Sunday, September 26, 2010

வெண்டைக்காய் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - கால் கிலோ
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கருவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு

வெண்டைக்காய் கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டுகளாய் நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து வைக்கவும்.புளி கரைத்து வைக்கவும்.
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்,அருமையான மணம் வரும்.

நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய வெண்டைக்காய்,சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்,வெண்டைக்காய் வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்

மசாலா வாடை அடங்கியதும் புளிக்கரைசல் விட்டு கொதிக்க விடவும்.

தனியே வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்க்கவும்.

வெண்டைக்காய் சேர்த்து நன்கு கொதிவரும், மூடி போட்டு 5 நிமிடம் மீடியம் நெருப்பில் வைக்கவும்.

பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்,குழம்பு கெட்டி தன்மைக்கு தகுந்தபடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்,உப்பு சரிபார்க்கவும்.சிம்மில் வைத்து தேங்காய் வாடை மடங்கி அடுப்பை அணைக்கவும்.விரும்பினால் ஒரு டேபிள்ஸ்பூன் நல்ல எண்ணெயில் இரண்டு வற்றல் சிவற வறுத்து கொட்டவும்.
சூப்பர் சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி.இதனை சாதத்தில் விட்டும் சாப்பிடலாம்,தொட்டும் சாப்பிடலாம்,இட்லி,தோசை
சப்பாத்திக்கு கூட பொருத்தமாக இருக்கும்.


-ஆசியா உமர்.

28 comments:

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

Super

சிநேகிதி said...

ருசியோ ருசி

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்களை பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது. எனக்கு மிகவும் பிடித்தது.

எம் அப்துல் காதர் said...

இதை பிரியாணிக்கி வச்சு கொஞ்சம் தொட்டுகிட்டா ...!!!

jagadeesh said...

மிக்க நன்றி அக்கா. நிச்சயம் செய்து சாப்பிட்டு பார்க்கிறோம். ஆனால், வருங்காலத்தில், என் மனைவி சமைத்துப் போட்டால், நான் ஒரு டயலாக் விடுவேன்" என்ன இருந்தாலும், அக்கா கைபக்குவமே தனி".

vanathy said...

அக்கா, நல்ல ரெசிப்பி. படங்கள் அருமையா இருக்கு.

asiya omar said...

செஃப் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

சிநேகிதி மிக்க நன்றி.
புவனா மிக்க நன்றி.செய்து பாருங்கபா.

asiya omar said...

அப்துல் காதர் எப்பவும் பிரியாணிக்கு தால்ச்சா,எண்ணெய் கத்திரிக்காய் தானே சாப்பிடுறோம்.மாற்றுக்கு புளிவெண்டைக்காய் கூட சாப்பிடலாம் போல.

asiya omar said...

வானதி எப்பவும் உங்கள் அன்பான பாராட்டு என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது.

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ளுட‌ன் குழ‌ம்பு சூப்ப‌ரா இருக்கு.

சசிகுமார் said...

அன்றாட வாழ்வில் செய்வதை போன்று எளிமையான குறிப்புகளை கொடுத்து உதவுகின்ற நம்ம ஆசியா அக்காவுக்கு நன்றிகள் பல.

தியாவின் பேனா said...

நல்ல ருசி

asiya omar said...

ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சசிகுமார் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.குறிப்பிற்காக சமைப்பதில்லை,வீட்டில் சமைப்பதையே குறிப்பாக கொடுக்கிறேன் தம்பி.

ஜிஜி said...

குழ‌ம்பு சூப்ப‌ரா இருக்கு.படங்களை பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது.

ஷேக்பாஷா said...

உங்கள் சமையல் குறிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது.


http://kuwaittamils.blogspot.com/2010/09/kuwait.html

asiya omar said...

ஜிஜி வருகைக்கும் கருத்தீர்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஷேக் பாஷா உங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் அக்கா..இதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட ஆஹா என்ன ருசி...

asiya omar said...

மேனகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

asiya omar said...

தம்பி ஜெகதீஸ் நீங்க கேட்டதினால் தான் நேற்று புளிக்குழம்பு வைத்தேன்.கருத்திற்கு மகிழ்ச்சி.

ஹர்ஷினி அம்மா said...

படம் பார்த்தாலே சாப்பிலாம் போல இருக்கு அக்கா....நான் இதுவரை தேங்காய்பால் சேர்த்தது இல்லை முறச்சிக்கனும். :-)

asiya omar said...

ஹர்ஷினிஅம்மா உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.தேங்காய்ப்பால் இல்லை,தேங்காய்,பொட்டுக்கடலை சிறிது சேர்த்து அரைத்த விழுது தான் சேர்த்தேன்.

Mahi said...

சூப்பரா இருக்கு வெண்டைக்காய் புளிக்குழம்பு! :P:P

Jaleela Kamal said...

நல்ல இருக்கு,
ஆசியா நாம் பிரியாணிக்கு எண்ணை கத்திரிக்காய் தான், ஆனால் நிறைய பேர். இது போ வெண்டைக்காய், மற்றும் தக்காளி சட்னி தொட்டு சாப்பிடுவார்கள்.

Kanchana Radhakrishnan said...

படங்கள் அருமையா இருக்கு.

Ananthi said...

வெண்டைக்காய் புளிகுழம்பு... பார்க்கவே அருமையா இருக்கே...
கண்டிப்பா செய்து பார்கிறேன்.. :-)) நன்றிங்க..

ஸ்டெப்-பை-ஸ்டெப் படங்கள் உண்மையில் அருமை..

asiya omar said...

மகி
ஜலீலா
காஞ்சனா
ஆனந்தி
உங்கள் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.