Wednesday, September 22, 2010

காமினி என் காதலி (சவால் சிறுகதை )
“வீல்”
என்ற சத்தம் கேட்டு பதறி ஓடி வந்தான் சிவா.
தடக், தடக்... என்ற இரயில் சத்தத்தில் சத்தம் வந்த திக்கு தெரியாமல் நெஞ்சம் படபடத்தது.

அவன் இருந்த கம்பார்ட்மெண்டில் ஒரிரு தலைகள் தென்பட்டன,விடிந்தும் வெளிச்சம் பார்க்க முடியாதளவு பனிமூட்டம்,கடுங்குளிர்,இரயிலில் இருந்த ஒரிருவரும் கம்பளியால் போர்த்தியிருந்தனர்.

மெதுவாக நடந்து சென்று சுற்றும் முற்றும் பார்த்தான்,ஒரு இளம் பெண் மயங்கிய நிலையில் இருப்பது தெரிந்தது.பாதை தெரியாத, பாஷை தெரியாத ஊரில் உதவி செய்வதா வேண்டாமா என்று மனம் அசை போட்டாலும், உதவி செய்வது முதல் கடமையாய் பட, குடிக்க வைத்திருந்த தண்ணீரை முகத்தில் தெளித்ததில், பளிச்சென்று கண்களை திறந்தாள் அந்த அழகி..

“காஷ்மீர் எல்லை வந்து விட்டதா?”, என்று படபடத்து முனகினாள் அந்தப்பெண்.

அப்பாடா என்று இருந்தது சிவாவிற்கு,.தமிழை கேட்டதில் அதுவும் அழகிய பெண்ணின் இனிய குரலில்
.
“ஆமாம்”,என்றான் சிவா.

”ஹை நீங்க தமிழா?” என்றாள் ,மெல்லிய குரலில்...

“ம்ம்... சத்தம் போட்டது நீங்கள் தானே?”,என்றான் சிவா.

“ஆமாம், யாரோ கம்பளி போர்த்தி கொண்டு என் அருகில் குனிந்த மாதிரி இருந்தது, அது தான் பயத்தில் கத்திவிட்டேன் அடிக்கடி எனக்கு மயக்கம் ஏற்படுவதுண்டு ” என்றாள்.

“சரி தான்,பிரம்மையாக இருக்கும் ”என்றான் சிவா,
“தனியாக நீங்க எப்படி இங்கே?,உங்க பெயரை தெரிஞ்சுக்கலாமா?”

“ஒய் நாட், ஐ யம் காமினி”என்று கை குலுக்கினாள்.
ராணுவத்தில் பணிபுரியும் தன் மாமா பரந்தாமனை பார்க்க செல்வதாய் சொன்னது கூட காதில் விழாமல் அவள் அழகில் மயங்கி விட்டிருந்தான் சிவா.

“ஹலோ, ஹலோ” என்ற இனிய குரலில் காமினி அழைத்த பின் தான் சுயநினைவிற்கு வந்து திடுக்கிட்ட சிவா, அவளை வெட்கத்துடன் பார்த்து சிரித்தான்.

“நீஙக...?”

“நானா, திருச்சியில் ராணுவ முகாமில் பயிற்சி முடிந்து, போஸ்டிங் காஷ்மீர் எல்லையில் போட்டு வந்ததால், பணியை மேற்கொள்ள போய்க் கொண்டிருக்கிறேன்,” என்றான்.

சுவாராசியமாக இருவரும் பேசிக்கொண்டு வந்ததில் கடைசி ஸ்டாப்பிங்கில் இரயில் நின்றது கூட தெரியாமல் ,ப்ளாட்பார்ம் இரைச்சல் காதில் விழவும்,
“அட இறங்க வேண்டிய இடம் வந்தாச்சா” என்று திரும்பிய சிவா, காமினியை காணாமல் ஒரு நிமிடம் திகைத்து விட்டான், அதற்குள் மாயமாகிவிட்டாளே,என்று எண்ணிய வண்ணம் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து தன் இருப்பிடம் தேடி விரைந்தான் சிவா..

