Saturday, September 25, 2010

பதிவுலகில் நான்

மனோ அக்காவின் அன்பான அழைப்பு மிக்க மகிழ்ச்சியை தந்தது.எல்லோரும் எழுதி முடித்துவிட்ட நிலையில் நானும் எழுதவேண்டுமே !


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆசியா உமர் தான்.


2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
என் உண்மையான பெயரே அது தான்.ஆசியாமான்னு எல்லாரும் பிரியமாக கூப்பிட்டாலும்,திருமணத்திற்கு பின்பு என் கணவர் பெயரையும் சேர்த்து எழுதுவதால் அந்த பெயருக்கே ஒரு அழகும்,கம்பீரமும் வந்ததை உணர்கிறேன்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

வலைப்பூ ஆரம்பித்தது என்னவோ இந்த வருடம் பிப்ரவரியில் தான்.ஆனால் நான் என் எழுத்துக்களை பகிர ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.முதலில் அறுசுவை தளம் பற்றி தெரியவந்தது.அங்குள்ள பழகிய தோழி ஒருவர் சொன்னதில் தமிழ்குடும்பமும் அறிமுகமானது.முதலில் நான் தமிழ்குடும்பத்தில் zaru என்ற பெயரில் டிப்ஸ் கொடுத்து வந்தேன்,என்னுயிர்க் குழந்தைகளின் முதல் எழுத்துக்கள்.அதன் பின்பு சிறிது சிறிதாக என் எழுத்து திறமையை வளர்த்து கொண்டேன்.அடுத்து இருதளங்களிலும் குறிப்பு கொடுத்து வந்தேன். என் இயற்பெயரான ஆசியா உமர் என்ற பெயரிலேயே அறிமுகமாக, என் கணவர் சொன்னதால் அந்த பெயரில் பிறதளங்களில் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன். அறுசுவையில் பெரிய தோழியர் கூட்டமே அமைந்தது.அது ஒரு அழகான வசந்த காலம்.இப்ப அந்த தோழியரில் பலர் வலைப்பூவில் பழகி வருவது பெரிய மகிழ்ச்சி.அவர்களின் துணையோடு இந்த வலைப்பூ ஆரம்பித்து ஏதோ நேரம் போகிறது.


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலம் அடைந்து விட்டதான்னு தெரியலை,நான் நேரம் கிடைக்கும் பொழுது மற்ற ப்ளாக்குகள் சென்று மற்றவர்கள் இடுகை படித்து கருத்து சொல்வது வழக்கம்.


5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
பகிர்ந்து கொண்டதுண்டு.பகிர்வதால் மனதிற்கு நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ப்ளாக் ஆரம்பித்த பின்பு ப்ளாக் தான் என் முதல் தோழி.


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இதுவரை பொழுதுபோக்கிற்காகத் தான் எழுதுகிறேன். பல நாடுகளில் வசிக்கும் நம் மக்களின் நட்பு கிடைத்து இருப்பதே பெரிய சம்பாத்தியம் தானே.


7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒண்ணே ஓண்ணு, கண்ணே கண்ணு.இதற்கே தினமும் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை செலவழிப்பதாய் எங்க வீட்டில் கணக்கிட்டு சொல்றாங்க.இன்னொன்னு ஆரம்பித்தால் வீட்டை யார் கவனிப்பது?8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
நிச்சயமாக இல்லை.அவரவர் திறமைக்கு தகுந்தபடி பதிவுகள் கொடுக்கிறோம்.நிறைய கற்று கொண்டது தான் உண்மை.,ஆனால் ஒரு சிலர், பிறரை சீண்டி எழுதி அதனில் மனநிறைவு காண்பது மட்டும் பிடிக்காது, அந்த மாதிரி ப்ளாக் பக்கம் பழகியவராக இருந்தாலும் எட்டிப் பார்ப்பதில்லை.


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
என் அன்புக்கணவர் தான்.நான் ஒரு வருட காலம் ஊரில் இருந்த சமயம் ப்ளாக் ஆரம்பித்தேன்,அவரிடம் மெயில் மூலம் தெரிவித்தேன்.அவர் தான் முதல் பாராட்டு தெரிவித்தவர்.
அறுசுவை,தமிழ் குடும்பம்,பதிவுலகம் மூலம் பழகிய நெருங்கிய அனைத்து அன்பான தோழிகள்,அருமைச் சகோதரர்கள் அனைவரின் பாராட்டுமே எனக்கு பக்கபலம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தோழிகளிடம், ப்ளாக் குறித்து எந்தவொரு சந்தேகம் கேட்டாலும் உடன் உதவி வருவது, ரொம்ப சந்தோஷமான விஷயம்.


