Friday, September 24, 2010

வாழைப்பூ வடை


தமிழ்குடும்பத்தை


வாழைப்பூ வடை  படங்களுடன் குறிப்பைக் காண  தமிழ்குடும்பத்தைக் கிளிக் செய்யவும்.
உங்களுக்காக குறிப்பு மட்டும் இங்கே.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூவில்  - பாதி எடுத்து கொள்ளவும்
கடலை பருப்பு - ஒரு கைபிடி
துவரம் பருப்பு - ஒரு கைபிடி
உளுந்து - ஒரு கைபிடி
பச்சை மிள்காய் - 1
மல்லி இலை - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
பட்டை - மிகச்சிறிய துண்டு(விரும்பினால்)
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் ,உப்பு - தேவைக்கு

செய்முறை :
1.பருப்பு வகைகளை 1 -2 மணி நேரம்  ஊறவைக்கவும்.
2.
வாழைப்பூவில் பாதி எடுத்து ,அதில் இருக்கும் நரம்பு போன்ற பகுதியும் மெல்லிய கண்ணாடி போன்ற பகுதியும் கழித்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3,நறுக்கியவற்றை மோரில் போட்டு ஊறவைக்கவும்.
4. ஊறிய பருப்பு வகைகளோடு,பச்சை மிள்காய்,இஞ்சி,பூண்டு போட்டு பரபரவென்று வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது.
5.அரைத்த பருப்புடன்  மோரில் ஊறிய வாழைப்பூவை நன்கு பிழிந்து சேர்க்கவும்,அத்துடன் நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,சோம்புத்தூள் ,தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்,விரும்பினால் பெருங்காயம் 2 பின்ச் சேர்க்கவும்.
6.அத்தனையும் கலந்து வடைகளாக தட்டி வைக்கவும்.தண்ணீர் இல்லாமல் மாவு சிக்கென்று இருக்க வேண்டும்.

7.
அடுப்பில் வாணலியில் எண்ணெய்  வைத்து காய்ந்ததும் தட்டிய வடை போடவும் அது தானாக வெந்து மேலெழும்பி வரும் ,திருப்பி விடவும். சிவற நிதானமாக பொரித்து எடுக்கவும்.
  சுவையான சத்தான வாழைப்பூ வடை ரெடி.
 
இதனை ஸ்நாக்காகவும் சாப்பிடலாம், சாத வகைகளுடன் தொட்டும் சாப்பிடலாம்.வாழைப்பூவை நறுக்கிய பின்பு தண்ணீரில் அலசி பின்பு மோரில் போட்டால் வாழைப்பூவை பிழிந்து வடைக்கு எடுத்து விட்டு விருப்பமானால் அந்த மோரை குடிக்கலாம்,வாழைப்பூவின் துவர்ப்பு அந்த மோரில் இறங்கி இருக்கும்.
  
--ஆசியா உமர்.





24 comments:

Nithu Bala said...

Vadai looks really delicious... My mom makes this often..

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் சூப்பரா நல்லா மொறுமொறுன்னு இருக்கு...

எம் அப்துல் காதர் said...

நான் தான் 1 st என்று வந்தா வாடா போச்சா. சரி சட்னியாவது ??

Chitra said...

மொறு மொறுனு பார்க்கவே சூப்பரா இருக்குதுங்க..... ம்ம்ம்..... எங்க ஊர்லே வாழைப்பூ தான் கிடைக்காது..... அதெல்லாம் பெரிய நகரங்களில் இருக்கும் இந்தியன் கடைகளில் தான். :-(

LK said...

நல்லது

ஜிஜி said...

சத்தான உணவு..அருமையாகவும் இருக்கு...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

அமைதிச்சாரல் said...

நல்லதொரு குறிப்பு..

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த வடை...டாப் டக்கர்...

சசிகுமார் said...

என்ன அக்கா ஒரே போட்டி மயமாகவே இருக்கு அனைத்து போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நாடோடி said...

எங்க‌ள் வீட்டில் அடிக்க‌டி செய்வார்க‌ள்.. :)

jagadeesh said...

மிக மிக அருமை அக்கா!.

angelin said...

asiya yummy and delicious recipe .we do get this in uk ,i would like to know why it tastes bitter when i cook.

ஸாதிகா said...

ம்ம்..ஒரு நாள் செய்திடுவோம்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அட..வட,,,வாழைப்பூவுல..நாளைக்கேசெஞ்சு.. சாப்பிட்டு பார்த்துடணும்...

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
asiya omar said...

நிதுபாலா உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

மேனகா
அப்துல் காதர்
எல்.கே
ஜிஜி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

சித்ரா
புவனேஸ்வரி
அமைதிச்சாரல்
கீதா ஆச்சல்
சசிகுமார்
ஸ்டீபன்
ஜெகதீஸ்
ஏங்சலின்
ஸாதிகா

வருகைக்கு மிக்க நன்றி .மகிழ்ச்சி.

asiya omar said...

சதீஸ்குமார் உங்கள் முதல் வருகைக்கு நன்றி ,மகிழ்ச்சி.

asiya omar said...

ஜெய்லானி நீண்ட நாள் கழித்து வந்திருக்கீங்க.மகிழ்ச்சி.

Mano Saminathan said...

வாழைப்பூ வடை அருமை! சாப்பிடத்தூண்டும் மொறுமொறுப்பு!!

asiya omar said...

நன்றி மனோ அக்கா.வருகைக்கு மகிழ்ச்சி.

Kanchana Radhakrishnan said...

மொறு மொறுனு பார்க்கவே நல்லாயிருக்கு.