Monday, September 20, 2010

நண்டு கிரேவி

தேவையான பொருட்கள் :
நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு பல்-6
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
பச்சை மிள்காய் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு -8
மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் -3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரைடீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

செய்முறை:

நண்டை சுத்தம் செய்து துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்து பின்பு ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ,உப்பு சிறிது,அரைஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.10 நிமிடத்தில் வெந்து விடும். அடுப்பை அணைக்கவும்.

தேங்காய்,முந்திரி,பச்சை மிளகாய்,மல்லி இலை,சீரகம் ,சோம்பு போட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

இஞ்சி பூண்டை நன்கு தட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போடவும்,பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்பு வதங்கிய வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு கரம் மசாலா போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,நன்றாக மசிந்ததும்,மிள்காய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்கவும்,பிரட்டி சிறிது தண்ணீர் தெளித்து மூடி விடவும்.

மசாலா வாடை போனதும் வேகவைத்த நண்டை சேர்க்கவும்.நன்கு மசாலா படும்படி பிரட்டவும்.


அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும்.கெட்டியாக இருந்தால் மீண்டும் பாதி கப் தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி கொதித்து வற்றி வரும்.
தேங்காய் வாடை மடங்கியதும் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சூப்பர் சுவையான நண்டு கிரேவி ரெடி.
-ஆசியா உமர்.
குறிப்பு : நான் பலவிதமாக நண்டு கிரேவி செய்வேன். இந்த முறை என் தோழி உமாவின் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொண்டது. காரம் வேண்டுமானால் கூட்டி கொள்ளலாம்.நாங்கள் தூத்துக்குடி கடற்கரையோரம் கேம்பில் இருந்த நாட்களில் வழக்கமாக மாலையம்மா என்ற மீன் காரம்மா மீன் தரும்.அந்த அம்மா செவ்வாய்,வெள்ளி எனக்கு மீன் கொண்டு வந்து தருவாங்க.அன்று தான் மீன் நிறைய பேர் வாங்க மாட்டாங்களாம்.ஒரு சமயம் ஒரு கிலோவிற்கு 2 நண்டு பெரிசாக கொண்டு தந்தாங்க.சிக்கன் பீஸ் மாதிரி துண்டுகள் போட்டு தந்தாங்க.அதை அப்ப இந்த முறையில் தான் சமைத்தேன்.அந்த நண்டு மாதிரி ருசியாக இன்னும் திரும்ப சாப்பிடலை.


26 comments:

LK said...

avvvv

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

சசிகுமார் said...

அருமை அக்கா வாழ்த்துக்கள்.

சிநேகிதி said...

ஆசியா அக்கா நண்டு கிரேவி பார்க்கும் பொழுதே நாவூருதே....

Kousalya said...

வாவ்...எனக்கு மிகவும் பிடித்த நண்டு உங்கள் கை மணத்தில் அட்டகாசமாக இருக்கிறது...இந்த முறையில் முயற்சி செய்து பார்கிறேன்.

Chitra said...

படத்தையே கொஞ்ச நேரம் பார்த்து கொண்டு இருந்தேன்......... ஜொள்ளிட்டேன்.....!!!

jagadeesh said...

அருமை. அக்கா, புளிக் குழம்பு கேட்டேனே, செஞ்சு காமிங்க.

ஸாதிகா said...

அருமை.இன்னும் நண்டு ரெஸிப்பிகள் கொடுங்கள் தோழி.

Mrs.Menagasathia said...

நாவில் நீர் ஊறுது..சூப்பர்ர்ர்!!

எம் அப்துல் காதர் said...

ஆஹா படத்தையும் பதிவையும் பார்த்த பிறகு நண்டு சாப்பிடனும் போல இருக்கே மேடம்!! இத வர்றேன் மார்கெட்டுக்குப் போய் ..........................!!

asiya omar said...

எல்.கே
ers
சசிகுமார்
சிநேகிதி
கௌசல்யா
சித்ரா
ஜெகதீஸ்
ஸாதிகா
மேனகா

உங்கள் அனைவரின் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

மிக அழகாக விளக்கம்.

மகி said...

ஆசியாக்கா,போட்டோஸ் எல்லாம் பளிச்னு,தெளிவா இருக்கு!
நல்ல ரெசிப்பி!

vanathy said...

அக்கா, சூப்பரோ சூப்பர். நல்லா இருக்கு உங்கள் ரெசிப்பி.

asiya omar said...

அக்பர்
வானதி
மகி
அனபான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

GEETHA ACHAL said...

ஆசியா அக்கா...படங்கள் எல்லாம் படு சூப்ப்ர்ப்...மிகவும் தெளிவாக அழக்காக பார்க்கும் பொழுதே சாப்பிட தூண்டுகின்றது...அம்மாவும் இப்படி தான் செய்வாங்க என்று நினைக்கிறேன்....நண்டினை சாப்பிடும் அளவிற்கு பொறுமை இல்லை எனக்கு...ஆனால் இங்கு இவருக்கு நண்டு மிகவும் விருப்பம்..ஆனால் நான் செய்ததில்லை...அம்மா வந்து இருந்தப்போ செய்து கொடுத்தாங்க...

நாடோடி said...

ந‌ண்டு என‌க்கு ரெம்ப‌ பிடிக்கும்.. :)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நீங்கள் படங்களுடன் கொடுக்கிற் ரெசிப்பிக்கள் அருமை சகோதரி. நன்றி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சூப்பர் நண்டு எனக்கு வேணும்..

asiya omar said...

கீதா ஆச்சல் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஸ்டீபன் நண்டு எங்கள் வீட்டில் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

நித்திலம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தேனக்கா உங்களுக்கு இல்லாததா ?மகிழ்ச்சி.

அஹமது இர்ஷாத் said...

நண்டு இதுவரை இரண்டு தடவைதான் சாப்பிட்டு இருக்கிறேன்.. இப்பொழுது மூணாவது தட்வை சாப்பிட்ட திருப்தி..சூப்பருங்க பதிவு..

Jaleela Kamal said...

நண்டு கிரெவி பார்க்க நல்ல இருக்கு
வாங்கியதும் இல்லை செய்ததும் இல்லை சுவைத்ததும் இல்லை

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

Super presentation

Gopi Ramamoorthy said...

நண்டு கிரேவி சூப்பர். நாங்க செய்ற மாதிரியே இருக்கு

nasreen fathima said...

உங்க பிளாக் பார்த்து ரொம்ப சந்தோசமாக இருந்தது . ஜலீலாஅக்கா சமையலும் ரொம்ப பிடிக்கும். நானும் திருநெல்வேலி தான். துபாய் இல் இருகேன்

prabu tamilan said...

.அருமை