Friday, September 17, 2010

மிண்ட் சிக்கன் பார்பிகியூ & சிக்கன் டிக்கா பார்பிகியூ


மிண்ட் சிக்கன் பார்பிகியு

தேவையான பொருட்கள் ;

போன்லெஸ் சிக்கன் - 600 கிராம்
புதினா - ஒரு கைபிடி
பச்சை மிள்காய் - 2
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கரம் மசாலா - அரைஸ்பூன்
தயிர் - 100 மில்லி
உப்பு - தேவைக்கு
ஆலிவ் ஆயில் - 1டேபிள்ஸ்பூன்

புதினா,மிளகாய்,உப்பு,இஞ்சி பூண்டு,கரம்மசாலா சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரைத்தவற்றுடன் தயிர் சேர்க்கவும்.


ரெடி செய்த கலவையை ,சுத்தம் செய்து கட் செய்து கழுவி, நீர் வடிகட்டிய சிக்கனில் சேர்க்கவும். குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

டிக்கா ஸ்டிக்கில் அடுக்கி வைக்கவும்.

பார்பிகியு அடுப்பில் கங்கு ரெடியானவுடன் ரெடி செய்த சிக்கன் ஸ்டிக்கை செய்ததை வைக்கவும்.
திருப்பி திருப்பி வைத்து வெந்து மணம் வரவும் சுட்டு எடுக்கவும்.


சூப்பர் சுவையான மிண்ட் சிக்கன் பார்பிகியு ரெடி.
சிக்கன் டிக்கா பார்பிகியு :
தேவையான பொருட்கள் ;
சிக்கன் - 1 கிலோ
(ஷான்) சிக்கன் டிக்காஅல்லது  பார்பிகியு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கெட்டி தயிர் - 100 மில்லி அல்லது 150 மில்லி
கசூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது

சுத்தம் செய்து கட் செய்த சிக்கன்,மசாலா,இஞ்சி பூண்டு,தயிர்,சிறிது சுவைக்கு உப்பு,ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டி கசூரி மேத்தி பவுடர் சேர்த்து குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

பார்பிகியு அடுப்பு ரெடியானவுடன் கம்பியில் அடுக்கியோ அல்லது கம்பி தட்டில் வைத்தோ இரு புறமும் சிவற வெந்து மணம் வர சுட்டு எடுக்கவும்.

சுவையான சிக்கன் டிக்கா பார்பிகியு ரெடி.விரும்பினால் லைம் பிழிந்து சாப்பிடலாம்.
இதனை வெஜிடபிள் சாலட்டுடன் பரிமாறவும்.குபூஸ்,ஹமூஸ்,முத்தபல்,கார்லிக் பேஸ்ட் உடனும் சாப்பிடவும் சுவை அருமையாக இருக்கும்.
--ஆசியா உமர்.
குறிப்பு:முதல் நாளே சிக்கன் ரெடி செய்து ஃப்ரிட்ஜில் ஊறவைத்தால் மறுநாள் செய்யும் பொழுது ருசி அருமையாக சிக்கன் சாஃப்டாக இருக்கும்.

15 comments:

மகி said...

ஆசியாக்கா,அருமையா இருக்கு.என்னவருக்கு இப்படி க்ரில் பண்ணிய சிக்கன் ரொம்ப பிடிக்கும்.

Mrs.Menagasathia said...

wowww delicious chicken recipes...

Chitra said...

நீங்க barbecue சிக்கன் expert ! அசத்துறீங்க!

ஸாதிகா said...

ஆசியா..அசத்தல்..பார்க்கவே அழகாக உள்ளது.

asiya omar said...

மகி மிக்க மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

மேனகா மகிழ்ச்சி,மிக்க நன்றி.

சித்ரா எக்ஸ்பெர்ட் எல்லாம் இல்லை.என் மகன் கஷ்டப்பட்டு அடுப்பை மூட்டி தந்தால் சுட்டு எடுப்பேன்.அவ்வளவே.

நன்றி ஸாதிகா.

நாடோடி said...

க‌ல‌க்க‌லா இருக்கு ச‌கோ.

சிநேகிதன் அக்பர் said...

அட அருமையா செஞ்சிருக்கிங்களே.

asiya omar said...

ஸ்டீபன்,அக்பர் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Riyas said...

சிக்கன் டிக்கா சூப்பர்..

http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html

அஹமது இர்ஷாத் said...

எனக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும்..

asiya omar said...

ரியாஸ்,
அஹமது இர்ஷாத்
வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சுந்தரா said...

பாத்ததுமே சாப்பிடணும்போல இருக்கு.

இதில் மின்ட் சிக்கன் பார்பிக்யூ நான் தேடிக்கொண்டிருந்த குறிப்பு ( இங்கே ஹோட்டலில் ஷிகாரி கபாப் என்று சொல்கிறார்கள்)எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடித்த ஒன்று.

பகிர்வுக்கு நன்றி ஆசியா.

vanathy said...

அக்கா, சூப்பரா இருக்கு. படங்கள் அருமையா இருக்கு.

Shivakumar said...

சிக்கன் டிக்கா பார்பிகியூ மசாலா என்றால் என்ன?. அதை எப்படி செய்வது. Please

asiya omar said...

shivakumaar வருகைக்கு மகிழ்ச்சி.நான் இதில் ரெடிமேட் சிக்கன் டிக்கா மசாலா ஷான் ப்ராண்ட் உபயோகித்து உள்ளேன்,என்றாலும் டிக்கா மசாலா வீட்டில் செய்ய இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மல்லிப்பொடி,சீரகப்பொடி,மிள்காய்த்தூள்,மஞ்சள் தூள்,பப்ரிக்கா பவுடர்,காய்ந்த புதினா,லெமன் ஜூஸ் அல்லது வினிகர்,உப்பு சேர்ந்து கலந்தால் ரெடி.