Sunday, September 19, 2010

காளிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி

தேவையான பொருட்கள் ;
உருளைக்கிழங்கு -200கிராம்
காளிப்ளவர் - 200 கிராம்
வெங்காயம்- பெரியது 1
தக்காளி - சிறியது 1
மல்லி,கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

நான்கு நபர்களுக்கு..

 செய்முறை:


உருளைகிழங்கை தோல் சீவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்,காளிப்ளவரை சிறிய இதழாக்கி வெந்நீரில் அலசி எடுக்கவும்.குக்கரில் காளிப்ளவர்,உருளைக்கிழங்கு,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மிள்காய்த்தூள் ,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,உப்பு,அரைகப் தண்ணிர் சேர்த்து வைக்கவும்.பிரட்டியது போல் இருக்கவேண்டும்.

அனைத்தையும் கலந்து குக்கரில் 2 விசில் வைத்து உடன் அடுப்பை அணைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,குக்கரில் வேகவைத்த உருளை,காளிப்ளவரை போட்டு பிரட்டவும்.நறுக்கிய மல்லி இலை தூவவும்.
கமகமக்கும் காளிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி.இது பூரி , சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.தக்காளி சேர்க்காமலும் செய்யலாம்.சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.

--ஆசியா உமர்.


21 comments:

LK said...

எனக்குப் பிடித்த ரெண்ட்டயும் கலந்து பண்ணி இருக்கீங்க .. அருமை

asiya omar said...

கருத்திற்கு மகிழ்ச்சி எல்.கே.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்த்தாலே பரவசம்.

மனோ சாமிநாதன் said...

காலிஃபிளவர் சப்ஜி சுலபமான சமையல் குறிப்பாக இருக்கிறது ஆசியா! உங்களிடம் எனக்கு பிடித்ததே இந்த குக்கர் முறையில் பல தினுசான சமையல் வகைகளைச் செய்வதுதான்.

asiya omar said...

புவனேஸ்வரி கருத்திற்கு மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மனோ அக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.பாராட்டிற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சப்பாத்தி பரோட்டாவுக்கு ஏற்ற சைட் டிஷ்.படங்கள் அருமை ஆசியா.

சே.குமார் said...

பிடித்த ரெண்ட்டயும் கலந்து பண்ணி இருக்கீங்க...

படங்கள் அருமை.

அஸ்மா said...

சுலபமாகவும் குறைந்த நேரத்திலும் செய்யக்கூடியதாக உள்ளது இந்த சப்ஜி! அருமை ஆசியாக்கா! ஒருநாள் செய்து பார்த்துடவேண்டியதுதான்.

சிநேகிதி said...

ஆஹா ரொம்ப சூப்பராக இருக்கே

GEETHA ACHAL said...

Superb...I love it...

Mrs.Menagasathia said...

அருமை,சப்பாத்திக்கேத்த சூப்பர்ர் டிஷ்!!

vanathy said...

எனக்கு காலிப்ளவர் மிகவும் பிடிக்கும். விரைவில் செய்து பார்க்க வேண்டும். நல்ல ரெசிப்பி.

asiya omar said...

ஸாதிகா
குமார்
அஸ்மா
சிநேகிதி
கீதா ஆச்சல்
மேனகா
வானதி
உங்கள் அனைவரின் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Chitra said...

வெஜ். சமையலில் கூட உங்கள் கைமணத்தில் பட்டையை கிளப்புறீங்க.....

தியாவின் பேனா said...

அருமை

மங்குனி அமைசர் said...

எச்சூமி மேடம்ஸ் , இந்த KFC சிக்கன் (நல்ல பக்கோடா மாதிரி மொறு மொறுன்னு இருக்குகே ) ஐடம் ரிசிபி இதுவரை போட்டு இருக்கிங்களா ? இல்லை என்றால் உடனேபோடவும்

asiya omar said...

சித்ரா கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

தியா முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

மங்குனி அமைச்சரே,kfc ரெசிப்பி இதுவரை நான் கொடுக்கலை அதெல்லாம் எனக்கு தெரியாதே .ஜலீலா குறிப்பு கொடுத்து இருக்காங்க.அவங்களிடம் கேட்டால் லின்க் கொடுப்பாங்க.வருகைக்கு மகிழ்ச்சி.

சிநேகிதன் அக்பர் said...

எனக்கு பிடித்த ரெஸிப்பி.

மகி said...

நேத்து லன்ச்சுக்கு ஒரு சிம்பிள்டிஷ் தேடும்போது கரெக்ட்டா இந்த சப்ஜி-ய பப்ளிஷ் பண்ணீங்களா,உடனே செஞ்சுட்டேன் ஆசியாக்கா! ஈஸியா வேலை முடிஞ்சுடுச்சு. டேஸ்ட்டாவும் இருந்தது.
/அரைகப் தண்ணிர் சேர்த்து வைக்கவும்.பிரட்டியது போல் இருக்கவேண்டும்./இங்கதான் வழக்கம் போல சொதப்பிட்டேன்.தண்ணி கொஞ்சம் அதிகமா ஆகிடுச்சு.அடுத்த முறை சரியா வெச்சுடுவேன்.:)

ஒ.நூருல் அமீன் said...

பார்க்கும் போதே அழகாய் இருக்கிறது. சப்பாத்திக்கு சேர்த்து கொள்ள சுவையான, சுலபமான சைட்டிஸ்.
நிஷா அமீன்