10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என் பளாக்கிலேயே அங்கங்கு படம் பிடிச்சி காட்டியிருக்கேனே.புதுசாக இனி சொல்ல என்ன இருக்கு.
சமையல் குறித்து ப்ளாக் இருப்பதால் என்னை பெரிய சமையல் கில்லாடி என்றெல்லாம் யாரும் நினைத்து விடாதீர்கள். தினமும் சமைப்பதை படம் பிடித்து போடுகிறேன். மற்றும் என் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்காவது அது பயன்பட்டால் அதுவே பெரிய மகிழ்ச்சி.இதனை தொடர நான் அன்பாக அழைப்பது

புவனேஸ்வரி(மரகதம்)
கீதா ஆச்சல்
அன்னு


--ஆசியா உமர்.

21 comments:

LK said...

உங்கள் குறிப்புகளைப் போலவே மிக சிம்பிளாக இருந்தது உங்க பதில்களும்
//ஆனால் ஒரு சிலர், பிறரை சீண்டி எழுதி அதனில் மனநிறைவு காண்பது மட்டும் பிடிக்காது, அந்த மாதிரி ப்ளாக் பக்கம் பழகியவராக இருந்தாலும் எட்டிப் பார்ப்பதில்லை.
///

நல்லது

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகான பகிர்வு. ரொம்ப நல்லாயிருக்கு. என்னை நினைவில் வைத்து தொடர அழைத்த உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

உங்களுக்கே உரித்தான எளிய நடையில் பதிவு அருமை தோழி!

jagadeesh said...

நீங்க பதிவுலகம் ஆரம்பித்ததால் தான் எனக்கும் ஒரு அக்கா கிடைச்சாங்க.

எம் அப்துல் காதர் said...

டீச்சரே கேள்விக்கு பதில் சொன்னா எப்படி இருக்குமோ அப்படி?? நன்று! நன்று!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஒரு சிலர், பிறரை சீண்டி எழுதி அதனில் மனநிறைவு காண்பது மட்டும் பிடிக்காது, அந்த மாதிரி ப்ளாக் பக்கம் பழகியவராக இருந்தாலும் எட்டிப் பார்ப்பதில்லை..//

அருமைடா ஆசியா..:))

நாடோடி said...

உங்க‌ளை ப‌ற்றிய‌ ப‌கிர்வு அருமை ச‌கோ..

asiya omar said...

எல்.கே நல்லது.

புவனா மிக்க மகிழ்ச்சி.

தோழி ஸாதிகா மிக்க மகிழ்ச்சி.

ஜெகதீஸ் மிக்க மகிழ்ச்சி.உங்களுக்காக புளிக்குழம்பு செய்தேன்.

அப்துல் காதர் டீச்சர் பதில்கள் போல் உள்ளதா?2 வருடம் அபுதாபியில் டீச்சராக இருந்த அனுபவம் இருக்கு.

தேனக்கா வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸ்டீபன் மிக்க நன்றி.

மின்மினி RS said...

அருமையான பதில்கள் ஆசியாக்கா..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப அருமையா யதார்த்தமான பதில்கள். மேலும் மேலும் வலையுலகில் பிரகாசிக்க என் அன்பு வாழ்த்துகள்.

Riyas said...

MMMMM GOOOD.... CONTINUE

vanathy said...

அக்கா, சூப்பர் பதில்கள். எப்படி இப்படி நிறைய சமையல் குறிப்புகள் குடுக்கிறீங்கன்னு ஆச்சரியப்படுவது உண்டு. இன்னும் வளர வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

ஜுப்பருங்க.. உங்களைப்பற்றிய பகிர்வு :-)

அன்னு said...

ஆஸியாக்கா,
நம்மளையும் ஒரு ஆளா மதிச்சு கூப்பிட்டிருக்கீங்களே...அதை நினச்சாலே அழுவாச்சி அழுவாச்சியா வருது(ஆனந்தக் கண்ணீர்தேன்!!). ரெம்ப சந்தோசமுங்!!

Chitra said...

அருமையான பதில்கள் மூலம், அசத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

ஆசியா! பகிர்வு எளிமையாக, தெளிவாக, அருமையாக உள்ளது.

asiya omar said...

மின்மினி
ஸ்டார்ஜன்
ரியாஸ்
வானதி
அமைதிச்சாரல்
அன்னு
சித்ரா
மனோ அக்கா

உங்களின் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

சே.குமார் said...

உங்கள் குறிப்புகளைப் போலவே உங்கள் பதில்களும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது அக்கா.

asiya omar said...

கருத்திற்கு நன்றி குமார்.

Mahi said...

அழகா சொல்லிருக்கீங்க ஆசியாக்கா!

அஹமது இர்ஷாத் said...

சிறப்பான பதில்கள்.. அதில் 6 வது கேள்விக்கு பதில் டாப்பு..