இருப்பிடம் அடைந்ததும் அதிகாரிகளை பார்த்து வேலைக்கான ஆர்டரை கொடுத்து விட்டு ,அவர்கள் மறுநாள் வேலையினை ஒப்புக்கொள்ள சொன்னதால்,தங்குமிடம் சென்று குளித்து சாப்பிட்டு நன்கு தூங்கி எழுந்தான்.

மாலையில் அப்படியே வெளியே உலாத்தி வரலாம் என்று கிளம்பி வர, அந்தப்பெண் மறுபடியும் ஒரு சிமெண்ட் பெஞ்சில் மயங்கி கிடப்பதை பார்க்க, சிவாவிற்கு எரிச்சலாக வந்தது.
”ஹலோ காமினி,காமினி ” என்ற சிவாவின் குரலிற்கு பதிலே இல்லை.

பயந்த சிவா, அவசரமாய் அருகில் இருந்த இராணுவ முகாம் ஆஸ்பத்திரிக்கு அவளை தூக்கி சென்றான்.

பதட்டமடைந்த டாகடர்கள்,காமினிக்கு மூச்சு பேச்சில்லாததை பார்த்து, உடனே அட்மிட் செய்து ஆக்சிஜன் கொடுத்து செக் செய்து விட்டு, “ஒரு சில நிமிடத்தில் நினைவு திரும்பலாம் சீரியஸாக எதுவும் தெரியலை,” என்று சொன்ன டாக்டரை நம்பிக்கையில்லாமல் பார்த்தான் சிவா..

சிறிது நேரத்தில் காமினிக்கு சுயநினைவு வர
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.


“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


அப்பொழுது அங்கு வந்த அவனுடைய சீனியர் ஆபிஸர்,


“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
”சார் நீங்களா,”என்ற சிவாவை எதிர்பார்க்கவில்லை பரந்தாமன்.

“ஆமாம்,இவ எனக்கு உறவுப்பெண், அவளை விடு,துப்பாக்கியை எடு,”என்றார்.

"என்ன ஆச்சு ,ஏனம்மா அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறாய்?" என்று பதறினார்,பரந்தாமன்.


"மாமா விபரம் பிறகு சொல்கிறேன்,

“நான் இரயிலில் கண்டெடுத்த டைமண்டை இரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்க சென்றிருந்தேன்,அப்ப அவங்க என்னை அமர சொல்லிவிட்டு, ரகசியமாய் அவர்கள் இந்த டைமண்டை அடிக்க திட்டமிட்டார்கள்”.
“நான் எப்படியோ தப்பித்து வந்து விட்டேன் , உடனே உங்களுக்கு போன் செய்தேன்,
நீங்கள் சொன்னபடி டைமண்டை உங்களிடமே சேர்ப்பித்து விட்டேன். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாம்,அரசாங்கம் முறைப்படி நடவடிக்கை எடுக்கட்டும்.”என்றாள் காமினி.

“இதுதானா சங்கதி,நானும் இந்த பெண் ஏன் மர்மமாக மறைந்து விட்டாள்,என்று தவறாக நினைத்து விட்டேன்,”என்றான் சிவா.

ரூமிற்கு திரும்பிய சிவா, தன் அம்மாவிற்கு போன் பேச , “ டேய் சிவா நல்ல படியாய் ஏற்ற வேலையை முடித்து விட்டு வா,வந்ததும் உனக்கு திருமணம் தான்” என்ற அம்மாவிடம், எப்படி சொல்வான் ,காஷ்மீரில் தான் காதலிக்கும் காமினியைப் பற்றி.


--ஆசியா உமர்.

ஓவியம் நன்றி -கூகிள்.
குறிப்பு:

சவால் சிறுகதை போட்டி பற்றிய விபரத்தை பரிசல்காரன் சென்று பார்க்கவும்.இந்தக்கதைக்கு போட்டி முடிவில் அவர்கள் தந்த விமர்சனம் கீழே.காமினி என் காதலி - ஆசியா உமர்
ரயிலில் ஆரம்பிக்கும் கதை லேசாக வேகமெடுப்பதுபோல் தோன்றும்போது போட்டிக்கான முதல் வரி வந்ததுமே டீரெயில் ஆகிவிடுவது போன்ற தோற்றம். மூன்று வரிகளையும் அப்படியே வரிசைக்கிரமமாக எழுதி மேலும் கீழும் கதையை ஒட்டி சாண்ட்விச் செய்யும் முயற்சி அவ்வளவு விறுவிறுப்பை தரவில்லை. சொல்ல வந்திருக்கும் கதை (ரயிலில் டைமண்ட், சேர்க்க முடியாமல் தடைகள்) என்று அழகாக தெரிந்தாலும் அதை சொன்ன விதம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக / விரிவாக இருந்திருக்கலாம். ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங்... என்று வடிவேலு பாணியில் சொல்லலாம்.

