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லி இலை - சிறிது
லைம் ஜூஸ் - 1 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு


பனீரை பொடியாக கட் செய்து கொள்ளவும் அல்லது துருவி கொள்ளவும்.

க்டாயில் எண்ணெய் விட்டு,வெங்காயம்,இஞ்சி துருவல்,பனீர் உப்பு ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி சில்லி பவுடர்,நறுக்கிய மல்லி இலை,விரும்பினால் லைம் ஜூஸ் சேர்த்து கிளறி பனீர் ரெடி செய்து கொள்ளவும்.


தோசையை மெல்லிசாக வார்த்து அதன் நடுவில் ரெடி செய்த பனீரை பரத்தி வைக்கவும்.



தோசையை இவ்வாறு மடக்கவும்.



திருப்பி போட்டு சிவற சுட்டு எடுக்கவும்.இப்படி முக்கோணமாக மடக்கினால் பார்க்க அழகாக இருக்கும்,தோசையை எடுத்து சாப்பிடும் பொழுது எல்லா இடத்திலும் பனீர் இருக்கும்.
சுவையான பனீர் தோசை ரெடி.

தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறவும்.
--ஆசியா உமர்.
குறிப்பு : இந்த குறிப்பில் உள்ள புகைப்படத்தில் அட்ரஸ் www.asiyaomar.blogspot.com என்று வரவேண்டும்.டைப் செய்யும் பொழுது தவறு ஏற்பட்டுவிட்டது.நன்றி கீதா ஆச்சல்.


27 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

LK said...

intha sunday try panren

Chitra said...

mouth-watering.....

ஸாதிகா said...

வாவ்..பனீரில் தோசை..சமைத்து அசத்தறீங்க தோழி.

Jaleela Kamal said...

தோசை நல்ல இருக்கு.

asiya omar said...

புவனேஸ்வரி
எல்.கே
சித்ரா
ஸாதிகா
ஜலீலா

அனைவரின் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

அஹமது இர்ஷாத் said...

umm Nice..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

புதுவிதமான தோசையா இருக்கு.. சாப்பிட்டு பார்க்கணும் ஆசியாக்கா.. பனீர் என்றால் என்ன?.. இங்கு கிடைக்குமா..

asiya omar said...

அஹமது இர்ஷாத் மிக்க நன்றி.

ஸ்டார்ஜன் பனீர் எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்.நான் உபயோகித்து இருப்பது அமுல் பனீர் இங்கு இப்படி கட் செய்தே 200 கிராம் ஃப்ரோசன் பேக்கில் வருகிறது.காய்ச்சிய பாலில் எலுமிச்சை பிழிந்து திரிய வச்சு அதனை பதப்படுத்தி வரது தான் பனீர்.

sandhya said...

ஆசியா ஜி ..பன்னீர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த தோசை ரொம்ப நல்லா இருக்கு .nantri

சிநேகிதி said...

சூப்பராக இருக்கே

நாடோடி said...

சூப்ப‌ர் ச‌கோ.. தோசையை ம‌டித்திருப்ப‌து ந‌ல்லா இருக்கு.

Mrs.Menagasathia said...

super & yummy dosa!!

Priya said...

சூப்பரா இருக்கே...
கண்டிப்பா செய்து பார்க்கணும், நன்றி!

Mahi said...

/தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறவும்./முடியாது..நாங்க சட்னி-சாம்பாருடன்தான் சாப்பிடுவோம்!:)

சூப்பர் ரோஸ்ட் ஆசியாக்கா!

vanathy said...

சூப்பர் தோசை. எனக்கு ஒரு பார்சல் பிளீஸ்!!

அன்னு said...

ஆஹா...ஆஸியாக்கா,

அட்ரஸும் சேர்ந்து சொன்னீங்கண்ண ரெம்பவே வசதியா இருக்கும். உங்க சமயல் ப்ளஸ் ஜலீலாக்கா சமயலை சாப்பிடவே துபாய்க்கு பிளேன் பிடிக்கலாம் போலவே...!! ஹ்ம்ம்...

GEETHA ACHAL said...

ஆஹா..தோசையினை மடிக்க கத்து கொடுத்துவிட்டிங்க...சூபர்ப்...அசத்துறிங்க...

asiya omar said...

சந்தியா
சிநேகிதி
ஸ்டீபன்
மேனகா
ப்ரியா
மகி
வானதி
அன்னு


வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

கீதா ஆச்சல் வருகைக்கும் கருத்திற்கும் அட்ரஸ் தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.முடிந்தால் சரி செய்து விடுகிறேன்.இதை இத மாதிரி பின்னூட்டம் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. டைப் பண்ணும் பொழுது அறியாமல் ஏற்பட்டுவிட்டது.தவறுகளை யோசிக்காமல் சுட்டிக்காட்டவும்.மிக்க நன்றி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சூப்பர் ஆசியா.. எனக் பனீரில் பண்ணு்ம் எல்லா ஐட்டமும் பிடிக்கும்..:))

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஈத் முபாரக் ஆசியா..

Kanchana Radhakrishnan said...

பனீரில் தோசை..அருமை.

asiya omar said...

தேனக்கா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

காஞ்சனா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

அப்பாவி தங்கமணி said...

வாவ்... இப்படி கூட செய்யலாமா? super recipe with rich calcium, nice

mahavijay said...

intha dosai anandha bhavan la sema taste ah erukum ennaku romba pidikum