நமக்கு இந்த விமர்சனமே பெரிசு. ஆரம்ப எழுத்தாளர் தானே ! தொடர்ந்து எழுதுவோம் ! என்று களத்தில் அசத்தலாய் இறங்க வேண்டியது தான். என்ன சொல்றீங்க.
--ஆசியா உமர்.

28 comments:

Chitra said...

The story is short and sweet. Best wishes to win!

asiya omar said...

thanks chitra.

எம் அப்துல் காதர் said...

ம்ம்ம்...கதையில் அப்படி இப்படி ட்விஸ்ட் வச்சி, காதலை ஊடால நொளைச்சி ; அம்மாடியோவ்.... ஜெயிக்கட்டும் (காதல்) கதை!!

சிநேகிதி said...

அழகான கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அன்னு said...

அடா அடா என்ன சொல்ல, அரைப்பக்கத்துக்கு கதைய வச்சு அதுல அழகா எல்லா மசாலாவும் சேர்த்தும் விட்டாச்சு. இனி என்ன தாளிக்கறதுதேன் பாக்கி. அட, நான் பரிசு வாங்கறதை சொன்னேன்ப்பா.

Mrs.Menagasathia said...

woww very nice story akka!! congrats to win!!

ஸாதிகா said...

கதை அருமை.சட்டென முடித்தாற்போல் உள்ளது.வாழ்த்துக்கள்!

GEETHA ACHAL said...

சூப்பராக அழகாக எழுதி இருக்கின்றிங்க..வாழ்த்துகள்...எங்க இந்த சவால் சிறுகதை போட்டி நடக்குது...

அஹமது இர்ஷாத் said...

கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

asiya omar said...

சகோ.அப்துல் காதர்
சிநேகிதி
அன்னு
மேனகா
ஸாதிகா
கீதா ஆச்சல்
சகோ.அஹமது இர்ஷாத்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

கீதா ஆச்சல் இங்கு சென்று விபரம் பார்க்கவும்.கதையின் முடிவில் குறிப்பிலும் கொடுத்து இருக்கிறேன்.நன்றி.
http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html

Jaleela Kamal said...

அசத்தலாக கதையும் எழுத ஆரம்பிச்சீட்டீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்

சே.குமார் said...

அழகான கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

நீங்களுமா வாழ்த்துக்கள் அக்கா வெற்றி நிச்சயம்.

ஒ.நூருல் அமீன் said...

சமையல் குறிப்பு போலவே உங்கள் கதையும் ப்லவித பரிமாணங்களில் ஜோலிக்கின்றது.

அமைதிச்சாரல் said...

நீங்களும் களத்தில் இறங்கியாச்சா.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

asiya omar said...

ஜலீலா
சே.குமார்
சசிகுமார்
நூருல் அமீன்
அமைதிச்சாரல்

அனைவரின் அன்பான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஜிஜி said...

கதை அருமையாக இருக்கிறது.. வெற்றி பெற வாழ்த்துக்கள்

vanathy said...

அக்கா, கதை நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். சீக்கிரம் முடிஞ்சாப்போல ஒரு ஃபீலிங்.

நாடோடி said...

க‌தை ந‌ல்லா வ‌ந்திருக்கு.. வெற்றிப் பெற‌ வாழ்த்துக்க‌ள்.

முகிலன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

asiya omar said...

ஜிஜி,
வானதி,
முகிலன்
ஸ்டீபன்
கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Kanchana Radhakrishnan said...

கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

aru(su)vai-raj said...

கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்

asiya omar said...

காஞ்சனா மிக்க நன்றி.

asiya omar said...

அறு(சு)வை ராஜ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாக்கா கதை ரொம்ப நல்லாருக்கு.. வெற்றி பெற வாழ்த்துகள்.

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html